Tuesday, May 20, 2014

திகைக்க வைக்கும் திருவோடு மரம்!


Posted Date : 16:09 (17/05/2014)Last updated : 13:41 (19/05/2014)
வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.
இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. சரி... இந்த திருவோடு  எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியுமா? அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.    
இந்த மரம் ‘மெக்ஸிகன் காலாபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பிக்கோனியசேஸி’ என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையுள்ள பகுதிகள்.
இந்தியாவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஸ்ரீகாந்த்  இங்கல்ஹலிகர்,   மலர்களின் பல்வகை பெருக்கத்திற்காக ‘மெக்ஸிகன் காலாபேஷ்' மரத்தை வளர்க்க ஆரம்பித்தார். புனேவில் உள்ள 'ஆந்த்' என்னுமிடத்தில் இப்போது அது மரமாக வளர்ந்து நிற்கிறது.அத்துடன் பல்வேறு மடங்களிலும் இதனை வளர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் இந்த மரத்தின் அறிமுகம் பற்றி பேசிய இங்கல்ஹலிகார், "முக்தா கிர்லோஸ்கர் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தார். பிறகு அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு 500 வகையான தாவர இனங்களோடு சேர்த்து புனேவில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டது.
பூக்கள்
இதுவொரு சிறிய மரம். 8 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இந்த மரம் பெரிய மலர்களை தண்டு மற்றும்கிளைகளுக்கு அடிப்பகுதியில் கொண்டது. மாலை நேரத்தில் பூக்கள் பூத்து, நறுமணத்தை வீசும் தன்மை கொண்டது. இந்த வாசனைக்கு சிறிய வகை வௌவால்கள் வந்து, இந்த மலர்களிலிருந்து தேன் எடுத்து பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகிறது.
மலரின் அமைப்பு, அளவு, நிறம், மணம், பூக்கும் நேரம் மற்றும் தேனை உமிழும் தன்மை ஆகியவற்றால் வௌவால்களை கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மை இந்த பூக்களுக்கு உண்டு. அதிக நறுமணமுள்ள தேனை பூக்களிலிருந்து உமிழ்வதால், வெளவால்களின் கோடை கால தாகத்தை தீர்க்கும் தன்மை இம்மரத்தின் பூக்களுக்கு உண்டு.
ஓடு
கடினத்தன்மை வாய்ந்த இந்த மரத்தின் பழங்கள் உடைப்பதற்கு கூட மிகக்கடினமாக இருக்கும். இதன் சுற்றளவு 7-10 செ.மீ. நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களை போன்று தோற்றமுடையது. இந்த பழம் தன்னையே பாதுகாத்து கொள்ளும் குணாதிசயத்தை கொண்டது. இருந்தாலும் மற்ற பழங்களை போன்று நிலத்தில் போட்டால் எளிதாக வளர்ந்துவிடாது. பழத்திற்குள் இருக்கும் விதைகளை (சி-அலாட்டா) குதிரையாலோ அல்லது மனிதர்கள் எவராலுமோ சாதாரணமாக பிரித்தெடுத்துவிட முடியாது. யானையை போன்ற விலங்குகளை வைத்து முயற்சி செய்யலாம்.
விதையை மூடியுள்ள பழத்தோடு நிலத்தில் போடும்போது இது வளராது. கடினத்தன்மை வாய்ந்த ஓடுகளால் இதன் விதைகள் மூடப்பட்டுள்ளதால் காடுகளில் கூட பரந்து வளராமல் போய்விட்டது. அதனாலே இது ஒரு அரிதான மரமாகவும், மாறுபட்ட குணாதிசயத்தோடும் இருந்து வருகின்றன.
மரத்திலிருந்து விழும் இந்த பழங்கள் இருக்கும் இடத்திலிருந்தே முளைக்கும் திறனை இழந்ததால், ஓரிடத்திலிருந்து இன்னொரு பரவுவதும் அரிதாகி போனது. உள்ளூர் குதிரைகள் தன்னுடைய கால் பாதங்களால் இந்த பழத்தை உடைத்து பழத்திலிருக்கும் சதைப்பற்று மற்றும் விதைகளை சாப்பிடும் என்று இதை கவனித்தவர்கள் சொல்கின்றனர். உள்ளூர் குதிரைகளால் இந்த மர இனம் காக்கப்பட்டு நாம் பார்க்கக்கூடிய அளவில் இருந்து வருகிறது.
விதைகள்
இந்த மரம் ஒன்றும் அரிதான ஒன்று அல்ல. பல திறந்தவெளி இடங்கள், புல்வெளிகள், ஆடு, மாடுகள் மேயும் இடங்களில்  பார்த்திருக்கலாம். இதன் காய் மற்றும் பழங்கள் உடைக்கப்பட்டு உணவு, பானங்கள் அடைக்கும் பொருள்களில் மூடியாக பயன்படுத்தப்படுகிறது.
பழத்தின் கெட்டியான ஓடுகள் பிச்சைக்காரர்கள் பயன்படுத்தும் பாத்திரமாகவும் இருந்து வருகிறது. அதனாலேயே இந்த மரம் ‘திருவோடு மரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகளில் காணப்படும் புரதச் சத்தோடு இணைந்த லிக்கோரைஸ், இனிப்புச் சுவை வாய்ந்தது; சாப்பிடுவதற்கு ஏற்றது. ஹோண்டுராஸ், எல்சல்வடார் மற்றும் நிகாரகுவா போன்ற லத்தீன்-அமெரிக்கா நாடுகளில் ‘செமிலா டெ ஜிகாரோ’ என்ற பெயரில் உணவுபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

-த. ஜெயகுமார்    
 

Thursday, May 15, 2014

வியக்க வைக்கும் பிரமிட் !

எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.

எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப்பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிடுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிடுதான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல.  கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.

கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் டன்னாகும். பிரமிடுகள் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை டன்னாகும். மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ… இல்லை… வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)

பிரமிடுகள் கட்டப்பட்ட கற்களின் அளவை இந்தப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்…

பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள். இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.

எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!


கட்டடக் கலை

எகிப்திய நாகரிகம் பல்வேறு துறைகளில் ஜொலித்தது என்றபோதும், அதன் உச்சகட்டத் தனித்துவம் கட்டடக் கலைதான். எகிப்து மக்களுக்குச் செங்கல் தயாரிப்பது கை வந்த கலையாக இருந்தது. நைல் நதியிலிருந்து கிடைத்த களிமண்ணோடு, வைக்கோல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்தார்கள். இந்தக் கலவையைக் கால்களால் மிதித்து, உதைத்து, கலவை தேவையான பதத்துக்கு வந்தவுடன் வார்ப்புகளில் வைத்து, தேவையான வடிவங்கள் ஆக்கினார்கள். இவை வெயிலில் காய வைக்கப்பட்டு செங்கற்கள் ஆயின.


அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள், வீடுகள் ஆகியவை கட்டச் செங்கற்களையும், கோவில்கள், கல்லறைகளுக்குக் கற்களையும் உபயோகப்படுத்துவது வழக்கம்.  கோவில்களிலும், வீடுகளிலும் சுவர்களில் ஓவியங்கள்  தீட்டப்பட்டன, சிற்பங்கள் அழகு கூட்டின.

வீடுகள்

வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டங்களாக இருந்தன. வீடுகளில் கட்டில்கள்,  பெட்டிகள், மேசைகள் போன்ற மரச் சாமான்கள் இருந்தன. பல வீடுகளில், வரவேற்பு அறை, வசிக்கும் அறை, படுக்கை அறைகள், குளியல் அறைகள், உணவு பாதுகாக்கும் அறைகள் எனப் பல அறைகள் இருந்தன.

பணக்காரர்கள் வீடுகளில், இன்னும் அதிகம் வசதிகள், சொகுசுகள். பெரிய, பெரிய அறைகள். வீட்டுக்கு நடுவில் பூச்செடிகள் நிறைந்த பூங்கா, பல குளியல் அறைகள், உள் சுவர்களிலும், உட் கூரைகளிலும் அழகிய ஓவியங்கள், கட்டில்கள், மரப் பெட்டிகளிலும் ஓவியங்கள், வேலைப்பாடுகள், கலைநயமான மண் பாண்டங்கள், சலவைக் கல் ஜாடிகள், பாத்திரங்கள்.

அரண்மனைகள் தனி நகரங்கள்போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. அரண்மனைக்கு உள்ளேயே கோயில்கள் இருந்தன.

பிரமிட்கள்

எகிப்து என்றவுடன் நம் கண்களின் முன்னால் விரிபவை பிரமிட்கள். சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள்.  ஒரிஜினல் ஏழு உலக அதிசயங்களில், இன்று நாம் காணக் கிடைக்கும் ஒரே அதிசயம் பிரமிட்கள்தாம்.

பிரமிட் என்றால்  கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

பிரமிட்கள் எல்லாமே ஏன் கூம்பு வடிவில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன? வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?


ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.

பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில்  தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல ஆண்டுகள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.

பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடிப்பதில்லை.

இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!

கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.
இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது?

பெரிய பிரமிட்

கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை. இந்தக் கற்களை தூரத்தில் இருக்கும் மலைப் பகுதிகளில் இருந்து எப்படிக் கொண்டு வந்தார்கள்? உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா? ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு.

கோவில்கள்

பெரிய பிரமிட் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம். ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன.

இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும்விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.
ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது.  அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம்  33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. அம்மாடியோவ்!

தொழில்கள் – மீன் பிடித்தல்

விவசாயம்தான் முக்கிய தொழில். பெரும்பாலான மக்கள் மீனை விரும்பி உண்டதால், மீன்களுக்கான தேவை அதிகமானது. பலர் மீன் பிடித்தல், மீன் வியாபாரம் ஆகியவற்றை முழு நேர வேலைகளாகச் செய்யத் தொடங்கினார்கள். நாளாவட்டத்தில் மீன் பிடிக்கும் படகுகளையும் பயன்படுத்தினார்கள்.

சிற்பக் கலை

கோவில்களையும், வீடுகளையும் அற்புதச் சிற்பங்கள் அலங்கரித்தன. கடவுள்களுக்கு மட்டுமல்லாமல், அரசர்கள். பிரமுகர்கள் ஆகியோருக்கும் சிலைகள் வடிப்பது பண்டைய எகிப்து வழக்கம். கல் தச்சர்கள், சிற்பிகள் எனப் பல கலைஞர்களை இந்த வழக்கம் ஊக்குவித்தது. கல்லால் சிற்பங்கள் மட்டுமல்ல, அம்மி, ஆட்டுக்கல் போன்ற சமையல் சாமான்களும் தயாரிக்கப்பட்டன.

களிமண் பொருட்கள் தயாரிப்பு

செங்கற்கள் தயாரித்த முறையில், உணவு சமைக்கும் பாத்திரங்கள், தானியம், எண்ணெய், மாவு, தண்ணீர், ஒயின் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் பெட்டிகள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டன.

பெண்களின் தொழில்கள்  

பெண்கள் வேலை பார்ப்பதைச் சமுதாயம் அனுமதித்தது. பேரிச்சை மர இலை, கோரம்புல் ஆகியவற்றால் பின்னப்பட்ட கூடைகளும் பல அகழ்வு ஆராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. கூடை பின்னுதல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், ஆடைகள் தைத்தல், நகைகள் செய்தல் ஆகிய தொழில்களில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தவர்கள் பெண்களே.

தொழிற்சாலைகள்

எகிப்தில் கிரானைட் கற்கள், பல வித மாணிக்கங்கள், தங்கம், ஈயம், இரும்பு சுண்ணாம்புக் கல், ஆகிய தாதுக்கள் ஆகியவை தாராளமாகக் கிடைத்தன. இவற்றின் அடிப்படையில் பல தொழிற்சாலைகள்  தொடங்கினார்கள். சிமெண்ட் தயாரித்தார்கள். கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பில் அவர்களுக்கு அபாரத் திறமை. கண்ணாடி ஜாடிகள், சிற்பங்கள், நகைகள் ஆகியவை பரவலாக உபயோகத்தில் இருந்தன.

வணிகம்

வணிகம் தழைத்து வளர்ந்தது. சந்தைகள் இருந்தன. அங்கே கல் எடைகள் பயன்படுத்தப்பட்டன.  உணவு தானியங்கள், உற்பத்திப் பொருட்கள், உப்பு, ஆகியவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மரக்கட்டைகள், வாசனைப் பொருட்கள், ஆலிவ் எண்ணெய் ஆகிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தொலைதூர ஆப்கானிஸ்தானிலிருந்து  லாப்பிஸ் வைடூரியங்களை இறக்குமதி செய்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன. பல வியாபாரிகள் இந்த ஏற்றுமதி இறக்குதி வாணிபத்தில் ஈடுபட்டார்கள். உள் நாட்டு வாணிபத்திலும், ஏற்றுமதியிலும் பண்டமாற்று முறைதான் உபயோகத்தில் இருந்தது.


Wednesday, May 14, 2014

கற்க கசடற.... விற்க அதற்குத் தக! - 1



''கல்வியில் மார்க் பார்த்து தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும். மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம் கண்டுபிடிக்க முடியாது என்பது மாத்திரம் அல்லாமல், யோக்கியன்அயோக்கியன் என்பதையும், அறிவாளிமடையன் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை கடுகளவு அறிவு உள்ளவனும் ஒப்புக்கொள்வான்!''
- பெரியார், 16.03.1968, விடுதலை
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விடுவதைக் காட்டிலும் பிள்ளைக்கு எல்.கே.ஜி. சீட் வாங்குவதுதான் இன்றைய தேதிக்கு சவால்!
சிபாரிசு, நன்கொடை, காத்திருப்பு, அவமானம்... என இதன்பொருட்டு எந்தத் துன்பங்களையும் சுமக்க, பெற்றோர்கள் தயார். குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கும்போதே போர்க்களத்துக்குத் தயாராவதைப் போல ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். எந்தப் பள்ளி, எவ்வளவு ஃபீஸ், யாரைப் பிடித்தால் சீட் கிடைக்கும், ஒருவேளை இந்தப் பள்ளியில் சீட் கிடைக்காவிட்டால் வேறு எந்தப் பள்ளியில் சேர்ப்பது என... கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதைவிடவும் அதிகமான விசாரணைகள். மழலை மாறாத மூன்று வயதுக் குழந்தையைப் பள்ளிக்கூடம் அனுப்ப, ஒட்டுமொத்தக் குடும்பமும் சிந்திக்கிறது; உழைக்கிறது. இதுவா, அதுவா, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.சி-யா எனப் பட்டிமன்றம் நடத்துகிறது.
பெற்றோர் சும்மா இருந்தால்கூட சுற்றி இருப்பவர்களும் சொந்தக்காரர்களும் 'என்னாச்சு... பையனை எந்த ஸ்கூல்ல போடப் போறீங்க?’ என்று விசாரிக் கின்றனர்; புத்திமதி சொல்கின்றனர். விளைவு, பள்ளியில் சேர்த்துவிட்ட பிறகு யாராவது, 'அந்த ஸ்கூல் பிரமாதமா இருக்கு!’ என்று வேறு ஒரு பள்ளியைச் சொல்லிவிட்டால், 'தவறு இழைத்துவிட் டோமோ?’ என்று பெற்றோர்கள் குற்றணர்வு அடைகிறார்கள். மொத்தத்தில், பெற்றோரின் சிந்தனை யின் ஒவ்வோர் இழையும் பிள்ளையின் பள்ளிக்கூடத்தைச் சுற்றியே பின்னப்படுகிறது.
''போன பிப்ரவரி மாசம், சென்னை, வளசரவாக்கத்தில் இருக்கிற ஒரு ஸ்கூல்ல என் பையனுக்கு பிரி-கே.ஜி. சீட் கேட்கப் போனேன். 'நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்ததுமே வந்திருக்கணும். அப்பவே எல்லாம் புக் ஆகிடுச்சு’னு சொன்னது, தாங்க முடியாத கொடுமை. என் பையனுக்கு வயசே ரெண்டரைதான் ஆகுது. மூணு வருஷத்துக்கு முன்னாடியே புக் பண்ணணும்னா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிடணும் போல இருக்கு'' என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார் அந்த நண்பர். இதுபோல பெற்றோர்களுக்குப் பல அதிர்ச்சிகள்.
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளி ஒன்றில் தன் இரண்டரை வயது மகளை பிரி-கே.ஜி-யில் சேர்க்க 1.80 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறார் ஒருவர். வெவ்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் மற்ற கட்டணங்களையும் சேர்த்தால், இது இரண்டு லட்ச ரூபாய் ஆகிவிடும்.
இரண்டரை வயதுக் குழந்தையை, பால்வாடிக்கு அனுப்ப இரண்டு லட்சமா?
''இதில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை. அதுக்கு எந்த ரசீதும் கிடையாது. பணத்தைக் கொடுத்ததும் எண்ணிவெச்சுக்குவாங்க, அவ்வளவுதான். என்கிட்ட பணத்தை வாங்கிட்டு, 'கவுன்டர்ல அப்ளிகேஷன் வாங்கிக்கோங்க’னு சொன்னார் ஒருவர். அங்கே போய்க் கேட்டா, 500 ரூபாய் கேட்கிறாங்க. 'இப்பத்தானே உள்ளே ஒரு லட்சம் கொடுத்தேன்’னு சொன்னா, 'அது வேற, இது வேற. அப்ளிகேஷன் விலை 500 ரூபாய்’னு பதில் வருது. சரினு அதையும் கொடுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தா, 'புராசஸிங் ஃபீஸ்’னு சொல்லி இன்னொரு 500 ரூபாய் கேட்கிறாங்க. ஹவுஸிங் லோன் வாங்கும்போதுதான், புராசஸிங் ஃபீஸ் எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ பிள்ளையை ஸ்கூல்ல சேர்க்கவே இந்த நிலைமை'' என்று புலம்புகிறார். பெரும்பாக்கத்தில் உள்ள நான்கைந்து பள்ளிகளில் அதுவே சிறந்தது என்று எல்லோரும் சொல்வதால், அதில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். மீதம் உள்ள 80 ஆயிரம் ரூபாயை இன்னும் ஒரு மாதத்தில் கட்ட வேண்டுமாம்.
எல்லாம் முடிந்த நிலையில் இப்போது பள்ளி நிர்வாகத்திடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'குழந்தைக்கு எல்லா சொட்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளதா? உடல்நிலை, மனநிலை சரியாக உள்ளனவா? ஏதேனும் நோய்கள் இருக்கின்றனவா?’ என்று ஊர்ப்பட்ட கேள்விகள். இவற்றுக்கு எல்லாம் பதில் வாங்கி மருத்துவச்சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். ''இதுல என்ன கொடுமைனா, இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க என் மகளைப் பார்க்கவே இல்லை. ஆளையே பார்க்காம அட்மிஷன் போட்டுட்டாங்க. பணம் மட்டும்தான் அவங்களோட நோக்கம்'' என்று தெள்ளத் தெளிவாகப் பேசும் அவர், பிறகு ஏன் அந்தப் பள்ளியிலேயே கொண்டு சேர்க்கிறார்?
''வேற வழி இல்லைங்க. ஊர்ல எல்லா ஸ்கூலும் இப்படித்தான் இருக்கு. அதுல ஏதோ ஒரு ஸ்கூலைத்தான் நாம செலக்ட் பண்ணணும். 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற சின்ன ஸ்கூல்ல சேர்க்க வேண்டியதுதானே?’னு கேட்கலாம். என்ன பிரச்னைனா, நான் குடியிருக்கிற அப்பார்ட்மென்ட்ல எப்படியும் 30 குழந்தைகள் இருப்பாங்க. பெரும்பாலான குழந்தைகள் அந்த ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. நான் மட்டும் சின்ன ஸ்கூல்ல சேர்த்துவிட்டா, அது என் மகளோட மனசுல தாழ்வுமனப்பான்மையை உருவாக்கிடுமோனு பயமா இருக்கு. எனக்கு என் மகளோட எதிர்காலம்தானேங்க முக்கியம்'' என்கிறார்.
பெற்றோர்களின் இந்த எண்ண ஓட்டம் உண்மைதான் என்றபோதிலும், இதில் குழந்தைகளை மட்டுமே காரணமாகச் சொல்வது முழு உண்மை அல்ல. பெற்றோர்களைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகள் புகழ்பெற்ற பள்ளியில் படிப்பதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இத்தகைய பெயர் வாங்கிய பள்ளியில் படித்தால்தான், தரமான கல்வி கிடைக்கும். அதுதான் குழந்தையின் எதிர்காலத்தை உத்தரவாதப் படுத்தும் என்ற எண்ணம். இரண்டாவது, அத்தகைய பெரிய பள்ளிக்கூடங்களில் தன் பிள்ளை படிப்பதுதான் தங்களுக்குக் கௌரவம். ஒரு பள்ளியை இறுதி செய்வதில் இந்த இரண்டும் பெரும்பங்கு வகிக்கின்றன!
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள டி.ஏ.வி. பள்ளிக்கூடம் இதற்குச் சிறந்த உதாரணம். ஒவ்வோர் ஆண்டும் இங்கு விண்ணப்பப் படிவம் வாங்கும்போது நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் சாலையோர பிளாட்பாரத்தில் நாளிதழ்களை விரித்துப்போட்டு இரவெல்லாம் படுத்திருப்பார்கள். உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அதிகாரிகள், வி.ஐ.பி-கள்... எனப் பலரும் அங்கு 'பெர்த்’ பிடித்திருப்பார்கள்.
கடந்த ஆண்டு ஒரு நள்ளிரவில் அங்கு சென்றபோது, கிட்டத்தட்ட அண்ணாசாலை வரைக்கும் வரிசையாகப் பெற்றோர்கள் படுத்திருந்தார்கள். தற்காலிக டீக்கடைகள்கூட முளைத்திருந்தன. அப்போது, திடீர் என ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. போலீஸைப் பார்த்ததும் மக்கள் கொஞ்சம் பயந்து எழுந்துகொள்ள, ஜீப்பில் இருந்து மஃப்டி உடையில் இறங்கிய இன்ஸ்பெக்டர், அதுவரை அங்கு படுத்திருந்த தன் மனைவியை ஜீப்பில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் படுத்துக்கொண்டார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் சீட் கிடைக்கப்போவது உறுதி அல்ல. வெறுமனே விண்ணப்பப் படிவம் வாங்கவே இவ்வளவு போட்டி.
இப்படி தமிழ்நாடு முழுக்க பல பள்ளிக்கூடங்கள் உள்ளன. பெற்றோர்கள் எப்படியாவது அதில் சீட் வாங்கத் துடிக்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமான அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்துகின்றனர்.
னக்குத் தெரிந்த ஒரு குடும்பம், எட்டாம் வகுப்புப் படித்து முடித்துள்ள தன் மகனை சென்னையின் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, திண்டுக்கல்லில் இருந்து முகப்பேருக்குக் குடிபெயர்ந்து இருக்கிறது. அவர்களுக்கு சென்னையில் வேறு எந்த வேலையும் இல்லை. பார்த்துகொண்டிருந்த வேலையை இதற்காகவே விட்டுவிட்டு, வேறு வேலையில் சேர்ந்திருக்கிறார் அந்தக் குடும்பத் தலைவர். ''பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, இதை எல்லாம் செஞ்சுதான் சார் ஆகணும்'' என்கிறார்.
வேலையை விடுவது, ஊர் மாறுவது மட்டுமா... புகழ்பெற்ற பள்ளிகளில் மகனை/மகளைச் சேர்ப்பதற்காகப் பெற்றோர்கள் செய்யும் 'தியாகத்தின்’ பட்டியல் இன்னமும் நீளும்!
பள்ளிக்கூடத்துக்கு அருகே வீடு மாற்றுவது, நகைகளை அடமானம் வைப்பது, சொத்துகளை விற்பது, ஊரே கழுவி ஊற்றும் ஊழல்வாதியாக இருந்தாலும் மானம் மரியாதை பார்க்காமல் சிபாரிசுக் கடிதம் வாங்க அலைவது, பணத்தையும் பிடுங்கிக்கொண்டு தடித்தனமாகப் பேசும் பள்ளி நிர்வாகத்தை எதிர்க்க முடியாத இயலாமை, நெருங்கிய சொந்தங்களின் திருமணத்துக்குக்கூட குடும்பத்துடன் செல்ல முடியாத கொடுமை, இவற்றின் பலனாக நிம்மதி இழந்து, தூக்கம் கெட்டுப் பரிதவிப்பது... என்று பெற்றோர்களின் 'தியாகம்’ பெரியது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்தத் துன்பங்களை ஏற்கின்றனர். ஆனால், இந்தத் தியாகத்தின் பயனாளிகள் யார்?
''நம்ம வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சு. பசங்களாவது நல்லா இருக்கட்டும்'' என்ற ஏக்கம்தான் எல்லாவற்றுக்குமான அடிப்படை. அவர்கள் தங்கள் தலைமுறையின் வளர்ச்சியை, தான் நிற்கும் இடத்தில் இருந்து ஓர் அடியேனும் முன் நகர்த்த நினைக்கின்றனர். சிலர், நான்கு தலைமுறை முன்னேற்றத்தை ஒரே தாவலில் கடந்துவிட முயற்சிக்கின்றனர். தன் முதுகுக்கு இந்தப் பாரம் அதிகம் என்று தெரிந்தாலும் சுமப்பது அதனால்தான். அந்த அன்பில் பழுது ஏதும் இல்லை. ஆனால், இந்தக் கண்மூடித்தன மான அன்புதான், கல்வியின் பெயரால் பெற்றோர்கள் சுரண்டப்படுவதற்கான அடிப்படை.
உயிருக்குப் போராடும் ஒருவரை, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். எப்படியாவது காப்பாத்திடுங்க’ என்று சொல்லிச் சேர்க்கும்போது, நிபந்தனையற்று நம்மைச் சுரண்டும் உரிமையையும் சேர்த்தே வழங்கிவிடுகிறோம். 'என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருந்தா போதும்’ என்று எண்ணி, புகழ்பெற்ற தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும்போதும் இதுதான் நடக்கிறது.
அவர்கள், ரத்தமும் சதையுமான உங்கள் பிள்ளையை, பணம் காய்க்கும் இயந்திரமாகப் பார்க்கிறார்கள். ஒரு பள்ளியில் எல்.கே.ஜி-க்கு 50 ஆயிரம் கட்டணம் வாங்குகின்றனர் என்று வையுங்கள். ஒரு செக்ஷனுக்கு 50 பேர் என்றால் நான்கு செக்ஷன்களுக்கு 200 பேர். மொத்தம் ஒரு கோடி ரூபாய். அப்படியே ஒவ்வொரு வகுப்பறையாகக் கணக்கிட்டால், இந்தத் தொகையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். புற்றீசல் போல பல்கிப் பெருகியிருக்கும் தனியார் பள்ளிகளின் ஒரே இலக்கு, இந்தப் பணம்தான். அதே நேரம், அவர்கள் தங்களுக்குச் சந்தையில் டிமாண்ட் இருப்பது போன்ற தோற்றத்தையும் தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ''அஞ்சு சீட்தான் இருக்கு'' என்று உள்ளே வரும் ஒவ்வொரு பெற்றோரிடமும் சொல்கிறார்கள். விளைவு... ஐந்தில் ஒன்றைப் பெற்றிட பெற்றோர்கள் துடிக்கின்றனர்.
இன்று, தமிழ்நாட்டில் மட்டும் 3,890 மெட்ரிக் பள்ளிகளும், 499 சி.பி.எஸ்.சி. பள்ளிகளும் இருக்கின்றன. பளபளக்கும் பிரமாண்ட கட்டடங்களைக்கொண்டிருப்பவை மட்டுமல்ல; தெருமுக்கில் நான்கு கிரவுண்டு இடத்தில் நடத்தப்படும் பள்ளியும் இதில் அடக்கம். எதுவாக இருந்தாலும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம் என்று அதிகரித்துக் கொண்டே போகிறது.
10 ஆயிரம் சம்பாதிப்பவர், கடன் வாங்கி தன் பிள்ளையை 50 ஆயிரம் ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், 20 ஆயிரம் சம்பாதிப்பவர் ஒரு லட்ச ரூபாய் பள்ளியில் சேர்க்கிறார். தொகை அதிகரிக்க... அதிகரிக்க, தங்கள் கௌரவத்தின் படிநிலை உயர்வதாகவும், குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்பு உத்தரவாதப்படுவதாகவும் பெற்றோர்கள் கருதுகின்றனர். ஆனால், '10 ஆயிரம் ரூபாய் ஸ்கூல், 30 ஆயிரம் ரூபாய் ஸ்கூல்’ என்று பள்ளிக்கூடங்களைப் பணத்தை வைத்து பாகுபடுத்துவதன் மூலம், சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை என்று பதிந்துபோகிறது.
ஒரு தெருவில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள், அதில் 4 பேர் பணக்காரப் பள்ளியிலும், 4 பேர் ஓரளவு பணக்காரப் பள்ளியிலும், 2 பேர் அரசுப் பள்ளியிலும் படிக்கிறார்கள் என்றால்... அந்த 10 குழந்தைகளின் நட்பு எப்படி சம இயல்புள்ளதாக இருக்கும்? பள்ளியில் ஏழை நண்பன், தெருவில் பணக்கார நண்பன் என்ற முரண்பாடு, அவர்களுக்குப் பயிற்றுவிப்பது என்ன? ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் மிகவும் சாதாரணமானவை என எண்ணத் தொடங்குகிறார்கள். இது கல்வியுடன் மட்டும் முடியாமல் உணவில், உடையில், பயன்படுத்தும் பொருள்களில், வாகனங்களில்... என அனைத்து வேறுபாடுகளிலும் நீள்கிறது.
சாதி வேற்றுமைகூட அவர்களுக்குத் துருத்தலாகத் தெரியவில்லை. அதையும் ஓர் இயல்பு போல ஏற்றுக்கொள்கின்றனர். நாகரிகத்தை வளர்க்கவேண்டிய கல்வி, அநாகரிகத்தையும், சமத்துவத்தை உருவாக்க வேண்டிய கல்வி, பாகுபாட்டையும் வளர்ப்பது இவ்வாறுதான். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த அநீதியான கல்விக்கு அடிப்படையாக இருப்பது எது?
- பாடம் படிப்போம்

Tuesday, May 13, 2014

பொற்கோயில் ரணகளமான சோகக் கதை...

Posted Date : 18:18 (11/04/2014)Last updated : 17:31 (25/04/2014)
(ஜூனியர் விகடன்: 20.6.84)
பஞ்சாப் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு முதலில் சீக்கியர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முகலாயர்கள் படையெடுப்பின் காரணமாக இந்து மதத்தின் மீது நேர்ந்த தாக்கங்களின் ஒரு விளைவு சீக்கிய மதம். 'இந்து என்று யாரும் இல்லை. முஸ்லிம் என்று யாருமில்லை. கடவுள் ஒருவரே’ என்று சொல்லி சீக்கிய மதத்தைத் துவக்கி வைத்தார் குருநானக். முகலாயர்கள் ஆட்சியில் நிறைய துன்புறுத்தப்பட்டது இந்து மதம். ஒளரங்கசீப் செய்த அக்கிரமங்களைப் பொறுக்க முடியாமல், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக ஏற்பட்ட இந்த மதத்தை, போர்க்குணம் கொண்ட அமைப்பாக மாற்றி அமைத்தார் பத்தாவது குரு கோவிந்த்சிங், அவருடைய நெருக்கமான ஐந்து சீடர்களை அழைத்தார். இரும்புப் பாத்திரத்தில் சர்க்கரைத் தண்ணீர் எடுத்து கத்தியால் ஒரு கலக்குக் கலக்கி, அவர்கள் தலையில் தெளித்தார். அந்தத் தண்ணீரை (அமிர்தம்) குடிக்கச் சொன்னார். அவர்கள் புனிதமடைந்தார்கள். இனிமேல் அவர்கள் பெயர்கள் 'சிங்’ (சிங்கம்) என்று முடியும். அவர்கள் தலையையோ, முகத்தையோ மழிக்க மாட்டார்கள். தலையில் ஒரு இரும்புச் சீப்பைச் சொருகிக் கொள்வார்கள். கையில் ஒரு இரும்பு வளை அணிவார்கள், இடுப்பில் எப்போதும் ஒரு சிறு கத்தி வைத்திருக்க வேண்டும்.
இது குரு கோவிந்த்சிங் இட்ட கட்டளை,  எத்தனை கூட்டத்திலும் சீக்கியர்கள் தனித்துத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அவர் விதித்த அடையாளங்கள் இவை.
இந்த 'அடையாளத்திற்காக’த்தான் (Identity) சீக்கியர்கள் முதலில் போராட ஆரம்பித்தார்கள். நம்முடைய அரசியல் சட்டம் சீக்கியர்களைத் தனி மதமாகவே கண்டு கொள்ளவில்லை. இன்று வரைக்கும், 'இந்துத் திருமணச் சட்டம்’ தான் அவர்களுக்கும். 'இந்து சொத்து உரிமைச் சட்டம்’தான் அவர்களுக்கும்.
சீக்கியர்களையும் இந்துக்களாகவே கணக்கில் எடுத்துக் கொண்டதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. முஸ்லிம் லீக்கின் கோரிக்கைக்கு ஏற்ப பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுப்பது என்று தீர்மானம் ஆன சமயத்தில், சீக்கியர்கள் கர்தார் சிங் என்பவர் தலைமையில் 'சீக்கிஸ்தான்’ வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எழுப்பினார்கள். மவுண்ட்பேட்டன் தனது நாட்குறிப்பில் (மே ஐந்தாம் தேதி 1947) எழுதுகிறார்; 'சீக்கியர்கள், இந்துஸ்தானத்தோடு இருக்க வேண்டுமா அல்லது பாகிஸ்தானோடு இருக்க வேண்டுமா என்பதில் நான் தன்னிச்சையாக அவசரப்பட்டு முடிவு எடுத்து விடக்கூடாது என்று கேட்டுக் கொள்வதற்காக ஒரு பிரதிநிதிக் குழு இன்று என்னைச் சந்தித்தது’.
இந்த அபாயத்தை தவிர்க்கவேண்டும் என்பதற்காக படேலும் நேருவும் இந்திய அரசியல் சட்டத்தில் இந்துக்கள் கணக்கிலேயே சீக்கியர்களையும் சேர்த்துக் கொண்டார்கள்.
இதற்கு முன்பாகவே ஆரிய சமாஜம், சீக்கியர்களைத் 'தாய் மதத்திற்கு’ அழைத்துச் செல்வதற்காக ஓர் இயக்கத்தைத் துவக்கியது. இதற்குப் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. 'ஹம் ஹிந்து நஹி ஹை’ (நாம் இந்துக்கள் அல்ல) என்பது அந்த நேரத்தில் சீக்கியர்களிடையே பரபரப்பாக விற்கப்பட்ட புத்தகம். இதுவே பின்னால் கோஷமாயிற்று.
இப்படித் தங்களைத் தனி மதமாக அங்கீகரிக்காமல், இந்துக்களோடு இணைக்க முயற்சி நடந்ததில் சீக்கியர்களுக்கு வெகு கோபம். இந்த வெறுப்பை ஆதாரமாக வைத்து அரசியல் நடத்த வந்த கட்சிதான் அகாலிதளம்.
பெரும்பான்மையான சீக்கியர்கள் இருக்கிற மாநிலமாக பஞ்சாப் மாறினால்தான் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்ட அகாலிதனம் 'பஞ்சாபி சுபா’ என்ற கோரிக்கையை எழுப்பியது. பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியப் பகுதிகளை ஒரு மாநிலமாகவும், இந்துப் பகுதிகளைத் தனியாக ஹரியானா என்று மற்றொரு மாநிலமாகவும் பிரிக்க வேண்டும் என்பது கோரிக்கையின் சாரம்.
கடைசியில் பலத்த எதிர்ப்பிற்கு இடையே பஞ்சாபி சுபா ஏற்படுத்தப்பட்டது. அகாலிதளத்திற்கு வெற்றி. இதற்காகச் சிந்தப்பட்ட ரத்தத்தையும், செய்யப்பட்ட தியாகத்தையும் காண்பித்து அகாலிதளம் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.
மாநிலம் பிரிந்ததோடு பிரச்னை முடிந்து விடவில்லை. 'தலைநகர் எது?’ என்கிற பிரச்னை எழுந்தது. முதலில் லாகூர் பஞ்சாபின் தலைநகராக இருந்தது. அது பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அதற்குப் பதிலாக சண்டிகர் என்னும் புது நகர் உருவாக்கப்பட்டது. மாநிலம் பிரிந்த பின்னர், ஹரியானா, 'சண்டிகரை எனக்குக் கொடு’ என்று கேட்டது.
'எனக்குத்தான்’ என்று பஞ்சாப் சொன்னது. 'ஆந்திரா - தமிழ்நாடு பிரிந்தபோது, சென்னை தமிழ்நாட்டிடம்தானே கொடுக்கப்பட்டது; மகாராஷ்டிரா - குஜராத் பிரிந்தபோது, பம்பாய் மகாராஷ்டிராவிடம்தானே தரப்பட்டது; புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம்தானே புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்பது அகாலிகளின் கேள்வி! இரண்டு பேருக்குமே வேண்டாம் என்று மத்திய அரசு சண்டிகரை யூனியன் பிரதேசமாகத் தன் வசம் வைத்துக் கொண்டு இருக்கிறது. இதிலும் அகாலிகள் மனக் காயம் பட்டிருக்கிறார்கள். இவை தவிர, தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைகள். நதி நீர்ப் பங்கீடு தாவாக்கள். வாரணாசிக்கும் ஹரித்வாருக்கும் 'புனித நகரம்’ என்று தனி அந்தஸ்தை அளித்திருக்கும் மத்திய அரசு, அமிர்தசரஸுக்கு அதை அளிக்கவில்லை. பாகிஸ்தான் உள்பட எந்த எந்த வெளிநாட்டுக்காரர்களையெல்லாமோ ஏஷியன் கேம்ஸ் போது அனுமதித்தவர்கள் எங்களை டெல்லிக்குள்ளேயே நுழைய விடவில்லை... என்றெல்லாம் சின்னச் சின்னதாக நிறைய மனக் குறைகள்.
அகாலிதளத்திற்கு உள்ளே வேறு சில பிரச்னைகள். அவர்கள் நினைத்த மாதிரி, மாநிலம் பிரிந்தவுடன் சுலபமாகப் பதவிக்கு வர முடியவில்லை. மாநிலம் பிரிந்ததைத் தொடர்ந்து கட்சிப் பிளவுப்பட்டது. தி.மு.க. - அ.தி.மு.க. என்று பிரிந்ததைப் போல, ஆனால் இந்தப் பிரிவுக்குக் காரணம் ஜாதி. ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்கள், ஜாட் அல்லாத சீக்கியர்கள் என்று இரண்டு பிரிவுகள் அகாலிகளுக்குள் இயங்கி வருகின்றன. ஜாட் அல்லாத சீக்கியர்கள், காங்கிரஸின் ஆதரவாளர்கள்.
சீக்கியர்களிடையே அகாலிகள், நிரங்காரிகள் என்று முக்கிய பிரிவுகள் உண்டு. நிரங்காரிகள் ரொம்ப 'மடி’ என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள். நிரங்காரிகள் வெள்ளைத் தலைப்பாகை அணிகிறார்கள் (அகாலிகள் நீலம், அல்லது மஞ்சள்). நிரங்காரிகள் கிட்டத்தட்ட இந்து மதத்தினரைப் போன்ற நடவடிக்கைகள் கொண்டவர்கள். சீக்கியர்களின் மொழியான குருமுகிக்குப் பதிலாக சமஸ்கிருதம், இந்தி பேசுகிறவர்கள். இந்துக்களும் வாழ்கிற பஞ்சாபில் இவர்கள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெறத் துவங்கினார்கள். இது அகாலிகளுக்குத் தலைவேதனையாகியது. 'மதத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்புகள்’ என்று அவர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கினார்கள்.
அகாலிகளுக்கு இன்னொரு பிரச்னை முளைத்தது. பசுமைப் புரட்சி ஏற்படுத்திய செழுமை, அயல்நாட்டில் குடியேறியது - இவை அவர்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தின. நாகரிகம் காரணமாகப் பலர் தலைப்பாகை அணிவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டார்கள். இளைஞர்கள் பகிரங்கமாகப் புகை பிடிக்கத் துவங்கினார்கள். (புகை பிடிக்ககூடாது. மது அருந்தக்கூடாது. மாமிசம் தின்றலாகாது. முஸ்லிம் பெண்களுடன் உறவு கொள்ளக்கூடாது என்பது குரு கோவிந்தர் விதித்த கட்டளை) இந்த அத்துமீறல்களைச் செய்தவர்கள் அகாலிதளத்தின் தலைமைப் பீடத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதற்கு நெருக்கமானவர்கள். ஒரு பக்கம் இவர்களை அனுமதித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் 'கோடாலிக் காம்புகளுடன் போராடுவது’ என்கிற இரட்டை நிலை அகாலிதளத்தின் நாணயத்தைச் சந்தேகத்திற்கிடமாக்கியது.
இந்த அத்துமீறலைக் கவனித்துக் கொண்டு வந்த முதியவர்கள் - மெல்ல மெல்ல தங்கள் மதம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தனர். மதத்தைக் காப்பாற்றுகிற விஷயத்தில் அகாலிதளம் என்ற அரசியல் கட்சியை முழுக்க நம்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டது. மதத்தைக் 'காப்பாற்ற’ தீவிரமாகப் போராடுகிற சாமியார்களைத் தலைவர்களாக ஏற்க சீக்கியர்களில் ஒரு பகுதியினர் தலைப்பட்டார்கள். பிந்தரன்வாலே ஆதரவு பெறத்துவங்கியது இந்தக் காரணத்தால்தான்.
பிந்தரன்வாலேயைச் சுலபமாகச் சீக்கிய கோமேனி என்று சொல்லலாம். பிந்தர் என்கிற சிறு கிராமத்தில் மத போதகராக வாழ்க்கையைத் துவக்கியவர் அவர் (அதனால்தான் பிந்தரன்வாலே) இயற்பெயர் - ஜர்னைல்சிங். மதப் பிரசாரம் செய்கிறவர் என்பதால், மத நூல்களை ஆழ்ந்து கற்றவர். நிரங்காரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டவர். 1978-ல் அகாலிதளம் ஆட்சியில் இருந்தது. அப்போது 'வைசாகி தினம்’ என்ற புது வருட நாளன்று, அமிர்தசரஸில், நிரங்காரிகளுக்கும் அகாலிகளுக்கும் மோதல் நிகழ்ந்தது. நகரில் நடந்து கொண்டிருந்த நிரங்காரிகளின் கூட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பிந்தரன்வாலே கோரினார். அகாலிதள அரசு தயங்கியது. தானே 'எதிரிகள்’ மீது படையெடுத்தார். இவருடைய ஆட்களுக்கு நிறைய காயம். ஆனால், இவருக்குக் கிடைத்த புகழ் பெரிய லாபம். பொற்கோயில், முன்பு பரம்பரை டிரஸ்டிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது ஒரு கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது (சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி) இந்த கமிட்டியின் உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1980-ல் நடந்த தேர்தலில், 140 இடங்களில் 136 இடங்களை அகாலிதளம் கைப்பற்றியது. மற்ற நான்கில் ஒரு இடத்தைப் பிந்தரன்வாலே பிடித்தார். அவர் அகாலிதள உறுப்பினர் அல்ல. ஆனாலும், ஜைல்சிங், சஞ்சய் காந்தி உதவியுடன் இந்த இடத்தைப் பிடித்தார். அகாலிதளத்தைப் பலவீனப்படுத்துவதற்காக அவர்கள் நிறுத்திய வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர் இவர் ஒருவர் மட்டும்தான்!
ஆனால், இந்த ஒருவர் படுத்தியபாடு... இவர் அகாலிதளத்தின் தலைவர்கள் கண்ணில் கையை விட்டு ஆட்டிய கதைகள் ஏராளம். அட்வால் என்ற டி.ஐ.ஜி பொற்கோயில் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அகாலிதளத் தலைவர் லோங்கோவால் வருத்தம் தெரிவித்தபோது, அதை வெளிப்படையாகக் கண்டித்தார். 'காலிஸ்தான்’ என்று தனி தேசம் கோரும் பிரிவினைவாதிகளுக்குப் பொற்கோயிலில் அடைக்கலம் தர அகாலிதளம் மறுத்தபோது, ''சீக்கியனாகப் பிறந்த எவனுக்கும் பொற்கோயிலில் தங்க உரிமை உண்டு. இதைத் தடுக்க நீங்கள் யார்?'' - சண்டையிட்டார். பொற்கோயில் வளாகத்தில் கோயில் பகுதியான அகாலிதளத்திற்குள் யாரும் குடி போகக்கூடாது என்ற லோங்கோவாலின் எதிர்ப்பையும் மீறி  ஆயுதங்களுடன் அங்கே தங்கியிருந்தார். கடைசி நாட்களில் அகாலிதளத்திற்குத் தன் ஆதரவை விலக்கிக் கொண்டதாக அறிவித்தார். அகாலித் தலைவர் லோங்கோவால் சாதாரணமாக, மத வழக்கப்படி ஒரு சிறு கத்தி (கிர்பான்) மட்டும் அணிந்திருப்பார். பிந்தரன்வாலே, எப்போதும் துப்பாக்கி ரவைகள் கொண்ட பெல்ட் அணிந்து, ரிவால்வார் வைத்திருப்பது வழக்கம்! தனியாக வெளியிடங்களுக்குச் செல்வது கிடையாது. எப்போதும் லைட் மெஷின் கன் வைத்திருக்கும் இளைஞர் படையின் பாதுகாப்புடன் தான் செல்வது வழக்கம். லோங்கோவால் கோஷ்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிந்தரன்வாலேயை ''கோழை!'' என்று பகிரங்கமாகவே சாடியது உண்டு. பேச்சு வார்த்தைகள் மூலம் முடிந்திருக்கக் கூடிய பிரச்னைகளைப் பூதாகரமாக ஆக்கியதில் இவரது 'பங்கு’ கணிசமானது.
பிரச்னைகளை வளர்த்ததில் இந்திரா காந்திக்கும் முக்கிய பங்கு உண்டு. அகாலிகளைத் தனி மதமாக அங்கீகரிப்பது, சண்டிகரைப் பஞ்சாபிற்குக் கொடுப்பது போன்ற நியாயமான சிறு விஷயங்களில் முதலிலேயே விட்டுக் கொடுத்து, பிரச்னையின் வேகத்தை மட்டுப் படுத்தி இருக்கலாம். இது அகாலிதளத்தைப் பலப்படுத்திவிடும் என்கிற அரசியல் காரணத்திற்காகப் பிடிவாதமாக இருந்தார் அவர். நதி நீர்ப் பங்கீடு காரணமாக, எமர்ஜென்ஸியின்போது, உருவாக்கப்பட்ட ஏற்பாட்டை அகாலிதளம் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் விசாரித்துத் தீர்ப்புச் சொன்னால் அதற்குக் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டிருந்தார்கள். அதன் பேரில் ஜனதா அரசு அந்த ஏற்பாட்டை சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பியிருந்தது. 1980-ல் மறுபடி பதவிக்கு வந்ததும் இதை விலக்கிக் கொண்டு விட்டார் இந்திராகாந்தி.
அண்மைக் காலத்தில் கட்டுக்கடங்காமல் போய்விட்ட அகாலி தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க இந்திரா காந்தி எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் 'துணிச்சலான’ ஒன்றுதான். இந்த விஷயத்தில் நாடெங்கும் அவருக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால், சீக்கியர்கள் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நடவடிக்கை.
ராணுவம் நுழைந்த நிகழ்ச்சி பெரிதும் பாதித்திருக்கிறது. இந்தப் புண் புரையோடி இன்னும் பத்து வருஷத்தில் பெரிதாக வெடிக்கக் கூடும்.
பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததன் விளைவுகள் நாளை என்னவாக இருக்கும்? காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் பஞ்சாபைக் கவலையோடும் கலக்கத்தோடும் கவனித்துக் கொண்டிருக்கிறான்...


லோங்கோவால் தலைமையில் அகாலிக் குழு இந்திரா காந்தியைச் சந்திக்க வந்தபோது (அக்டோபர் 16, 1981) அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இந்திரா காந்தி. அகாலி குழு நுழைந்தவுடன் சுத்தமான பஞ்சாபியில், ''என்ன சாப்பிடுகிறீர்கள் சாமி?'' (சந்த்ஜி, துசி கி பியோகே) என்று கேட்டார். காபி, டீயில் இருந்து கரும்புச் சாறுவரை பதினோரு ஐட்டங்கள் பட்டியல் போடப்பட்டது. (பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்) அகாலிகளுடைய கோரிக்கைகள் மொத்தம் நாற்பத்தைந்து! அமிர்தசரஸிற்கு வரும் ரயிலுக்கு 'கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பது அதில் மிகச் சாதாரணமான கோரிக்கை. மாநிலத்திற்கு அதிக அதிகாரம் தர வேண்டும் என்ற 'அனந்தப்பூர் தீர்மான’த்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.
'அனந்தப்பூர் தீர்மானம் என்பது என்ன?
1973-ல் அனந்தபூர் குருத்துவாராவில் அகாலிதளம் கூடி நிறைவேற்றிய தீர்மானம் அது. அதன்படி, 'பஞ்சாபி சுபா மூலம் சீக்கியர்களுக்குக் கிடைக்க வேண்டிய 'முழுதும்’ கிடைக்கவில்லை. அதனால் ராணுவம், கரன்சி நோட்டு அச்சடித்தல், செய்தித் தொடர்பு, ரயில் ஆகியவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டு, மற்றவற்றை மாநிலத்திடம் 'ஒப்படைத்து’விட வேண்டும்.
இதைவிட ஒரு படி மேலே போய் 1982-ல் காலிஸ்தானைக் கேட்க ஆரம்பித்தார்கள் அகாலிகள். காலிஸ்தான் என்பது தனி நாடு. தனிக் கொடி.. சீக்கிய மதம் மட்டும். கிரந்த சாகிப்பில் சொல்லப்பட்டிருக்கும் சமத்துவம் அரசியல் கொள்கை. நடுநிலைமை வெளிநாட்டுக் கொள்கை. ''காலிஸ்தான் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று தனிப்பட்ட பேட்டிகளில் லோங்கோவால் சொல்கிறார். ''தைரியம் இருந்தால் வெளியில் வந்து சொல்லட்டும்'' என்கின்றனர் தீவிரவாதிகள். ''நாங்கள் கேட்கவில்லை. கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம்'' என்றார் பிந்தரன்வாலே. அடைந்தால் காலிஸ்தான். இல்லையேல் சுடுகாடு’ என்கிற தீவிரவாதிகள், தனி பாஸ்போர்ட், ஸ்டாம்ப், 'அரசியல் சட்டம்’ இவற்றோடு இப்போதும் கனடாவில் இயங்கி வருகின்றனர்.

எச்சில் தட்டு கழுவிய மகாராஜா!
பொற்கோயில் வளாகம் என்பது மூன்று பகுதிகள் கொண்டது. நட்ட நடுவில் ஒரு பெரிய குளம். குளத்தின் நடுவில்தான் பொற்கோயில் அமைந்திருக்கிறது. இதன் பொற்கூரையை அமைத்துக் கொடுத்தவர் மகாராஜா ரஞ்சித்சிங். நடுவில் சில காலம் முஸ்லிம்கள் வசம் சிக்கியிருந்த கோயிலை மீட்டுக் கொடுத்தவரும் அவர்தான். கோயிலுக்குப் போகிற நுழைவாசலில் அற்புதமான பொன் வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கதவு இருக்கிறது. இது குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலைச் சேர்ந்தது. கஜினி முகமது கொள்ளையடித்துக் கொண்டு போன இக் கதவை ஆஃப்கானிஸ்தான் வரை போய் ரஞ்சித் சிங் மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால், சோமநாதர் கோயில் பூசாரிகளோ, கதவு தீட்டுப் பட்டுவிட்டது என்று சொல்லி தொடக்கூட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்! பின் இந்தத் தங்கக் கதவைப் பொற்கோயிலில் பொருத்தினார் ரஞ்சித்சிங்.
பொற்கோயிலுக்கு நேர் பின்னே, குளத்தின் ஒரு கரையில் இருப்பது அகால் தக்த். இதுதான் சீக்கிய மதத்தின் தலைமைப் பீடம். அவர்களுடைய வேதப் புத்தகமான கிரந்த்த சாகிப் இதில்தான் ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. குரு கோவிந்த்சிங்கின் கத்திகள் இங்குதான் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் சீக்கியர்களைக் கொடுமைப்படுத்தியதைச் சித்திரிக்கும் கொடூரமான ஆயில் பெயிண்டிங்குகள் காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு, ஒவ்வொரு தலைமுறைக்கும் போராட்ட உணர்வு ஊட்டப் பயன்படுத்தப்படுகின்றன.
அகால் தக்தின் அதிகாரங்கள் கடுமையானவை. இதன் கட்டளைகளை எந்தச் சீக்கியரும் மீற முடியாது. பொற்கோயிலைக் கட்டிக் கொடுத்த மகாராஜா ரஞ்சித்சிங்கேகூட இதற்குப் பணிந்து போக நேர்ந்தது. ஒரு முறை அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, பக்கத்தில் இருக்கும் இலவசச் சத்திரத்தில் எச்சல் தட்டு கழுவுவது. (பல நூற்றான்டுகள் கழித்து இதே தண்டனை, அகாலி தளத்தின் மற்றொரு பெரிய தலைவரான மாஸ்டர் தாராசிங்கிற்கு அளிக்கப்பட்டது)
கோயிலின் நேர் எதிரே, குளத்தின் மற்றொரு கரையில், குருநானக் நிவாஸ், குருராம்தாஸ் நிவாஸ் என்ற தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இதற்குப் பக்கத்தில் மூன்று மாடிகள் கொண்ட இலவசச் சத்திரம் இருக்கிறது. சாப்பாடு ஃப்ரீ. இதன் மூன்றாவது மாடியில்தான் பிந்தரன்வாலே தினமும் தனது 'மதப் பேருரைகளை’ நிகழ்த்துவது வழக்கம்.
பொற்கோயிலுக்குள் நுழைகிறவர்கள் எவரும் தங்கள் தலையைக் குறைந்தபட்சம் ஒரு கர்ச்சீப்பாவது கொண்டு மூடி இருக்க வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட எதுவும் அணிந்திருக்கக்கூடாது (பெல்ட், காமிரா உரை போன்றவை). புகையிலைப் பொருட்கள் வைத்திருக்கக்கூடாது. ஆனால், உள்ளே எந்த மதத்தினரும் தாராளமாகப் போய் வரலாம்.
இதுவரை ராணுவமோ, போலீசோ பொற்கோயிலுக்குள் நுழைந்ததில்லை. 1966-ல் ஒரு முறை, பஞ்சாபி சுபா கிளர்ச்சியின் போது போலீஸ் நுழைய முயற்சித்தது. அப்போது கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு, அதன் பின் நுழைய முயற்சிகூட நடக்கவில்லை. எமர்ஜென்ஸியின் போது ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்திய கட்சி அகாலிதளம் ஒன்றுதான்! தி.மு.க., ஜனசங், ஆர். எஸ். எஸ். போன்ற எல்லா எதிர்க்கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் மிசாவில் கைது செய்யப்பட்ட அந்த நேரத்தில், அகாலிதளத்தை நெருங்க முடியவில்லை. காரணம் - அவர்கள் பொற்கோயிலுக்குள் தங்கி இருந்ததுதான். அகாலி தலைவர்கள் மட்டுமல்ல, இன்றைய பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர்கூட அப்போது அங்கே தங்கியிருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு!

பொற்கோயில் தாக்குதல்...
தீவிரவாதிகளை அடக்க பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்யப்பட்ட பிறகு 'தாக்குதல்’ எப்படி நடத்த வேண்டும் என்று மிகுந்த கவனத்துடன் திட்டம் தீட்ட வேண்டியிருந்தது. அரைகுறைத் தாக்குதல் நாடு முழுவதும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலைதான் காரணம்.
ராணுவத்தை இயக்கும் பொறுப்பு ஆறு கமாண்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களில் இருவர் சீக்கியர்கள். தலைநகரிலிருந்து பிந்தரன்வாலே கோஷ்டியை நேரடியாகச் சமாளிக்க கொரில்லாச் சண்டையில் தேர்ச்சி பெற்ற 500 ராணுவ வீரர்கள் ஸ்பெஷலாக விமானத்தில் வந்து இறங்கினர். 'டாங்க்’ குகளும்.. மெஷின் 'கன்’கள் பொருத்தப்பட்ட ஜீப்புகளும் பொற்கோயிலை நோக்கி நகர ஆரம்பித்தன. 5,000 வீரர்கள் பொற்கோயில் வளாகத்தைச் சூழ்ந்து கொண்டனர். கோயிலுக்குள்ளேயிருந்து வெளியே தப்பிக்கும் வழிகளெல்லாம் அடைக்கப்பட்டன. இன்னொரு 5,000 பேர் அடங்கிய படை அமிர்தரஸில் ஊரடங்குச் சட்டத்தை கச்சிதமாக நிலை நாட்டியது. கோயிலுக்குள் தண்ணீர் சப்ளை, மின் சப்ளை எல்லாம் துண்டிக்கப்பட்டன. ராணுவ வீரர்கள் தயாரானார்கள்.
தே நேரத்தில்...
கோயிலின் மணிக் கூண்டுகள் மீதும், 'வாட்டர் டாங்க்’குகள் மீதும் தீவிரவாதிகள் மெஷின் துப்பாக்கிகளுடன் நின்று தாக்குதலுக்குத் தயாரானார்கள். இதற்குள் டெல்லியிலிருந்து பிரதமர் 'புனித நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் ஹர்மந்திர் ஸாகிப் மீது ஒரு துப்பாக்கி ரவை கூடப் படக்கூடாது’ என்று ராணுவ தலைமையதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தார். இந்தச் செய்தி ராணு வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
விடியற்காலை... இருள் அகலவில்லை. ஒலிபெருக்கிகள் மூலம் கமாண்டர்கள் 'தயவுசெய்து சரணடைந்து விடுங்கள். ரத்தம் சிந்த வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிணங்கி வெள்ளைக் கொடிகளுடன் நூற்றுக்கணக்கான அகாலிகள் வெளியே வந்தார்கள். இவர்களில் லோங்கோவாலும் ஒருவர், பிந்தரன்வாலேயும், அவரைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் துப்பாக்கியை உயர்த்தி போருக்குத் தயாரானார்கள்.
(ராணுவத்துக்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான ஜெனரல் கே. சுந்தர்ஜி 'எங்களுக்கு கோபமே வரவில்லை. மாறாக மிகுந்த வருத்தத்துடன்தான் கோயிலுக்குள் நுழைந்தோம். உள்ளே காலடி எடுத்து வைக்கும்போது எங்கள் உதடுகள் ஆண்டவன் பெயரைத்தான் முணுமுணுத்தன...'' என்று பிற்பாடு குறிப்பிட்டார்.) ஏரிக்கு நடுவில் பொற்கோயில் இருப்பதால் அங்கே செல்ல பாலம் போன்ற ஒரு நீண்ட வழி என்றுதான் உண்டு. கோயிலைச் சுற்றியுள்ள மாடங்களிலிருந்து தீவிரவாதிகளின் துப்பாக்கிகள் குறி பார்த்துக் கொண்டிருந்த நிலை. கீழேயோ ஒதுங்குவதற்கு இடமில்லை. உள்ளே நுழைந்த உடனேயே 15 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு இரையானார்கள். ''நிறைய வீரர்களை பலி கொடுக்க வேண்டியிருக்குமோ...?!’ என்று ராணுவத்தினரிடையே ஒரு லேசான தயக்கம்.
இதற்குள் ஒரு வீரர் தவழ்ந்தவாறு பாலத்தின் வழியாக நெருங்கி தீவிரவாதிகள் மீது பாய்ந்தார். பிந்தரன்வாலேயின் சகாக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். அந்த இளம் வீரரின் உடல் முழுவதும் 'டைனமைட்’டுகளை வைத்துக் கயிற்றால் கட்டி பாலத்தின் வழியாகத் திருப்பி அனுப்பி விட்டு ஃப்யூஸை அழுத்த ராணுவ வீரர்களின் கண்ணெதிரே அவர் கைவேறு, தலை வேறாக சுக்கல் சுக்கலாகப் போனார்.
இந்தப் பயங்கரத்தைக் கண்டு திகைத்துப் போன ராணுவம் மறுவிநாடி முழு வேகத்தில் இயங்கியது. பிந்தரன்வாலே ஒளிந்திருந்த அகாலி தக்த் கட்டடத்தை ஏழு டாங்க்குகள் சூழ்ந்து கொண்டு தாக்கின. சில நிமிடங்களில் தீவிரவாதிகளில் எதிர்ப்பு பொடிப் பொடியானது.
அகாலி தக்த் கட்டத்துக்குள் கமாண்டர்கள் நுழைந்தனர். உள்ளே 'பேஸ்மெண்ட்’டில் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிந்தரன்வாலேயின் உடல் கிடைத்தது. அருகிலேயே அவரது வலதுகரமாக விளங்கிய அம்ரித் சிங்... காலில் ஒருகுண்டு.’ தலையில் ஒரு குண்டு... விழுந்து கிடந்தார். வெகு அருகிலிருந்து துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும். இருவரும் தற்கொலை உடன்படிக்கை செய்து கொண்டிருக்கலாம். அம்ரித் சிங், பிந்தரன்வாலேயைக் கொன்றுவிட்டு பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.
இதெல்லாம் ஒரு யூகம்தான்..!
சூரியன் லேசாகத் தலையைக் காட்ட, பொழுது புலரத் தொடங்கியது...

அடைந்தால் காலிஸ்தான்... இல்லையேல் சுடுகாடு!''

போய் வாருங்கள் பிரதமரே...! மன்மோகன் சிங்



-

மாண்புமிகு பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு... உங்கள் பத்தாண்டு கால ஆட்சியால் பாதிக்கப்பட்ட பலகோடி சாமான்ய இந்தியக் குடிமக்களில் ஒருவன் மிகுந்த பணிவோடும் நிறைந்த நல்லன்போடும் எழுதும் கடிதம். உங்கள் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த அறிவுள்ளவர். இந்தக் கடிதத்தின் சாரத்தை அவர் மூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுகிறேன்!
ஒருவகையில் நீங்கள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; வேறு வகையில் மிக மோசமாகச் சபிக்கப்பட்டவர். நாட்டில் யாரும் எதிர்பார்த்திராத நிலையில் உங்களைப் போன்று பிரதமர் நாற்காலியில் ஆரோகணித்து அமரும் நல்வாய்ப்பைப் பெற்ற தேவகௌடா 10 மாதங்களும், குஜ்ரால் 11 மாதங்களும் மட்டுமே பதவியை அலங்கரித்தனர். ஆனால், நீங்களோ நேருவுக்குப் பின்பு தொடர்ந்து இருமுறை முழுமையாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்து சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தையே படைத்துவிட்டீர்கள். இந்திரா காந்திக்கே வந்து வாய்க்காத பெருமை உங்களுக்கு வாய்த்தது ஒரு வரலாற்று அதிசயம்.
காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதத்தை வல்லபபாய் படேல் ஆதரிக்கவில்லை. அன்றைய செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவர்கள் டி.பி.மிஸ்ராவும், என்.வி.காட்கிலும், 'கட்சி உங்கள் பக்கம் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் நேருவின் பதவியைப் பறித்து அந்த நாற்காலியில் அமர்ந்துவிட முடியும்’ என்று ஆலோசனை வழங்கியபோது, 'கட்சி என் பக்கம் இருப்பது உண்மைதான். ஆனால், மக்கள் நேருவின் பக்கம் இருக்கிறார்களே’ என்றார் படேல். உங்கள் பக்கம் கட்சியும் இல்லாமல், மக்களும் இல்லாமல் பிரதமராக 10 ஆண்டுகள் பவனிவர முடிந்தது என்றால், விதியின் வலிமையை யாரோ அளக்கவல்லார்!
பிரதமர் கனவில் நீண்ட காலம் அரசியல் நடத்திய சரண்சிங்கும், சந்திரசேகரும் ஆறு மாதங்களுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் முலாயம் சிங்கையும், லாலுவையும் அலைக்கழிக்கும் பிரதமர் கனவு இன்றுவரை நிறைவேறவில்லை. முலாயம் சிங், லாலுவைத் தடுக்க கௌடாவைக் கொண்டுவந்தார். லாலு, முலாயமை வரவிடாமல் செய்வதற்குக் குஜ்ராலைத் தேடிக் கண்டுபிடித்தார். இளவரசர் ராகுல் அரசியல் முதிர்ச்சி அடையும் வரை பிரதமர் நாற்காலியைப் பாதுகாக்க சோனியா காந்தி உங்களைப் பயன்படுத்திக்கொண்டார். இந்தப் பிரதமர் பதவிக்காக நீங்கள் அளித்த விலை மிகவும் அதிகம்.
ஜெயலலிதா சட்டத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்வராகும் வரை அவருடைய பேரருளுக்கும் பெருங்கருணைக்கும் பாத்திரமான பன்னீர்செல்வம் மாநில முதல்வராகக் காட்சியளித்தார். எந்த அதிகாரமும் அவர் கையில் இல்லை. அது குறித்து அவர் கவலைப்படவும் இல்லை. ஓர் ஊராட்சி ஒன்றியச் செயலாளராக இருந்தவர். ஒரு மாநிலத்துக்கே முதல்வராவதெனில், அவரளவில் அது இந்திரப் பெரும்பதம் அல்லவா! ஆனால், பன்னீர்செல்வமும் நீங்களும் ஒன்றா? யோசிக்கும் வேளையில் நீங்கள் இழந்த பெருமையை நீங்களே உணர்வீர்கள்.
மாண்புமிகு பன்னீர்செல்வத்துக்கு அரசியல் முகமும் முகவரியும் அளித்து ஆட்கொண்டவர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா ஒரு கணம் நினைத்தால் போதும்... பன்னீர்செல்வம் இருக்கும் இடம் பக்கத்து மனிதனுக்கும் தெரியாமற் போய்விடும். அந்த நன்றியுணர்வுதான் ஜெயலலிதா விண்ணில் வரும்போதே அவரை மண்ணில் முதுகு வளைத்து மண்டியிடச் செய்கிறது. நீங்கள் யார் பிரதமரே? உலகம் புகழும் பொருளாதார மேதை; ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பெருமைக்குரிய முனைவர் பட்டம் பெற்றவர்; மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் முதன்மை ஆலோசகராகவும், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், மத்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும், ஐ.நா. அமைப்பில் உயர்நிலை அதிகாரியாகவும் பல்வேறு நிலைகளில் அறிவுசார் நிபுணராகவும் வலம்வந்து, நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, நாட்டில் புதிய பொருளாதாரச் கொள்கைக்கு வடிவம் வழங்கியவர். சோனியா உங்களைப் பிரதமராக்குவதற்கு முன்பே உங்களுக்குச் சுயமாக முகமும் இருந்தது; முகவரியும் இருந்தது. ஆனால் இன்று, கலியுகக் கர்ணனாய் நீங்கள் நன்றிக்கடன் செலுத்தியதில் உங்கள் பெருமையும் புகழும் சிதைந்துவிட்டது.
ஒரு குறிப்பிட்ட துறையில் உச்சம் தொட்டவர், மற்ற துறைகளிலும் அதேயளவு ஆற்றல் கொண்டவராக இருப்பதில்லை. 'விரல் முனையில் ஆயிரம் ராகங்களுக்கு வாழ்வளித்த விஸ்வநாதனுக்கு விஜயவாடா எங்கிருக்கிறது என்று தெரியாது’ என்பார் கண்ணதாசன். நீங்கள் பொருளாதாரத்தில் மேதை. ஆனால், வரலாற்றுத் தாழ்வாரங்களில் நீங்கள் போதுமான அளவுக்கு நடைபயின்றதில்லை என்று நினைக்கிறேன். அரசியலுக்கும் நன்றிக்கும் அணுவளவும் சம்பந்தம் இருப்பதில்லை பிரதமரே!
அண்ணல் காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக நேருவை அறிவிக்காமற் போயிருந்தால் அவர் படேலிடம் பிரதமர் பதவியைப் பறிகொடுத்திருப்பார். 'என்னுடைய மொழியில் இவர் பேசுவார்’ (He will speak my language) என்று நம்பிக்கையுடன் சொன்ன காந்தியின் மொழியில் நேரு பாரதப் பிரதமராக 17 ஆண்டுகள் பேசவுமில்லை; காந்தியத்தின் வழியில் நாட்டை நடத்தவுமில்லை. காமராஜரின் ஆதரவுக் காற்று மொரார்ஜியின் பக்கம் திசைமாறி வீசியிருந்தால் இந்திரா காந்தி பிரதமர் பதவியை அடைந்திருக்கவே முடியாது. அந்த இந்திரா காந்தி கலைஞரின் துணையோடு காமராஜரின் அரசியல் செல்வாக்கை அழிக்கும் காரியத்தில் கடைசிவரை ஈடுபட்டார்.
இந்திரா காந்தியின் வீழ்ச்சிக்கும், ஜனதாவின் ஆட்சிக்கும் வழிவகுத்து மொரார்ஜி தேசாயைப் பிரதமராக்கியதில் பெரும்பங்கு ஜெ.பி-க்கு உண்டு. ஆட்சியில் அமர்ந்ததும் அந்த ஜெ.பி-யை அலட்சியப்படுத்தியவர் தேசாய். உத்தரப்பிரதேச அரசியலில் ஒடுங்கிக்கிடந்த வி.பி.சிங்கை மத்திய நிதியமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி, தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய ராஜீவ் காந்தி, போஃபர்ஸ் விவகாரத்தில் அதே வி.பி.சிங்கின் வியூகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. சோனியாவின் தயவால் பிரதமராகப் பொறுப்பேற்ற உங்கள் அரசியல் ஆசான் நரசிம்ம ராவ் அந்த சோனியாவின் கட்டுப்பாட்டிலிருந்து காங்கிரஸை விடுவிக்க மேற்கொண்ட முயற்சிகளை நீங்கள் முற்றாக மறந்துவிட்டீர்களா? பிரதமர் பதவியில் அமர்த்தினார் என்பதற்காக 10 ஆண்டுகள் சோனியாவின் சூத்திரக் கயிறு இழுத்த இழுப்புக்கெல்லாம் 'கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’யாய் நீங்கள் இருந்தது நியாயந்தானா? உங்கள் நன்றியுணர்வுக்கு நாடு பாழாகிவிட்டது பிரதமரே!
பாரதப் பிரதமரே... நீங்கள் நாணயமும் நல்லொழுக்கமும் நிறைந்த ஒரு நேர்மையான மனிதர் என்றுதான் நான் இன்றும் நினைக்கிறேன். ஆனால், பனை மரத்தின் அடியில் அமர்ந்து நீங்கள் பருகிக்கொண்டிருப்பது பால்தானா என்ற ஐயம் இப்போது பலருக்கு வந்துவிட்டது. அதிகார வர்க்கத்தில் இருந்து நீங்கள் அரசியலில் வைத்த முதல் அடியே தவறானது. அசாம்  மாநிலத்தில் இருந்து 1991-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் எந்த வகையில் அந்த மண்ணுக்குச் சொந்தமானவர்? மாநிலங்களவை உறுப்பினராக ஐந்து முறை அதே இடத்தில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தார்மிக அடிப்படையில் ஏற்கத்தக்கதா? சட்டத்தின் படி சரியாக இருப்பதெல்லாம் தர்மத்தின் பார்வையில் முறையாக இருப்பதில்லை.
குஜ்ரால் திடீர் பிரதமரானபோது உங்களைப் போன்று அவரும் மக்களவை உறுப்பினராக இல்லை. அதன் பின்பு லாலுவின் தயவால் பாட்னாவில் வேட்பாளராக நின்று அவர் வெற்றி பெற்றார். நீங்கள் ஒரேயொருமுறை 1999-ல் தெற்கு டெல்லியில் நாடாளுமன்ற வேட்பாளராக நின்று தோற்றீர்கள். அவ்வளவுதான். இன்றுவரை தேர்தல் களத்தில் மக்களை நீங்கள் சந்தித்ததே இல்லை. சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா 1952-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையத்தில் தோற்ற அடுத்த நிமிடம் பதவியைத் துறந்தார். இடைக்கால முதல்வராக அவர் தொடர வேண்டும் என்று பிரதமர் நேரு வற்புறுத்தினார். 'ஒரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாத நான் ஒரு மாநில முதல்வராக நீடிப்பது நியாயமாகாது’ என்று நேருவுக்குக் கடிதம் எழுதினார் ராஜா. 'பொதுவாழ்வில் நேர்மை’(Probity in Public life) அன்றைய அரசியல்வாதிகளின் தாரகமந்திரமாக இருந்தது. ராஜாவின் அளவுகோலால் உங்களை அளக்கக்கூடுமா?
மாண்புமிகு பிரதமரே... உங்களை நிதியமைச்சராக்கிய நரசிம்ம ராவ் ஆட்சியில் அரங்கேறிய ஊழல்கள் ஒன்றா, இரண்டா? அனைத்துக்கும் மௌனசாட்சியாக இருந்து அன்று நீங்கள் எடுத்த பயிற்சி வீண்போகவில்லை. உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், பாதுகாப்புத்துறையில் ஊழல், ரயில்வே ஊழல் என்று அன்றாடம் ஊழல் அரக்கனுக்கு உற்சவம் நடந்த நிலையில் மௌனகுரு சுவாமிகளாக நீங்கள் பார்த்துக்கொண்டிருந்ததற்குப் பழைய பயிற்சிதான் பயன்பட்டிருக்கிறது. அன்று நரசிம்ம ராவின் மகன், இன்று சோனியாவின் மருமகன். பாதை ஒன்று; மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர் ஒருவர். ஊழல் பயணியர் மட்டும் வேறுவேறு. நாட்டு நலனில் நாட்டமுள்ளவர் நீங்கள் என்று எப்படி நம்புவது?
நரசிம்ம ராவை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஹர்ஷத் மேத்தா பகிரங்கமாக அறிவித்தபோது அவர் வாய்திறக்கவில்லை. 'அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமர் அனுமதியுடன்தான் செயல்பட்டேன்’ என்று ஆண்டிமுத்து ராசா திரும்பத் திரும்ப வாக்குமூலம் வழங்கியபோதும் நீங்கள் வாய் திறக்கவில்லை. சிறுபான்மை அரசைக் காப்பாற்றிக் கொள்ள நரசிம்ம ராவ் எம்.பி-க்களுக்கு லஞ்சம் தந்ததாக அன்று பேசப்பட்டது. அதே குற்றச்சாட்டு உங்கள் ஆட்சியிலும் உங்களுக்கு எதிராக வீசப்பட்டது. உங்கள் அரசியல் குருநாதர் பதவியிழந்த பின்பு நீதிமன்றப் படிகளில் ஏறியிறங்க நேர்ந்தது. உங்களுக்கு அந்த அவமானம் வரக் கூடாது என்று ஆண்டவனை வேண்டுகிறேன். ஏவியவரை விட்டுவிட்டு ஏவப்பட்ட அம்பை ஏசக் கூடாது.
மரியாதைக்குரிய பிரதமர் பரிதாபத்துக்கு உரியவராக மாறியது யாரால் என்ற கேள்வி இன்று வரை உங்களுக்குள் எழவே இல்லையா? நேர்மை பேசும் நீங்கள் லாலு போன்றவர்களின் பதவிப் பறிப்பைத் தடுப்பதற்காக அவசர சட்டமியற்ற முனைந்தபோது, இளவரசர் ராகுல் உங்களைத் தரம்தாழ்ந்து வெளிப்படையாக விமர்சித்தபோதே உங்கள் கம்பீரம் கலைந்துவிட்டது. நாட்டு விடுதலைக்காக 3262 நாட்கள் சிறையில் தவமிருந்த நேரு, ஊழல் நிழல்படாத உத்தமர் என்பதில் இருகருத்து யாருக்கும் இருக்கவியலாது. ஆனால், ஜீப் ஊழல் கிருஷ்ணமேனனையும், முந்த்ரா ஊழல் கிருஷ்ணமாச்சாரியையும், பஞ்சாப் முதல்வர் ஊழல் நாயகர் கெய்ரோனையும் காப்பாற்ற அவர் முனைந்ததை மறுக்கவும் முடியாது. நேருவின் அளப்பரிய தியாகம் அவரைக் காப்பாற்றியது. கறைபடிந்த உங்கள் ஆட்சியின் களங்கத்தில் இருந்து உங்களை எது காப்பாற்றக் கூடும்?
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, 'உலகத்தின் பிரச்னைகளும், இந்தியாவின் சிக்கல்களுக்கும் சோஷலிசம் ஒன்றுதான் தீர்வு. சோஷலிசம் பாதையில் பயணிப்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும்; வேலையின்மையைப் போக்க முடியும்; மக்களின் சீரழிவைத் தடுக்க முடியும்’ என்று (ஜூலை 1948) மும்பையில் முழங்கினார். ஆனால், பணக்காரர்களைப் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகளைப் பரம ஏழைகளாகவும் மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு நீங்கள்தான் நரசிம்ம ராவ் ஆட்சியில் வரவேற்பு ராகம் வாசித்தீர்கள். வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம் முதலில் எழுச்சியுற்றது போன்று மாயத்தோற்றம் காட்டியது உண்மைதான். ஆனால், இன்றைய நிலை என்ன?
உங்கள் ஆட்சிச் சாதனைகளில் முக்கியமானது உணவுப் பாதுகாப்புச் சட்டம். நாட்டில் 80 கோடி மக்களின் பசியாற்றுவதற்கு இந்த அற்புதமான திட்டம் வழிவகுத்திருக்கிறது என்று பெருமிதம் பொங்கப் பேசியிருக்கிறீர்கள். 120 கோடி இந்திய மக்களில் 2 ரூபாய்க்கு கோதுமையும், 3 ரூபாய்க்கு அரிசியும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மலிவு விலையில் வழங்கினால்தான் 80 கோடி மக்கள் பசியாற முடியும் என்றால், உங்கள் புதிய பொருளாதாரம் எதைச் சாதித்தது? உங்கள் நம்பிக்கைக்குரிய 'வியத்தகு பொருளாதார விற்பன்னர்’ அலுவாலியா வறுமைக்கோட்டுக்குக் கீழே வாடுபவர்களின் எண்ணிக்கை உங்கள் புத்தாண்டு ஆட்சியில் 41 கோடியில் இருந்து 27 கோடியாகக் குறைந்துவிட்டது என்கிறார். அவருடைய அளவீட்டின்படி ஒவ்வொரு நாளும் நகரத்தில் உள்ளவர் 33 ரூபாயும், கிராமப்புறங்களில் வாழ்பவர் 27 ரூபாயும் செலவழிக்கும் சக்தியுள்ளவர் எனில், அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்துவிடுகிறார். உங்களுக்கும் சிதம்பரத்துக்கும், அலுவாலியாவுக்கும் வறுமை என்றால் என்னவென்று தெரியுமா? பசியின் கொடுமை எப்படியிருக்கும் என்று புரியுமா?
அன்பிற்கினிய பிரதமரே... உங்கள் ஆட்சியில் நல்ல காரியங்களே நடக்கவில்லை என்று சாதிக்க முயல்வது என் நோக்கம் அன்று. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் (அதில் ஊழல் ஊடுருவியிருந்தாலும்) தகவல் அறியும் உரிமைச் சட்டம்,  போன்ற உயர்கல்வி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவிகித ஒதுக்கீடு, கல்வி உரிமைச் சட்டம் போன்றவை உண்மையில் பாராட்டுக்கு உரியவை. ஆனால், நான்கு நற்செயல்களுக்காக நாலாயிரம் தீச்செயல்களை யாரால் சகிக்கக் கூடும்?
ஒரு பொம்மைப் பிரதமராக இருந்து உங்கள் பெருமையை இழந்துவிட்டீர்கள். சோனியாவின் குடும்பம் போற்றி மதிக்கும் சொத்தாக இருந்த நீங்கள் இன்று காங்கிரஸின் சுமையாகக் கருதப்படுவதால் விடைபெறும் நிலைக்கு வீழ்ந்துவிட்டீர்கள். அதிகாரம் முழுவதும் சோனியா வீட்டில்; பழிபாவம் முழுவதும் பரிதாபத்துக்குரிய உங்கள் தோள்களில்,  மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் அடுத்தவர் தயவில் அதிகார நாற்காலியில் நீண்ட நாட்கள் அமர முடியாது. அப்படியே அமர்ந்தாலும் சுயமரியாதையுடன் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் நினைத்தபடி ஆட்சி நிர்வாகத்தை நடத்திவிட முடியாது என்பதை இப்போதாவது நீங்கள் உணர்கின்றீர்களா?
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ் உங்கள் பக்கம் கை நீட்டுகிறார். அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசா உங்கள் கரங்களில் கறை பூச முயல்கிறார். 'வாழ்ந்தபோது வாழ்த்துவதற்கு வரிசையில் நின்றவர்கள் வீழ்ந்தபோது விலகிச் செல்வது அரசியல் உலகில் மிகச் சாதாரண நடைமுறை. கவலைப்படாதீர்கள் பிரதமரே... அரசனாய் இருந்த சித்தார்த்தன் கானகம் சென்றால் அது துறவு. எதையும் துறக்காமல் எல்லாவற்றையும் அடைந்த நீங்கள், இன்று இழக்கக் கூடாத தனிமனித மரியாதையைத் துறந்துவிட்டுப் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதுதான் உங்கள் நன்றிக்கடனுக்கான நல்லடையாளம். 'போய்விடுங்கள்’ என்று சொல்லத்தான் ஆசை. ஆனாலும், மங்கல வழக்காகப் 'போய்வாருங்கள்’ என்று சொல்கிறேன்.
உங்கள் அறிவின் மீது வியப்பும்
பதவிப் பசியின் மீது
வருத்தமும் கொண்ட
தமிழருவி மணியன்

Saturday, May 10, 2014

Start a Small Bakery Business - Hcareers

Start a Small Bakery Business - Hcareers

என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா...

ம்சார சாகரத்தில் மூழ்கி, ஆண்டு முழுதும் மூச்சுத் திணறும் சம்சாரிகள் மீது இரக்கம் கொண்ட கடவுள், அவர்களுக்கு அருளிய கருணைக் கொடைதான் கோடை விடுமுறை. தேர்வுகள் முடிந்து மனைவி, குழந்தைகளை ஊருக்கு ரயில் ஏற்றி அனுப்பி விட்ட அடுத்த நிமிடம், பல சம்சாரிகளின் ஆனந்தக் கூச்சல், ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா...’ என்பதாகத்தான் இருக்கும். அன்று எனக்கும் இருந்தது.

மனைவி, குழந்தைகள் ஊருக்குப் போவதில் அப்படி என்ன ஒரு கொலைவெறி ஆனந்தம்? இருக்கு பாஸ் இருக்கு... உப்புமா, தக்காளிச் சட்னி,  வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வாழ்க்கை அருளப்படும். தொலைக்காட்சி சீரியல், சுட்டி டி.வி. ஆகியவற்றை தண்டனை போல் உட்கார்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குப் பிடித்த ஆக்ஷன் படங்களைப் பார்க்கலாம்... பார்க்கலாம்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அனைத்துக்கும் மேலாக குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பிவிடும் காலை நேர டென்ஷன் போயிந்தே. இட்ஸ் கான். இனி ஒரு மாசத்துக்குக் காலையில் ஒன்பது மணி வரை ரிலாக்ஸாகத் தூங்கலாம். கேட்பார் இல்லை. வி... டு... த... லை... விடுதலை!

மனைவி, குழந்தைகளை ரயிலேற்றி விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, இரவில் தொலைக்காட்சியில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல்  ‘மூவிஸ் நவ்’வில் ஆக்ஷன் படம் பார்த்தேன். ஆஹா, பேரானந்தம். படம் முடிந்து பன்னிரண்டரை மணிக்கு  விளக்கை அணைத்து, படுக்கும்போதுதான், ஒரு வெறுமை முதல் முறையாக உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது.

அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் படுத்துக்கொண்டு ‘மொய் மொய்’ என்று கதையளக்கும் வாண்டுகளின் மழலைச் சொல் இல்லாமல், காதுகளில் ஒரு டன் பாரம். அந்த வெறுமையை வென்று, நித்ராதேவியை தழுவிடினும் நடுநடுவில் விழிப்பு வந்துகொண்டே இருந்தது.  அருகில் படுத்திருக்கும் வாண்டுகளின் சலனங்கள் இல்லாமல், ‘மிஸ்... அந்தக் கணக்குக்கு எனக்கு ஆன்ஸர் தெரியும்...’ என்கிற பிள்ளைச் சிறுதூக்கப் பேச்சுக்கள் இல்லாமல், கை, கால் மேலே விழும் சிறுசிறு ஸ்பரிசங்கள் இல்லாமல், எதையோ இழந்துவிட்டதாக மனம் தனிமை உணரத் தொடங்கியது. அப்படியே எழுந்து உட்கார்ந்து, விடிய விடிய டி.வி.யை நோக்கமற்று வெறித்துக் கொண்டே இரவு கழிந்தது.  காலையில் பெட் காபி இல்லை.  எழுந்து சென்று, தெரு முக்குக் கடையில் சூடான கழுநீரைக் குடிக்கும்போது, மணமும் ஸ்ட்ராங்குமான மனைவி கைப்பக்குவ காபி நினைவுகள் நிழலாடிப் போனது.

குளித்து முடித்து, கிளம்பி அருகிலிருந்த ஓட்டலில் காலையில் இட்லி ஆர்டர் செய்தபோது, அரிசிப் புண்ணாக்கு இட்லி அவதாரம் எடுத்து டேபிளுக்கு வந்தது.
சட்னியாகத் தேங்காய்ப் புண்ணாக்கு (ஆப்பத்துக்காக தேங்காய்ப் பாலைப் பிழிந்து அதன் சக்கையைத்தான் சட்னிக்குப் பயன்படுத்துவார்கள் அங்கே. இதுவும் மனைவி சொன்னதே).  ருசியில்லாத ஒரு ருசியை ருசித்து, ரத்த அழுத்தம் எகிற வைக்கும் பில்லுக்குப் பணம் கொடுத்து வெளியேறிய வேளையில், எதையோ இழந்ததன் பெருவலி மனசை அழுத்தியது.

அலுவலகம் வந்த பிறகு, பணிப் பளுவில் இழப்பின் பாரம் குறைந்து, மறைந்திருக்க... மதிய உணவு இடைவேளையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது  இழப்பின் வலி. ஓட்டலின் காரமான சாம்பாரும், புளிப்பில்லாத ரசமும், துளியும் பிடிக்காத புடலங்காய் கூட்டும், தோலுக்கு ஒவ்வாத கத்தரிக்காய் பொறியலும், மோர் என்கிற பெயரில் ‘புளிச்ச தண்ணி’யும் மனசுக்குள் கொலைவெறி கிளம்பியது. முடிவு செய்தேன்... இன்று இரவு ‘நளாவதாரம்’ எடுத்து, நாமே  சமைத்து விடவேண்டியதுதான்.

இரவு... தயிர் கப் வாங்கிக் கொண்டு, ஊருக்குப் போன் செய்து, ‘குக்கரில் சாதம் வைப்பது எப்படி?’ என்று மனைவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஓர் ஆழாக்கு அரிசிக்கு ரெண்டு ஆழாக்கு தண்ணீர். ஐந்து விசில் வந்தவுடன் கியாஸை ஆஃப் செய்யணும். அட, சமைக்கிறது இம்புட்டு ஈஸியா? குக்கரில்
அரிசியைக் கழுவி தண்ணீர் ஊற்றி, மூடி அடுப்பில் வைத்தப் பிறகு, அதன் மேல் முனையிலிருந்து புஸ், புஸ்... என்று நீராவி வர ஆரம்பித்ததும் பரபரப்பானேன்.

வெயிட்... வெயிட்... அட வெயிட் எங்கேப்பா? பாத்திரங்களையெல்லாம் தள்ளி, உருட்டி, புரட்டிப் பீறாய்ந்தும் அந்தக் ‘குட்டியூண்டு குண்டு’ எங்கு ஒளிந்துள்ளது என்றுதான் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் குக்கரை ஆஃப் செய்துவிட்டு, ஊருக்குப் போன் செய்தால், ‘அது, எப்பவும் டூல் பாக்ஸ்லதான் இருக்கும்க...’ என்று எதிர் முனையில் வெடிச்சிரிப்பு சிரித்தார் இல்லத்து ராணி.

ஒரு வழியாக டூல் பாக்ஸிலிருந்து ‘குண்டனை’ எடுத்து, தூசு தட்டி மீண்டும் ஸ்டவ்வைப் பற்ற வைத்து, நீராவி வந்து, குண்டு போட்டு, ஐந்து விசிலுக்குப் பிறகு அணைத்து,  சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்தால், அரைவேக்காடாய் சாதம் பல்லிளித்தது. மீண்டும் ஊருக்குப் போன்.

‘எங்கிருந்து அரிசி எடுத்தீங்க?’

‘கீழே கேரிபேக்கிலிருந்து...’

‘அட... அது இட்லி அரிசிங்க...’ மேலே பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கிறதுதான் சாப்பாட்டு அரிசி...’

எடுத்த நளாவதாரம் சொதப்பலாகி விட, பல்பு வாங்கிய அவமானத்துடன், சமையல் முயற்சியைக் கைவிட்டு, மீண்டும் ஓட்டலுக்கே படையெடுப்பு. அங்கு வறட்டி போன்ற பரோட்டாவுக்கு, அவர்கள் கொடுக்கும் சிக்கன் சால்னாவை உண்ணும்போது, அறுக்கப்பட்டபோது, அந்த  சிக்கன் அலறியதை விட, மிக அவஸ்தையுடன் அலறின நாவின் சுவை மொட்டுக்கள்.  

இரவு படுக்கையில் சாயும்போது, ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா... அவ்வ்வ்’ என்று ஈன முனகலாய் முதல்நாள் உற்சாகம் வடிந்திருந்தது. ‘ஊருக்குப் போன் செய்து வரச் சொல்லலாமா?’ என்று ஒரு யோசனை தோன்றி, பிறகு, ‘குழந்தைகள் விடுமுறையைக் கழிக்கப் போயிருக்காங்க. அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்’ என்று அந்த எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, கண்களை இறுக்கி மூடி தூங்க முயன்றேன்.

மறுநாள் காலை... அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தபோது, ஊரிலிருந்து போன். மகள்  பேசினாள்...

‘அப்பா... நாங்க இல்லாம நிம்மதியா இருக்கியா? எங்களுக்குத்தான் இங்க ரொம்பப் போரடிக்குது... என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்களோட பாட்டி ஊருக்குப் போயிட்டாங்க...  அடிக்கடி கரண்ட் போகுது... நைட்டு தூக்கம் வரமாட்டேங்குது.... நாங்க நாளைக்கு மெட்ராஸ்கே வந்துடலாம்னு இருக்கோம்...’ என்றாள்.

‘கரெண்ட் போறதாலே தூக்கம் வரலையாடா?’ என்றேன்.

‘இல்லேப்பா... உன் குறட்டைச் சத்தம் இல்லாம தூக்கம் வரமாட்டேங்குது...’

‘ஹா... ஹா... சமர்த்து.... கரெண்ட் இல்லைன்னாலும் அப்பாவுக்கு நல்லா பல்பு கொடுக்கிறே...’

‘நான் உன் மகளாச்சேப்பா...‘