Monday, March 31, 2014

லேப் - டாப்பை பிரித்து பொருத்திய நான்காம் வகுப்பு மாணவிக்கு டாக்டர் பட்டம்

வாழ்துவோம் வாருங்கள்....
லேப் - டாப்பை பிரித்து பொருத்திய நான்காம் வகுப்பு மாணவிக்கு டாக்டர் பட்டம்
கோவை: லேப் - டாப்பை பிரித்து பொருத்திய, கோவை தனியார் பள்ளி நான்காம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், 'வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை' டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.
கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய, 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இம்மாணவி, லேப் - டாப்பை, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
ஆதர்ஷினி கூறியதாவது:லேப் - டாப்பை தனித்தனியே பிரித்து மீண்டும் பொருத்த, 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன். இதை செய்து காண்பித்ததற்காக, கடந்தாண்டு, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம்பிடித்தேன். இவற்றின் வாயிலாக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, மார்ச் 22ல், டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

The Art of Doing Nothing, Part Two - Chess.com

The Art of Doing Nothing, Part Two - Chess.com

The Art of Doing Nothing - Chess.com

The Art of Doing Nothing - Chess.com