)
வாழ்க்கையில் ஒருநாள் என்பது அவ்வளவு முக்கியமானதா என கேட்பவரா நீங்கள்? இன்று ஒருநாள் போனால் என்ன, இன்னும் என் வாழ்நாளில் தான் ஆயிரகணக்கில் நாட்கள் உள்ளதே என ஒருநாளை சாதாரணமாக நினைப்பவரா? அப்படியென்றால் இது உங்களுக்கான பக்கம் தான்!!
ஒருநாளை ஒரு நாள் என்று பார்க்காதீர்கள்! 24 மணி நேரம், 1140 நிமிடம், 86,400 நொடி இப்படி பார்த்து பழகுங்கள் எவ்வளவு பெரிதாக உள்ளது. இப்போது இதையே ஐந்து வருடங்கள் என்று பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றும்! ஆனால் இந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக இருக்க உங்களது ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தாலே போதும், நீங்கள் தினசரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வழிகள் இதோ... 1. உங்கள் கனவுகளை நிறைவேற்றும் பயணத்தில் மகிழ்ச்சியை தேடி கொள்ளுங்கள்!! உங்களை வாழ்க்கைக்கான திட்டத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள், அதற்குபதில் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். அப்போது தானாகவே இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும்.இன்று செய்ய வேண்டியதை சரியாக செய்யுங்கள் தனாக உங்கள் கனவு நிறைவேறும். 2.இன்றைய நாளில் என்ன செய்தீர்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ள பழகுங்கள்! ''ஒரு நாளின் முடிவில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று எழுதி வைத்து பாருங்கள் அது இன்றைக்கு நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவு செய்துள்ளீர்கள் என்பதை காட்டும். வெறும் 15 நிமிடங்கள் நீங்கள் செய்த வேலையை எழுதி வைப்பது உங்களுக்கு வேலை மீதான செயல்திறனை அதிகரிக்கும்!' இன்று எது நீங்கள் நினைத்து உங்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லையோ அதனை சரிசெய்தாலே போதும்! 3.தினமும் ஒரு புதிய, பழக்கமில்லாத நபரோடு பேசுங்கள் ''புதிய பழக்கமில்லாதவர்கள் என்பது புதிய வாய்ப்புகளுக்கு சமம். இந்த வாய்ப்புகள் புதிய நண்பர்கள், புதிய யோசனைகள் மற்றும் உங்களுக்குள் இருக்கும் பயத்தையும், கூச்சததையும் போக்குவதாகவும், புதிய தொழில் துவங்குவதற்கான கருவியாக இருக்கும். உங்கள் வட்டத்தை பெரிது படுத்திக்கொள்ள பழகிவிட்டால் அது உங்கள் வேலை,மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை முடிவு செய்யும்.அதனால் தினமும் ஒரு புதிய பழக்கமில்லாத மனிதரோடு பேசுங்கள். 4. நன்றாக கவனிக்க பழகி கொள்ளுங்கள்! மக்கள் தங்களை பற்றி பேசுவதை பெரிதும் விரும்புவார்கள். அதனால் அவர்கள் பேசுவதிலிருந்து உங்களுக்கு தேவையானதை பெற அவர்களை பேசவிட்டு கவனியுங்கள். இது போன்ற மனிதர்களின் அனுபவம் எப்போதும் நமக்கு கைகொடுக்கும் சிக்கலான சூழல்களில் அவர்கள் செய்த தவறை பற்றி கூறியிருப்பார்கள் அதை நாம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பாடத்தையாவது அது கற்றுக்கொடுக்கும்.
5.குறைந்த நேரத்தை மட்டும் வீணாக்குங்கள்!!
நேரத்தை வீணாக்காமல் நம்மால் வாழமுடியாது. ஆனால் நம்மால் குறைவான நேரத்தை வீணாக்க முடியும். வாழ்க்கை நாட்களால் உருவாக்கப்பட்டது, நாட்கள் நேரங்களாலும், நேரம் நிமிடங்களாலும் உருவாக்கப்பட்டவை. அதனால் நிமிடங்களை தாண்டி நாம் நொடியை மட்டும் வீணாக்கி கொள்ள கற்று கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தை நீங்கள் சரியாக கையாண்டால் உங்களால் வெற்றியை மட்டும் தான் பெறமுடியும். 6. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். உங்கள் அனுபவங்களை ஒரு விஷயத்தை நோக்கியே கொண்டு செல்லாதீர்கள்.. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். உங்கள் அனுபவங்களை விரிவுபடுத்துங்கள். இது உங்களது புதுமையான ஐடியாக்களுக்கும், நல்ல முறையில் உங்களை மக்களோடு தொடார்புபடுத்திக்கொள்ள உதவும்.அந்த அனுபவத்தை உலகிற்கு பரிமாறுபவராக இருங்கள்: அது பலரை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்கும்.ஒரு சிறந்த அனுபவம் நல்ல சிந்தனையாளனை உருவாகியே தீரும்! 7. அவமானத்தோடும், சந்தேகத்தோடும் வேலை பார்க்க பழகுங்கள்!! அனைவருக்கும் ஏதோ ஒரு சூழலில் அவமானத்தையும், சந்தேகத்தையும் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே இதை சமாளிக்க கற்றுக்கொண்டு இருப்பார்கள். இதனை சமாளிக்க பழகுங்கள். உங்கள் அவமானம் பாடத்தையும் கற்று கொடுக்கும்! உங்கள் மீதுள்ள சந்தேகம் உங்களை தெளிவு படுத்தும்.
8. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள்:
உள்ளேயே இருந்து வேலை பார்ப்பது எளிது. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள். மிக உயரமான பகுதிகளுக்கு சென்று வாருங்கள், உளவியலாலர்களை சந்தியுங்கள். அது உங்களுக்குள் உள்ள புதுமையற்ற சதாரண மனிதனை புதுமைபடுத்துவதுடன்,உங்கள் அழுத்தத்தை குறைக்க உதவும் கருவியாகவும் அமையும். 9.உங்களைவிட வித்தியாசமானவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் சற்று தாராளமானவராக இருந்தால் வித்தியாசமான மனிதர்களின் நட்புக்குள் செல்லலாம். நீங்கள் நகரத்து எலியாக இருந்தால் நாட்டு எலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த தேடலில் நீங்கள் பல வித்தியாச மனிதர்களை அடையாளம் காட்டும். அவர்கள் மீதான புரிதல் மாறுபட்ட மனிதர்கள் உள்ள குழுவில் சரியான முடிவை எடுக்க பயனளிக்கும். 10. குறைந்தபட்ச குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்: ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படிக்க வேண்டும், 20 புஷ்-அப்கள். இப்படி குறுகிய டார்கெட்டுகள் உங்களை பெரிய வேலைகளுக்கு பழக்கப்படுத்தும்! இந்த பயிற்சி பெரிய திட்டங்களை உடைத்து சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு எவ்வளவு என பிரித்துக் ஐந்து வருட திட்டத்தையும் ஒரு நாளைக்கு பிரித்து வெற்றியடைய உதவும். இன்னும் ஐந்து வருடம் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டால் இன்று உங்கள் வேலை என்னவெனில்...... உங்களுக்கான வேலை என்ன என்பதை இன்னோருவரை தீர்மானிக்க விடாமல் இருப்பது தான்!! இன்றைய நாளை உங்கள் பிடித்த மாதிரி செதுக்குங்கள் அது இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!! |
Saturday, June 28, 2014
நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!
Tuesday, June 24, 2014
India Win Three Gold, Two Silver
India Win Three Gold, Two Silver
by Arvind Aaron
by Arvind Aaron
The Asian Youth Chess Championship started for the age group categories of Under-6, 8, 10 and 12 for Open and Girls at Hotel Uzbekistan in capital Tashkent. The Under-14, 16 and 18 sections will be held separately later in India.
In the rapid section, India won three gold and two silver medals. Chess fans back at home can expect more medals when the classical chess and blitz sections commence.
Indian gold winners in rapid were Aditya Mittal (Under-8) and Nihal Sarin (Under-10) and Priyanka Nutakki (Under-12 girls). The silver medals were won by L.N. Ram Aravind (Under-12) and Mrudul Dehankar (Under-10 girls).
Earlier, the glittering opening ceremony comprised of song and dances of popular Hindi songs which attracted our children to dance with them.
Photo By : Mr.T.J.Suresh Kumar, Coach of the Indian Team
Tags: Asian youth at Uzbekistan - 2014Saturday, June 14, 2014
'ஒட்டிக்கு ரெட்டி...’ - கொல்லிமலையில் களைகட்டும் பாரம்பரியப் பாதுகாப்பு
அழிந்துவரும் சிறுதானிய சாகுபடியை மீட்டெடுக்கும்விதமாக... 'வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் களப்பணி ஆற்றி வருகிறது. சிறுதானியங்களை மீட்டெடுக்கத் தொடர்ந்து கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக, மலைக்கிராம விவசாயிகளுக்கு, சிறுதானியங்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்ததன் விளைவாக, மலைவிவசாயிகள் மத்தியில் சிறுதானிய சாகுபடி கோலோச்சிக் கொண்டிருக்கிறது!
குளுகுளு காற்று வீசும் கொல்லிமலையின் செம்மேடு சிறுநகரத்தில் அமைந்துள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை திட்ட அலுவலர் டாக்டர். ஆலிவர் கிங், அதைப் பற்றி பெருமையோடு பேசினார் நம்மிடம்.
''சிறுதானியங்கள் மனிதனுக்குக் கிடைத்த உணவுச் சீதனம். உழுதுண்டு வாழ்பவர்களே உயர்வாக இருந்த காலத்தில்... ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் உணவளிக்கும் கடமை அவர்களுக்கு
இருந்தது. அப்போது, அனைவரின் உணவுப் பயன்பாட்டுக்காக சிறுதானியங்களே பயிரிடப்பட்டன. சிறுதானிய சாகுபடி சிறப்பாக இருந்த மலைகளில் கொல்லிமலையும் ஒன்று. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கும் பல நூறு ஏக்கர் நிலங்களில் சிறுதானிய சாகுபடி நடந்தது. காலப்போக்கில் பணப் பயிர்கள் சாகுபடி மீது சமவெளி விவசாயிகளுக்குப் பிறந்த ஆர்வம், மலைக்கிராமங்களுக்கும் பரவி, கொல்லிமலையிலும் சிறுதானிய சாகுபடிப் பரப்பு குறைந்தது. 'அதை மீண்டும் பெருக்க வேண்டும். அழிந்துவரும் சிறுதானிய விதைகளை மீட்டெடுக்க வேண்டும்’ என்கிற நோக்கில் 96-ம் ஆண்டு முதல் கொல்லிமலையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு’' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.
மீட்டெடுக்கப்பட்ட 22 ரகங்கள்..!
''பாரம்பரிய விதைப் பாதுகாப்பு, பயிரிடுதல், உணவுப் பயன்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகிய நான்கு செயல்பாடுகளை மையப்படுத்தி வேலை செய்கிறோம். இதுவரையில், அழியும் நிலையில் இருந்த 22 ரகங்களை மீட்டெடுத்து பாதுகாத்து வருகிறோம். எங்கள் களப்பணியாளர்களுடன் இணைந்து இங்குள்ள 305 மலைக்கிராமங்களுக்கும் சென்று, அவர்களிடம் இருந்த பாரம்பரிய ரக சிறுதானிய விதைகளைச் சேகரித்தோம். அதில் அழியும் நிலையில் இருக்கும் பல ரகங்களும் கிடைத்தன. இப்பகுதியில் சாமை, தினை, வரகு, கேழ்வரகு ஆகிய நான்கு ரகங்கள் மட்டும்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டன.
மல்லியச்சாமை, பெருஞ்சாமை, வெள்ளைப்பெருஞ்சாமை, கட்டவெட்டிச் சாமை, திருகுலாசாமை, சடஞ்சாமை, கருஞ்சாமை என ஏழு சாமை ரகங்களும்; செந்தினை, பாலாந்தினை, கோராந்தினை, கில்லாந்தினை, பெருந்தினை, மூக்காந்தினை என ஆறு தினை ரகங்களும்; திரிவரகு, பனிவரகு என்ற இரண்டு வரகு ரகங்களும்; சாட்டைக் கேழ்வரகு, காரக் கேழ்வரகு, கண்டாங்கிக் கேழ்வரகு, பெருங்கேழ்வரகு, சுருட்டைக் கேழ்வரகு, அரிசிக்கேழ்வரகு, கருமுழியான் கேழ்வரகு என கேழ்வரகில் ஏழு ரகங்களையும் சேர்த்து, மொத்தம் 22 பாரம்பரிய ரக விதைகளை, ஆர்வமுள்ள விவசாயிகளிடம்
கொடுத்துப் பெருக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படிப் பெருக்கும் விதைகளை விலைக்கு விற்பதில்லை. மாறாக, ஒரு கிலோ விதை பெற்றுக்கொள்ளும் விவசாயி, விதைத்து அறுவடை செய்த பிறகு, இரண்டு கிலோ விதையை எங்களிடம் கொடுத்துவிட வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல நூறு கிலோ அளவில் விதைப் பறிமாற்றம் நடந்து வருகிறது. இந்த விதை மாற்று முறையை 'ஒட்டிக்கு ரெட்டி’ என்று மலைமக்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்'' என்றவர், இப்பணிகளை மலைவாழ் மக்களைக் கொண்டே செயல்படுத்தி வருகிறோம். இதற்காக, 'கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்ற ஆலிவர் கிங், இந்த அமைப்பின் பொறுப்பாளர் சிவக்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.
மலைக்க வைக்கும் மலைநாடுகள்!
''கொல்லிமலை வேளாண் பல்லுயிரினப் பாதுகாப்போர் சங்கத்துல 1,503 பேர் உறுப்பினரா இருக்காங்க. இதுமூலமா 108 சுய உதவிக்குழுக்களைத் தொடங்கியிருக்கோம். எங்களுக்கு ஆலோசனையையும், உதவிகளையும் சுவாமிநாதன் பவுண்டேஷன்தான் கொடுத்திட்டிருக்கு. வாழவந்தி நாடு, அரியூர்நாடு, வளப்பூர்நாடு, சேலூர் நாடு, திண்ணனூர் நாடு, தேவனூர் நாடு, திருப்புளிநாடு, ஆலத்துர்நாடு, குண்டனி நாடு, இடப்புளி நாடு, பெறக்கரை நாடு, சித்தூர் நாடு, பைல் நாடு, குண்டூர் நாடுனு இங்க 14 மலைநாடுகள் இருக்கு. 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மலை நாடுகள்ல 305 கிராமங்கள் இருக்கு. எங்க கூட்டமைப்பு, இதுவரை 500 ஏக்கரில் சிறுதானிய விதைப்புக்கு ஊக்கம் கொடுத்து, கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பத்தை சிறுதானிய விவசாயிகளா மாத்தியிருக்கு. அதுபோக சிறுதானியங்களை அரைக்க, 14 மலைநாடுகள்லயும் 14 அரவை இயந்திரங்களை அமைச்சிக் கொடுத்திருக்கோம். இதை சுய உதவிக்குழுப் பெண்கள் இயக்கி வருமானம் பாக்குறாங்க'' என்றார், சிவக்குமார்.
இரட்டை லாபம்..!
மலைக்கிராம மக்கள் பலரையும் சந்தித்துப் பேசித் திரும்பிய நம்மிடம், நிறைவாக பேசிய ஆலிவர்
கிங், ''சிறுதானிய மேம்பாட்டு பணியுடன் நிறுத்திக்கொள்ளாமல், அழியும் நிலையில் உள்ள கொல்லிமலை கலாசாரத்தையும் மீட்டெடுத்து வருகிறது எங்கள் ஆராய்ச்சி நிறுவனம். இந்த மலைநாட்டு மக்களின் பாரம்பரியக் கலைகளை மறு உருவாக்கம் செய்து, அதை செயல்படுத்தி வருகிறோம். தெருக்கூத்து, பாவைக்கூத்து, தேவராட்டம், கும்மி போன்ற கலைவடிவங்களையும் மக்களைக் கொண்டே நிகழ்த்தும் வேலையும் நடக்கிறது. பணப்பயிரான மரவள்ளிக்கிழங்கு வயலில் ஊடுபயிராக சிறுதானியங்களை விதைத்து... பணப்பயிர் மற்றும் தானியப்பயிர் என்று இரண்டு மகசூலை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் நடைமுறைப்படுத்தி வருவதால், இரட்டை லாபம் பார்க்கிறார்கள் விவசாயிகள்.
ஆடிப்பட்டத்தில் கேழ்வரகுடன் சாமை அல்லது தினை, அவரை, மொச்சை, கடுகு விதைகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கைவிதைப்பாக விதைத்துவிட்டால், வெவ்வேறு பருவங்களில் நமக்குத் தேவை யான உணவுப்பொருட்கள் கிடைப்பதுடன் நிலத்தின் மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது. இந்த 17 ஆண்டுகளில் அழியும் நிலையில் இருந்த சிறுதானிய விவசாயத்தை முடிந்த அளவு மீட்டுக் கொண்டு வந்துவிட்டோம். சிறுதானிய உணவின் நுகர்வும் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நல்ல விற்பனை வாய்ப்புக் கிடைக்கும்பட்சத்தில் கொல்லிமலையில் மட்டுமல்ல. நாட்டில் உள்ள பல்லாயிரம் ஏக்கரில் சிறுதானியக் கொடி மறுபடியும் பறக்கும்'' என்றார், மகிழ்ச்சியாக.
பிசினஸ் -ட்வென்டி19 டாட்காம்: சம்பளத்துடன் பயிற்சி தரத் தயார்
4)
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் படிப்பு சார்ந்து பிராக்டிகல் விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்காக, 'இன்டர்ன்ஷிப்’ (Internship) பயிற்சி செய்வது கட்டாயம். இந்த 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை எந்த நிறுவனத்தில் பெறுவது என்கிற குழப்பம் பல மாணவர்களுக்கு இருக்கும். இதுமாதிரியான மாணவர்களை நல்ல நிறுவனங்களில் சேர்ந்து 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக சில வலைதளங்கள் இப்போது வந்துவிட்டன. இந்த வகை நிறுவனங் களில் ஒன்றை சென்னையில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கார்த்திகேயன் விஜயகுமார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் இந்த நிறுவனத்தைப் பற்றி கேட்டோம்.
3 லட்சம் மாணவர்கள்!
''கல்லூரி மாணவர்கள் நல்லபடியாக 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியை செய்து முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ட்வென்டி19 டாட்காம் (http://www.twenty19.com/) என்கிற வலைதளம். 2010-ல் இந்த வலைதளத்தை ஆரம்பித்த போது, இதன் பயனாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்று இதன் மூலம் பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சம் பேருக்கு மேல்.
இந்த எண்ணிக்கையில் 60 சதவிகிதம் பேர் பொறியியல் மாணவர்கள், 20 சதவிகிதம் பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், 10 சதவிகிதம் பேர் மேலாண்மை படிப்பு சார்ந்த மாணவர்கள், மீதி இருக்கும் 10 சதவிகிதம் பேர் முதுகலை கல்வி பயிலும் மாணவர்கள் (எம்டெக் போன்றவை) அடக்கம். தற்போது ட்வென்டி19 டாட்காம் மூலம், மாணவர்களுக்கான ஆன்லைன் மார்க்கெட்டிங், சாஃப்ட்வேர் டெஸ்டிங், போன்ற பலவகையான கோர்ஸ்களை நடத்தி வருகிறோம்'' என்று எடுத்த எடுப்பிலேயே நம்மை ஆச்சர்யப்படுத்தினார் கார்த்திகேயன் விஜயகுமார்.
''தற்போது சுமார் 6,000 நிறுவனங்கள் எங்கள் வலைதளத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்காக எங்களைத் தேடிவரும் மாணவர்களுக்கு நாங்களே அந்த வாய்ப்பைத் தந்து, அவர்களின் தொழில்நுட்ப அறிவை பெருக்கி வருகிறோம்'' என்றவர், இந்த வலைதளத்தைத் தொடங்கியதற்கான பின்னணியையும் எடுத்துச் சொன்னார்.
''2009-ல் நான் தனியாக மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் அமைத்து பணியாற்றி வந்தேன். அப்போது என் நிறுவனத்துக்காக வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். இந்த ஆட்களைத் தேடி எங்கே போவது என்று நானும் என் குழுவினரும் பலவாறாக யோசித்தோம். இறுதியில், கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை அணுகி, இதுபற்றி பேசினோம். அவர்களுக்கு செய்முறை அறிவு கிடைக்கும் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் எங்கள் யோசனையை உடனே ஒப்புக்கொண்டார்கள். பிற்பாடு இதை பரந்துபட்ட அளவில் செய்ய ஆரம்பித்தோம்'' என்றவர், 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி தருவதன் மூலம் எப்படி திறமையான ஊழியர்களை உருவாக்க முடியும் என்பது பற்றி எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
வேலைக்கான பயிற்சி!
கல்லூரியில் படித்து முடித்ததும் அவர்கள் நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டால்தான் புத்துணர்ச்சியுடன் வேலை செய்வார்கள். மீண்டும் பயிற்சி என்கிறபோது அவர்களின் மனநிலை, தாங்கள் இன்னும் மாணவர்கள்தான் என்கிற மாதிரி இருக்கும். ஆனால், படிக்கும்போதே இந்த 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சியைத் தந்துவிட்டால், அவர்களை வேலைக்கு தேர்வு செய்யும்போது பயிற்சி தரவேண்டும் என்கிற அவசியம் இருக்காது. இதனால் மாணவர்களுக்கும் வேலை தரும் நிறுவனத்துக்கும் நன்மையே.
கட்டணம் கிடையாது!
எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு நாங்கள் எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறோம். அது மாணவர்கள் குறித்தும், மானவர்களுக்கு வழங்கும் இன்டர்ன்ஷிப் குறித்தும் வலைதளத்தில் ஃபீட்பேக் குறிப்பிட வேண்டும் என்பதே. எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களை நன்கு விசாரித்தபின்பே அவர்களுக்கான பதிவை ஏற்றுக்கொள்கிறோம். இதன்பிறகே அந்த நிறுவனங்கள் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.
எங்கள் வலைதளத்தில் பதிவு செய்யும் மாணவர்களிடமிருந்து நாங்கள் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. தங்கள் படிப்பு சம்பந்தமான நிறுவனம் எங்கள் வலைதளத்தில் இருந்தால், அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்கான அனுமதியைப் பெறலாம்.
சம்பளமும் உண்டு!
முன்பெல்லாம் 'இன்டர்ன்ஷிப்’ வழங்கும் நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லாத பயிற்சி தந்து வந்தன. ஆனால், வேலைக்குத் தரமான ஆள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு இருப்பதால், 'இன்டர்ன்ஷிப்’ பயிற்சி பெற நினைக்கும் மாணவர்களின் திறமைக்கேற்ப அவர்களுக்கு சம்பள மும் தரத் தயாராக இருக்கின்றன சில நிறுவனங்கள். பெரிய நிறுவனங்களில் 'இன்டர்ன்ஷிப்’ முடிக்கும் மாணவர் களுக்கு அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கவும் வாய்ப்புண்டு'' என்று முடித்தார் கார்த்திகேயன் விஜயகுமார்.
கல்லூரி மாணவர்களுக்கு இந்த வலைதளம் புதியதொரு உலகத்தைத் திறந்து காட்டும் என்பதில் சந்தேகமில்லை!
|
Thursday, June 12, 2014
மார்க்கெட்டிங் மிக அவசியம்
நாம் எந்த தொழில் ஆரம்பித்தாலும் அந்த தொழிலுக்கு, மார்க்கெட்டிங் என்பது மிகவும் அவசியமாகிறது. மார்க்கெட்டிங் என்றவுடன் நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தையும் பத்திரிக்கை விளம்பரத்தையும் மட்டுமே நினைத்து விடாதீர்கள். அதை தவிர பல மார்க்கெட்டிங் வித்தைகள் இருக்கிறது. அதை உங்கள் தொழிலுக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்ளுங்கள்.
தமிழர்களில் பெரும்பாலானோர்கள் மார்க்கெட்டிங் செய்வதை அல்லது விற்பனை செய்வதை விரும்புவதில்லை. இதற்கு காரணம் அவர்களிடமுள்ள கூச்ச சுபாவம் ஆகும். பள்ளி பருவங்களில் நமது குழந்தைகள், பொருளாதாரத்தில் வளர்ந்தநாட்டு குழந்தைகளைப் போல, வெளியில் சென்று பகுதி நேரம் வேலை பார்ப்பதில்லை; அல்லது விற்பனை செய்வதில்லை.
இதுவே அவர்களுக்கு பிற்காலத்தில் கூச்ச சுபாவமாக மாறிவிடுகிறது. நாம் ஒருவரிடம் பேசுவதிலிருந்து, நாம் நினைப்பதை ஆணித்தரமாக எடுத்து கூறுவதிலிருந்து, ஒரு விற்பனையை செய்து முடிக்கும் வரை மார்க்கெட்டிங் என்ற துறை உலாவுகிறது. சிறுதொழில் ஆரம்பிப்பவர்கள் எவ்வாறு மிக மிக குறைந்த பணத்தில் அல்லது பணமே இல்லாமல் மார்க்கெட்டிங் செய்வது?
தரமான அனுபவம் வேண்டும்
செலவே இல்லாத மார்க்கெட்டிங் யுத்தி என்பது வாய்மூலமாக (Word of Mouth) பரவுவதுதான். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கடையை ரோட்டில் பார்த்ததும் சிலர் கடையில் நுழைந்து வாங்க வருவார்கள். ஆனால், நீங்கள் அவர்களிடம் பேசும் விதம், பழகும் விதம், மற்றும் சேவை செய்யும் விதம் இவற்றைப் பொறுத்துத்தான் அவர்கள் உங்கள் கடைக்கு மறுமுறை வருவார்கள். (விலை போன்றவையெல்லாம் உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சமமாக இருக்கும் என்று எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்!)
இதுபோல் அவருக்கு உங்கள் கடையில் ஏற்படும் அனுபவம் இனிமையாக இருக்கும் பொழுது, அவர் உங்கள் கடையைப் பற்றி, அவருக்கு நெருக்கமானவர்களிடம் பரிந்துரை செய்வார்.
இவ்வாறு உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் தலைமுறை தலைமுறையாக உங்களுடன் உறவு கொண்டு இருப்பார்கள். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய மார்க்கெட்டிங் செலவு எதுவும் கிடையாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கடையில் அவருக்கு ஏற்படும் அனுபவம் இனிமையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!
உங்களிடம் பெரும் பணம் இல்லாத பொழுது உங்கள் சேவையை அதிகரிப்பது ஒன்றுதான் உங்களின் மார்க்கெட்டிங் யுத்தியாக இருக்க வேண்டும். இதற்கு அடுத்த கட்டமாக மிகக் குறைந்த செலவில் உங்களுக்கு தொழிலை தேடித்தருவது உங்களது விசிட்டிங் கார்டு (Visiting Card) ஆகும். தொழில் ஆரம்பித்த புதிதில் நீங்கள் சந்திப்பவர்களிடம் எல்லாம் உங்களின் விசிட்டிங் கார்டை கொடுக்கும் பொழுது உங்களது தொழிலுக்கு ஒரு அடையாளம் கிட்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் பொழுது உங்கள் பொருளில் அல்லது உங்களின் சேவையில் விருப்பம் இருப்பவர்கள் உங்களை நேரடியாக தொடர்பு கொள்வார்கள்.
குறைவான செலவில் வரக்கூடிய மற்றுமொரு கருவி தபால் ஆகும். உங்களது தொழிலைப் பற்றி சுருக்கமாக அச்சிட்டு அஞ்சல் செய்யும்பொழுது அது உரியவர்க்கு சென்று கிட்டும். அல்லது உங்களது பகுதியில் உள்ள அனைத்து தபால் பெட்டிகளிலும் நீங்கள் போடலாம்.
அதுபோல் நீங்கள் உங்கள் லிஸ்ட்டில் இருக்கும் 200 அல்லது 300 பேருக்கு அனுப்பும்பொழுது அதிலிருந்து சுமாராக 5% பேர் வாடிக்கையாளர்களாக மாற வாய்ப்பு இருக்கும்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துதல்
இவை எல்லாவற்றையும் விட எந்த தலைமுறையினருக்கும் கிட்டாத ஒரு பொக்கிஷம் நமக்கெல்லாம் கிடைத்துள்ளது. அதுதான் இன்றைய இன்டர்நெட், இ-மெயில் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ சாட் (Audio, Video Chat) ஆகும். இ-மெயில் அனுப்புவதற்கு உங்களுக்கு செலவு ஏதும் கிடையாது. ஒவ்வொரு தொழிலுக்கும் வலைதளம் என்பது இன்று இன்றியமையாதது ஆகிவிட்டது. உங்களது வலைதளத்தை ஒரு குறிப்பிட்ட செலவில் ஆரம்பித்துக் கொள்ளலாம் - அதுபோல் facebook, twitter, linkedIn போன்ற இணையதளங்களில் உங்களது கணக்கைத் துவக்கினால் உங்களது பிஸினஸ் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும் உங்களின் சேவையினால் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களை அணுகி உங்களைப்பற்றிய பரிந்து ரையைக் கேட்கலாம். அப்பரிந்துரையை உங்களது இணையதளத்தில் போட்டு வைக்கலாம்.
அவ்வாறு உங்களைப்பற்றிய பரிந்துரையை தர தயாராக இருக்கும் ஒரு சில நபர்களிடம் அனுமதி பெற்று, புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் யாரேனும் உங்களைப் பற்றி அல்லது உங்கள் நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ரெஃபரன்ஸ் (reference) கேட்டால் அவர்களது பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுக்கலாம்.
ஏனென்றால் புதிதாக வரும் வாடிக்கையாளருக்கு உங்களது சேவை மற்றும் தொழில் செய்கைகள் குறித்து பலவிதமான கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் நீங்கள் கொடுக்கும் ரெஃபரன்ஸ் மூலம் அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவார்கள்.
இன்னும் பல சின்ன சின்ன யுத்திகளையும் நீங்கள் கையாளலாம். உதாரணத்திற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் உங்களது தொழிலின் முகவரி, தொலைபேசி எண்கள், இணையதளத்தின் விலாசம் நீங்கள் விற்கும் பொருட்கள் போன்றவற்றையெல்லாம் நிரந்தரமாக இணைத்து விடலாம். அதுபோல் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்ஸிலும் (SMS) உங்களின் பெயர், தொழிலின் பெயர், இணையதளம் போன்றவற்றை குறிப்பிட்டு அனுப்பலாம்.
புரபொஃஷனல்ஸ் (Professionals) என்று கூறக்கூடிய மருத்துவர்கள், சட்ட நிபுணர்கள், ஆலோசகர்கள், சார்டர்ட் அக்கவுண்டண்ட் (Chartered Accountants) போன்ற இன்னும் பல அறிவுசார் துறைகளில் இருப்பவர்கள் பொது மக்களுக்குள்ள சந்தேகங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணையதளங்கள் மூலமாக தீர்த்து வைப்பதன் மூலமாகவும் அவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு. நாம் எப்பொழுதும் பலருடன் நட்பு மற்றும் தொடர்பு வைத்துக் கொள்வது அவசியம். அது நமது தொழிலுக்கும் உதவியாக இருக்கும். ஆகவே உங்கள் பகுதியில் உள்ள லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்-களில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம். அதேபோல் உங்கள் பகுதியில் உள்ள சமூக அமைப்புகளில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும்பொழுது, நீங்கள் பலரையும் சந்திக்க வாய்ப்புள்ளது. அவற்றின் மூலம் மறைமுகமாக உங்கள் தொழிலும் அபிவிருத்தி அடையும். இவையெல்லாம் சின்ன சின்ன செய்கைகள்தான்.
ஆனால் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு உங்களுக்கு சில ஆண்டுகள் ஆகிவிடும். நாம் மேற்கூறிய முறைகளில் உங்கள் மார்க்கெட்டிங்கை செய்யும் பொழுது, ஒரு ஸ்டார்ட்-அப்-பிற்கு குறைந்த செலவில் நிறைய விளம்பரம் கிடைக்கும் தொழிலும் பெருகும்!
prakala@gmail.com
கையெழுத்தின் தலையெழுத்தென்ன?
கல்விப் பயிற்சிக்கும் கையெழுத்துக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது...
கையால் எழுதுவது இன்னமும் அவசியமா? அப்படியொன்றும் அவசியமில்லை என்றே பல கல்வியாளர்கள் கருதுகின்றனர். கையால் எழுதுவது அந்தக் கால வழக்கம் என்று அந்தப் பழக்கத்தைப் பரணில் தூக்கிப்போட காலம் இன்னும் வந்துவிடவில்லை என்று உளவியலாளர்களும் நரம்பியல் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். கையெ ழுத்துக்கும் கல்விப் பயிற்சிக்கும் ஆழ்ந்த தொடர்பு இருப்பதை விளக்கும் சான்றுகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன.
முதலில் கையால் எழுதப் பழகுவதன் மூலம் குழந்தைகள் பாடங்களை வேகமாகக் கற்றுக்கொள் வதுடன், புதிய கருத்துகளைச் சிந்திக்கவும் ஏற்கெனவே கற்றுத்தரப்பட்டவற்றை மனதில் இருத்திக்கொள்ளவும் நன்கு பயிற்சி பெறுகிறார்கள். வேறு வாரத்தைகளில் சொல்வதானால், நாம் என்ன எழுதுகிறோம் என்பதல்ல - எப்படி எழுதுகிறோம் என்பதே முக்கியம்.
எழுத்தும் மூளையும்
நாம் எழுதும்போது, மூளையுடன் தொடர்புள்ள நரம்புமண்டலத் தொடர் தானாகவே செயல்படத் தொடங்குகிறது என்கிறார் பாரீஸ் நகரில் உள்ள பிரெஞ்சுக் கல்லூரியைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்தானிஸ்லாஸ் தெஹானே. “எழுதப்பட்ட சொல்லில் இருக்கும் அசைவோட்டத்தின் அடிப் படையை மூளை இனம்கண்டுகொள்கிறது. ஒரு வகையான பாவனை ஒத்திகையினை மூளை அடையாளம் கண்டுகொள்கிறது. மூளையில் இருக்கும் இந்த நரம்புத் தொகுப்பு நம்மால் உணர முடியாத வகையில் தனித்துவமான முறையில் பங்களிக்கிறது. கற்றல் என்பது இதனால் எளிமையாகிறது” என்கிறார் அவர்.
இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கரின் ஜேம்ஸ் என்ற உளவியலாளர் 2012-ல் நடத்திய ஆய்வு இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது. இதுவரை எழுதவோ, படிக்கவோ கற்றிராத குழந்தைகளிடம் சிறு அட்டையில் எழுத்து உருவோ, ஒரு வடிவமோ கொடுக்கப்பட்டது. அதைப் போலவே ஓர் உருவத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு மூன்று வழிகள் கொடுக்கப்பட்டன. அந்த மூன்றில் ஒன்றை அவர்கள் பின்பற்ற வேண்டும். அந்த எழுத்து அல்லது உரு மீது டிரேஸ் பேப்பர் என்ற மெல்லிய காகிதத்தை வைத்து, கீழே உள்ளதைப்போல அப்படியே புள்ளிபுள்ளியாகச் சேர்க்குமாறு முதலில் கூறப்பட்டது. அடுத்ததாக, வெள்ளைத் தாளில் அந்த உருக்களை அப்படியே பார்த்து வரையுமாறு கூறப்பட்டது. அதற்கும் அடுத்தபடியாக ஒரு கணினி விசைப்பலகையில் தட்டுமாறு வாய்ப்பு தரப்பட்டது. பிறகு அவர்களுடைய மூளை எப்படி இயங்குகிறது என்பதைக் கண்காணிக்க ஸ்கேனர் கருவியுடன் இணைப்பு தரப்பட்டது.
வெள்ளைத் தாளில் அப்படியே பார்த்து எழுதுமாறு கூறப்பட்டபோது மூளைப் பகுதியில் செயலூக்கம் மிகுந்தது. பெரிய பையன்கள் படிக்கும்போதும் எழுதும்போதும் மூளை எப்படிச் சுறுசுறுப்பாக, விரிவாக வேலை செய்யுமோ அதே வகையில் மூளையின் மூன்று பகுதிகளில் செயல்கள் நிகழ்ந்தன. டிரேஸ் பேப்பர் வைத்து வரைந்தபோதும் கணினியில் விசைப்பலகையைத் தட்டியபோதும் வெகு பலவீனமாகத்தான் மூளை யின் செயல்பாடு இருந்தது.
சுதந்திரமும் சிந்தனையும் அதிகம்
சுயமாக எழுதும்போது எழுத்தின் வடிவத்தை மனதில் வாங்கிக்கொண்டு அதை எங்கே ஆரம்பிப்பது, எப்படி வளைப்பது, எங்கே கொண்டுபோய் முடிப்பது என்பதையெல்லாம் சுயமாகத் தீர்மானிப்பதால் சுதந்திரமும் அதிகம், சிந்தனையும் அதிகம், செயலும் அதிகம். முதல்முறையாகப் பார்த்து எழுதும்போதோ, வரையும்
போதோ அப்படியே அச்சுஅசலாக இருக்காது. சில வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுகள்தான் கற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும். எழுத்தைச் சரியாக வரைய முடியவில்லையே என்று தோன்றி யதும் எழுத்தின் வடிவத்தைக் கூர்ந்து கவனிக்கவும் எழுதும் முறையைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். இது கவனித்தல், கற்றல், நினைவில் வைத்தல் ஆகிய பயிற்சிகளை ஒருங்கே அளிக்கிறது என்கிறார் டாக்டர் ஜேம்ஸ். டிரேஸ் பேப்பர் வைத்து வரையும்போதும் கணினி விசைப்பலகையில் பார்த்துத் தட்டும்போதும் இந்தச் செயல்களுக்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு.
A என்ற ஆங்கில எழுத்தை முதல்முறையிலேயே அப்படியே எழுத வராது என்பதால் குழந்தைகள் அதைத் திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்து அதன் வடிவத்தை அப்படியே கொண்டுவர மூளையின் உதவி நாடப்படுகிறது. இப்படி, பயிற்சி மூலம் மூளையில் பதிந்ததை எழுத்தில் கொண்டுவருவதற்கு கையெழுத்துப் பழக்கம் மிகவும் உதவுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார் ஜேம்ஸ்.
தாங்களாகவே எழுத்தை அமைக்கும் குழந்தை களுக்கும் அதை வெறுமனே வேடிக்கை பார்க்கும் குழந்தைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று மூளையின் செயல்பாட்டைக் கவனித்ததில், தாங்களாகவே எழுத்தை அமைக்கும் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் சிந்தனை கைவழியே எழுத்துருவாக வருவதைக் கண்டார். இந்த முயற்சியானது எழுத்துகளை அடையாளம் காண்பதோடு மட்டும் நிற்பதல்ல.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்ஜீனியா பெர்னிங்கர் என்ற உளவியலாளர் கையெழுத்துப் பழக்கம் தொடர்பாக ஓர் ஆய்வு மேற்கொண்டார். அச்சில் வார்த்து எழுதும்போதும் கையால் சேர்த்தெழுதும்போதும் கணினி விசைப் பலகை மூலம் திரையில் எழுதும்போதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் செயல்கள் நடப்பதைக் கண்டார். ஒவ்வொரு செயலுக்குமான விளைவு தனித்துவத்துடன் திகழ்வதைப் பதிவுசெய்துள்ளார்.
குழந்தைகள் கையால் எழுதியபோது அதிக வார்த்தைகளை அதிக வேகத்தில் எழுதியதுடன் அதிக அளவு கற்பனையையும் வெளிப்படுத்தினர். அவர்களுடைய மூளையைக் கருவி கொண்டு பார்த்து வந்ததில், எழுதுவதற்கும் கற்பனைக்கும் ஆழ்ந்த, நெருக்கமான உறவு இருப்பது தெரிய வந்தது.
சேர்த்தெழுதுதல்
சொந்தமாக ஒரு கட்டுரை எழுதிவாருங்கள் என்று அவர்களுக்கு வேலை கொடுத்தபோது, நல்ல கையெழுத்து உள்ள மாணவர்கள் சுவை யான கட்டுரைகளை எழுதிக் காட்டினார்கள். இப்போதெல்லாம் காப்பி நோட்டுகளில் (இரட்டை வரி, நாலு வரி) சேர்த்தெழுதச் சொல்லும் பழக்கம் குறைந்துவருகிறது.
கற்பதில் குறைபாடு உள்ள சிலருக்கு அச்சில் உள்ள எழுத்துகளைப் படிப்பதில் சிரமமும், கையெழுத்தில் உள்ளதை எளிதில் படிக்கும் ஆற்றலும் காணப்படுகிறது. வேறு சிலருக்கு, இதில் நேர்மாறான தன்மையும் இருக்கிறது. நினைவுக்கும் எழுத்துக்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பையே இவை யெல்லாம் உணர்த்துகின்றன.
சேர்த்தெழுதும் பழக்கமானது சுயக்கட்டுப் பாட்டை வளர்ப்பதுடன் நினைவிழத்தல் நோய் போன்றவற்றிலிருந்தும் தடுக்கக்கூடிய வாய்ப் பிருக்கிறது என்று டாக்டர் பெர்னிங்கர் கருதுகிறார். கையால் எழுதுவதன் பலன் குழந்தைப் பருவம் தாண்டியும் நமக்குத் துணைக்கு வருகிறது. பெரிய வர்களானதும் விசைப்பலகையில் தட்டுவதில் வேகமும் தேர்ச்சியும் ஏற்படலாம். ஆனால், புதிய தகவல்களைப் பெறும் ஆற்றலும் எழுத்தாற்றலும் குறையக்கூடும்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கலிபோர் னியா பல்கலைக்கழகத்திலும் சில மாணவர்களை வெவ்வேறு விதமான எழுத்துப் பயிற்சிகளில் ஆழ்த்தி சோதனை மேற்கொண்டனர். கையால் எழுதிய மாணவர்களே கற்றதை நன்கு பதிவு செய்தனர். கையால் எழுதும் மாணவர்கள் வகுப்பறை
களில் ஆசிரியர் கூறுவதை வரிசை மாற்றியும், தங்களுடைய நினைவேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் எழுதிக்கொள்வது தெரியவந்தது. அதனால், அவர்கள் அந்தப் பாடத்தை நன்கு புரிந்துகொள்வதுடன் எளிதாகவும் மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள். கையால் எழுதுவதன் சிறப்பைப் பலர் வலியுறுத்தினாலும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் அறிஞர் பால் புளூம் ஒப்புக்கொள்ள வில்லை. “கையால் எழுதுவதன் மூலம், முக்கியம் என்று நீங்கள் கருதுவதன் மீது மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள், அதனால்தான் நன்றாகச் சிந்திக் கிறீர்கள் என்று கூறலாம்” என்கிறார்.
Tuesday, June 10, 2014
ரேண்டம் எண் என்றால் என்ன?
பொறியியல் அட்மிஷனில் ரேங்க் பட்டியல் தயாரிப்பதில் ரேண்டம் எண் என்று சொல்கிறார்களே? அது பற்றி விளக்கிக் கூறுங்கள்!
கு. நரேஷ்குமார், கடம்பத்தூர், திருவள்ளூர்.
ஒரே மாதிரியான ரேங்க் மதிப்பெண்கள் (கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள்) பலர் இருக்கும் சூழ்நிலையில், யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண். ஒரே அளவு கட் ஆஃப் மதிப்பெண்களை இரண்டு பேர் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு பேருக்கும் ரேங்க்கை நிர்ணயிப்பது எப்படி? அந்த இரு மாணவர்களும் கணிதப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது முதலில் பார்க்கப்படும். கணிதத்திலும் அவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதையடுத்து இயற்பியல் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால் அதையடுத்து நான்காவது விருப்பப்பாடமாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியல் பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும்.
அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்கள் இருவரது பிறந்த தேதியைப் பார்ப்பார்கள். அதிலும் இருவரும் ஒரே தேதியில் பிறந்திருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வருவது ரேண்டம் எண். இது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும் 10 இலக்க எண்ணாகும். குலுக்கல் முறையைப் போன்று கம்ப்யூட்டர் மூலம் இந்த எண் உருவாக்கப்படுகிறது. இதில் கூடுதலான எண் வருபவர் ரேங்க் அடிப்படையில் முன்னுரிமை பெற்றவராகக் கருதப்படுவார். இந்த ரேண்டம் எண் நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் கவுன்சலிங்கிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கட் ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?
திவ்யா, திருப்பாச்சித்தூர், மதுரை
பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல், பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப்பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும்.
இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளையும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் கணக்கில் 180 மதிப்பெண்களும் வேதியியலில் 180 மதிப்பெண்களும் இயற்பியலில் 190 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள் 182.5 தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களைப் பொருத்தவரை தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற்பயிற்சிப் பாடத்திற்கு (தியரி மற்றும் பிராக்டிக்கலைச் சேர்த்து) நூறு மதிப்பெண்களும் சேர்த்து 200-க்கு எவ்வளவு என்பதன் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் நடைபெறுவதற்கு முன்னதாகவே தொழிற்பயிற்சிப் பிரிவு (வொகேஷனல்) மாணவர்களுக்கான கவுன்சலிங் தனியே நடத்தப்படும்.
பி.ஆர்க். படிப்புகளுக்குத் தனியே ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கவுன்சலிங் நடத்தப்படும். நேட்டா நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200-க்கு எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்துக்கு நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு நூறு மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் கணக்கிடப்பட்டு மாணவர்கள் 200-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.
எனது கட் ஆஃப் மதிப்பெண்கள் 186.5. எனக்கு எந்தப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்?
கொ.அமுதினி, சிவியம்பாளையம், நாமக்கல்
நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை வைத்து எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை இப்போதே திட்டவட்டமாகக் கூற முடியாது. ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டாலும்கூட, நாம் துல்லியமாகக் கணக்கிட்டு விட முடியாது. அதேசமயம், கடந்த ஆண்டு நிலவரத்தை வைத்து உத்தேசமாகத் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டில் எந்தெந்தக் கல்லூரிகளில் எந்தெந்தப் பாடப்பிரிவுகளில் எந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்ற விவரங்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பார்த்து நீங்கள் விரும்பும் கல்லூரியில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவில் எந்த மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நமது மதிப்பெண்களை விட ஒன்றிரண்டு மதிப்பெண்கள் அது குறைவாக இருந்தால் அந்தப் பாடப்பிரிவில் இடம் கிடைக்க சாத்தியம் உள்ளது என்றும் நமது மதிப்பெண்களைவிட ஒன்றிரண்டு மதிப்பெண்கள் கூடுதலாக இருந்தால் அந்தப் பாடப்பிரிவில் இடம் கிடைக்க சாத்தியம் குறைவாக உள்ளது என்றும் கருதலாம். இதைப்போல, அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்து நீங்கள் விரும்பும் கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளைப் பார்த்து முன்னதாகவே பட்டியலிட்டு வைத்துக் கொண்டால், கவுன்சலிங்போது கல்லூரிகளைத் தேர்வு செய்ய உதவியாக இருக்கும். அத்துடன், கவுன்சலிங் தேதிக்கு முன்னதாக உங்களது பட்டியலை அப்டேட் செய்து கொள்ள முடியும்.
அண்ணா பல்கலைக்கழக இணையதள முகவரி: www.annauni.edu
டாக்டர் ஆக என்ன திறமை வேண்டும்?
என். ஹரிபிரசாத்
டாக்டராவதற்கு பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களுடன் வேறு என்ன திறமைகள் வேண்டும் என்பதை விளக்குகிறார் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் குடல் இரைப்பை மருத்துவத் துறை முன்னாள் தலைவர் டாக்டர். ஆர்.சுரேந்திரன்
பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிட்டோம். அடுத்து அந்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கிறது. அடுத்து ஐந்தரை ஆண்டுப் படிப்பு. ஒரு டாக்டராக உருவாக இது மட்டும் போதுமா? அதற்கு ஒரு கனவு வேண்டும். மதிப்பெண்கள் என்பது ஒரு அளவீடு மட்டுமே. அது மாணவர்களின் திறமையை நிர்ணயம் செய்வது கிடையாது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். என்று மருத்துவம் சார்ந்த படிப்புகள் எதை தேர்வு செய்தாலும் சரி, அதனை ஒரு லட்சியமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களால் மட்டுமே நன்றாகப் பரிணமிக்க முடியும்.
சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரத் தேர்வு பெறுகிறார்கள். ஆனால் அதில் ஒரு சில மருத்துவர்களே சமுதாயத்தில் சிறந்த மருத்துவர்களாக உருவாகிறார்கள். புரிதல் இல்லாதபோது யாரோ ஒருவரின் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப படிக்க வேண்டுமே என்ற சூழ்நிலை மாணவர்கள் மத்தியில் உள்ளது. மதிப்பெண்கள் பெற்றுவிட்டோம், பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்று மருத்துவத் துறையை தேர்வு செய்யக்கூடாது. நாம் மருத்துவத் துறைக்கு எதற்காகப் படிக்கச் செல்கிறோம் என்ற கேள்வியை மாணவர்கள் அவர்கள் மனதில் கேட்டுக்கொள்ள வேண்டும். அந்தக் கேள்விக்கு ஓர் உறுதியான பதில் கிடைத்துவிட்டால் தாராளமாக மருத்துவத் துறையை எடுத்து விரும்பிப் படிக்கலாம்.
நம் நாட்டில் 17 வயதில் பள்ளிப்படிப்பு முடித்த ஒரு மாணவரால், தான் என்னவாக ஆக வேண்டும் என்ற முடிவை எடுக்க முடியாது. ஒரு தடுமாற்றம் இருக்கும். குழப்பதோடு எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் தவறுதலாகப் போகும் வாய்ப்பும் உண்டு. ஆனால் இது போன்ற சூழ்நிலை வெளிநாடுகளில் இல்லை. நம் நாட்டில் 17 வயதில் மருத்துவத்துறையில் படிக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பள்ளிப்படிப்பு முடித்ததும் ஏதேனும் ஓர் இளநிலைப் படிப்பை கட்டாயமாக படிக்க வேண்டும். இளநிலைப் படிப்பு முடிந்தவுடன் மருத்துவப் படிப்பில் சேரலாம். அதற்கும் சில விதி முறைகள் உண்டு. மதிப்பெண்கள் மட்டும் அங்கு தேர்வு முறையில் எடுத்து கொள்வது இல்லை. ஆப்டிடியூட் மற்றும் அட்டிடியூட் தேர்வு வைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதனால் அங்கு திறமை வாய்ந்த டாக்டர்கள் உருவாகிறார்கள். ஆனால் அது போன்ற முறைகள் இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் தேர்வு முறையில் இல்லை.
மருத்துவத்துறையில் தற்போது யாரும் எம்.பி.பி.எஸ். படிப்போடு நிறுத்தி விடுவதில்லை. மேற்கொண்டு முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் படிக்கும்போதே திட்டம் போட்டு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் மாணவர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மருத்துவம் சார்ந்த புதிய விஷயங்களை தினமும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தேடல்கள் அதிகரிக்கும்.
மருத்துவத்துறையில் தற்போது யாரும் எம்.பி.பி.எஸ். படிப்போடு நிறுத்தி விடுவதில்லை. மேற்கொண்டு முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் படிக்கும்போதே திட்டம் போட்டு வைத்துக் கொள்கிறார்கள். இதனால் மாணவர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மருத்துவம் சார்ந்த புதிய விஷயங்களை தினமும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தேடல்கள் அதிகரிக்கும்.
மாணவர்கள் கவுன்சலிங் செல்லும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பெற்றோருக்காக படிக்கப் போகிறோமா? மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையில் படிக்கப் போகிறோமோ? பணம் சம்பாதிப்பதற்காகப் படிக்கப் போகிறோமோ? பணம் சம்பாதிப்பதற்கு உலகில் நிறைய வழிகள் உள்ளன. இதுபோன்ற சிந்தனையுடன் இருக்கும் மாணவர் டாக்டர் படிப்பில் சேர்ந்து டாக்டர் பட்டத்தைப் பெற முடியும். ஆனால் சிறந்த டாக்டர் ஆவது சிரமம்.
ஒரு நல்ல டாக்டர் என்பவர், நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை அவர்களுக்கு இருந்து பார்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான சிகிச்சையை முறையாக தர முடியும். வலியுடன் வரும் மனிதனுக்கு அந்த வலியை போக்கி, நலமுடன் இருக்கச் செய்யும் போது அந்த மனிதன் சொல்லும் நன்றி வேறு எதற்கும் ஈடாகாத ஒன்று. மரணத்தின் கடைசித் தருவாயில் இருக்கும் மளிதர்களை காப்பாற்றும் போது கிடைக்கும் மன திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. கடினமான உழைப்பும், சிதறாத குறிக்கோளும் கொண்டுள்ள மாணவர்கள் நிச்சயமாக சிறந்த டாக்டராக சமுதாயத்தில் ஜொலிக்க முடியும்.
ஐராவதம் மகாதேவனுக்கு விருது
மும்பை ஏசியேட்டிக் சொசைட்டி வழங்கும் கௌரவமிக்க விருதான கேம்பெல் நினைவு தங்கப் பதக்கம் பெற சர்வதேசப் புகழ் பெற்ற கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் ‘தினமணி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவரது கல்வெட்டியல் துறை ஆய்வுகளை கௌரவிக்கும் வகையில், வருகிற நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் நிறுவன தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஐராவதம் மகாதேவன், பத்மஸ்ரீ விருது, ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப், தொல்காப்பியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
ஐராவதம் மகாதேவனுக்கு விருது
மும்பை ஏசியேட்டிக் சொசைட்டி வழங்கும் கௌரவமிக்க விருதான கேம்பெல் நினைவு தங்கப் பதக்கம் பெற சர்வதேசப் புகழ் பெற்ற கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் ‘தினமணி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவரது கல்வெட்டியல் துறை ஆய்வுகளை கௌரவிக்கும் வகையில், வருகிற நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் நிறுவன தின விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ஐராவதம் மகாதேவன், பத்மஸ்ரீ விருது, ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப், தொல்காப்பியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
Subscribe to:
Posts (Atom)