Tuesday, September 30, 2014

காப்பி கடை!

மூன்று ஆண்டுகளுக்கு முன் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது காபி குடில். காபியைத் தவிர பாரம்பரிய பானங்களும் கிடைக்கும் இடம். இன்று அது மெல்ல மெல்ல கொல்கத்தா வரை தன்னுடைய கிளைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வித்தியாசமான முயற்சியின் பின்னணியில் இருப்பவர்கள் மூன்று இளைஞர்கள். பள்ளித் தோழர்களான ஆர். ஜெயராமன், ஆர். வெற்றிச்செல்வன், கே.குருநாதன் ஆகிய மூவருமே பொறியியல் பட்டதாரிகள். காரைக்குடி, கும்பகோணம், தஞ்சையை சொந்த ஊராகக் கொண்டவர்கள். படித்து முடித்தவுடன் ஐ.டி., துறையில் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைத்தது.  இருந்தாலும் அந்த வேலையை விட்டு விட்டு, ரிஸ்க் எடுத்து இந்த காபி குடிலை ஆரம்பித்துள்ளனர்.

‘தனியாக தொழில் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?’ என்று அவர்களிடம் கேட்டபோது, ‘பள்ளி நாட்களில் இருந்தே எங்கள் மூவருக்கும் பிடித்த விஷயங்களில் ஒன்று நன்கு சாப்பிடுவது. அதிலும் வீட்டில் செய்த ருசியான உணவுகள் என்றால் ஒரு கை பார்த்துவிடுவோம்.  பள்ளி முடித்தவுடன் வேறு வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படித்தோம். ஆனாலும் பள்ளி நாட்களில் இருந்த நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது..." என்று தங்களின் பள்ளி நாட்கள் பற்றி நினைவுகூர்கிறார்கள்.

பொறியியல் முடித்தவுடன் மூவரில் குருநாதன் மட்டும் டாடா மோட்டார்ஸில் சர்வீஸ் என்ஜினீயராக வேலையில் சேர, மற்ற இருவரும் எம்.பி.ஏ., படித்திருக்கிறார்கள். முடித்தவுடன் வேறு வேறு கம்பெனிகளில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்தது.

எங்களின் வேலை என்பது தினமும் நிறைய மக்களை நேரடியாக சந்திப்பதாக இருந்தது. என்னதான் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாலும் கல்லூரியில் படித்தபோது எப்போது நாங்கள் சந்தித்தாலும் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தைப் பற்றி பேசிக்  கொண்டே இருப்போம். வேலையில் சேர்ந்த பிறகு, தினமும் நிறைய மக்களைச் சந்தித்தபோது, ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டோம். ஆரோக்கியமான நல்ல உணவை அனைவருமே விரும்புகிறார்கள். ஆனால் அவ்வளவு சுலபத்தில் அது கிடைப்பதில்லை. நம் மூவருக்கும் சாப்பிட ரொம்ப பிடிக்கும். ஏன் அதையே தொழிலாக செய்யக் கூடாது என்று நினைத்து அதற்கான  வேலையை ஆரம்பித்தோம்.

எங்களுடைய கனவே பெரிய பெரிய மால்களில் இருக்கும் உணவு மையங்களைப் போல (food court) ஒரு ரெஸ்ட்டராண்ட் தொடங்க வேண்டும் என்பதுதான்.  எங்களது ஐடியா இதுதான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உணவுப் பழக்கம், அந்தப் பகுதிக்கென்ற பிரத்யேக உணவு வகைகள் உள்ளன. காரைக்குடி, மதுரை, தஞ்சை, நெல்லை என்று அந்தந்தப் பகுதி உணவகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க தனித்தனி குடில்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். வட்ட வடிவில் எல்லாக் குடில்களும் இருக்க, தனியாக நடுவில் ஒரு காபி குடில். தங்களுக்குப் பிடித்த உணவை சாப்பிட்டு விட்டு கடைசியில் காபி குடிலில் வந்து காபி குடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் ஆசை. ஆனால், இவ்வளவையும் செய்யும் அளவிற்குப் பொருளாதார வசதி கிடையாது.
இதனால் குறைந்த முதலீட்டில் முதலில் மத்தியில் இருக்கும் காபி குடிலை மட்டும்  தொடங்கலாம் என்று முடிவு செய்தோம். சரி, காபியை எப்போது குடிக்கிறோம்? ஒன்று, காலையில் எழுந்தவுடன். இரண்டாவது, வேலைக்கு நடுவில் ஒரு சிறிய பிரேக் தேவைப்படும்போது. எல்லோருக்குமே இப்படி தங்களைப் புத்துணர்வு (refresh) செய்து கொள்ளத்தான் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி வந்தது. அதை முதலில் தெரிந்துகொள்ளலாம் என்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, கோவை, தஞ்சை, ஈரோடு, சென்னை என்று தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, நேரடியாக பலதரப்பட்ட மக்களை சந்தித்து வேலைக்கு நடுவில் எப்படி உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பிடிக்கும் என்று கேட்டபோது, 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் சொன்ன பதில் காபி, டீ குடிப்போம் என்பது. பலருக்கும் வீட்டில் போடும் காபிதான் பிடித்திருக்கிறது. சென்னை பல ஊர்கள், பல மாநிலத்தவர்கள் என்று இருக்கும் நகரம். சென்னை மக்களுக்கு நல்ல காபி கிடைத்தால் பரவாயில்லை என்று இருக்கிறது.

நாங்களும் கும்பகோணம், தஞ்சை, காரைக்குடி என்று காபிக்குப் பெயர் பெற்ற ஊரைச் சேர்ந்தவர்கள். இந்த ஊர்களின் பெயரில் தற்போது பல பகுதிகளில் காபி தருகிறார்கள். இவர்களில் இருந்து வித்தியாசப்படுத்தவும் கொடுப்பதைப் பாரம்பரியத் தரத்துடன் தரவும் முடிவெடுத்து, தமிழகத்தில் கிடைக்கும் எல்லா காபியையும் ஒரு ரவுண்ட் ருசி பார்த்தோம்.

எல்லா காபியிலும் (சில பெரிய ஹோட்டல்கள் தவிர) 60 சதவிகிதம் காபி, 40 சதவிகிதம் சிக்கரி கலந்திருந்தது. 100 சதவிகிதம் சிக்கரி கலக்காத காபி தரவே முடியாதா என்று பார்த்தால் ஒரு கிலோ காபியின் விலை 500 ரூபாய். சிக்கரி 100 ரூபாய்க்குள் கிடைக்கிறது. காபி ஜாம்பான்கள் நரசுஸ் காபி சாரதி, சேலம் அன்னபூர்ணா சுப்ரமணியம் போன்றவர்களைச் சந்தித்து எங்களுடைய கான்செப்டைச் சொல்லி, நல்ல காபி எப்படி தருவது என்று கேட்டோம். அவர்கள் தங்களுடைய துறைக்குப் படித்த இளைஞர்கள் வருகிறார்கள் என்ற உற்சாகத்தோடு பல டிப்ஸ்களைத் தந்தார்கள்.

மக்களைச் சந்தித்துப் பேசியபோது,  ‘காபியுடன் என்ன சாப்பிடுவீர்கள்’ என்று கேட்டோம். பிஸ்கெட் என்ற பதிலை நாங்கள் எதிர்பார்க்க, ‘சுண்டல் சாலட்’ என்று தமிழகத்கதின் பல பகுதிகளில் இருந்தும் பதில் வந்தது. ‘அதுதான் சத்து’ என்றும் சொன்னார்கள். ‘அவித்த வேர்க்கடலை, கறுப்பு கொண்டைக் கடலை, மக்காச் சோளம் இவற்றை மாலை நேரத்தில் காபியுடன்  சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்’ என்றும் சொன்னார்கள். இவை எங்களை வழி நடத்தின" என்றனர்.

‘எல்லாம் சரி, காபி குடில் ஆரம்பிக்க இடம் வேண்டுமே? அதை எப்படி சமாளித்தீர்கள்?’ என்று கேட்டபோது,  ஜெயராமன் சொன்னார்: நான் தஞ்சை சாஸ்த்ரா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவன். என்னுடைய பேராசிரியர்கள், கல்லூரி முதல்வரை  அணுகி எங்களின் யோசனையைச் சொன்னவுடன் மகிழ்ச்சியாக கல்லூரி வளாகத்திலேயே இடம் கொடுத்தார்கள்" என்றார். தொடர்ந்து பேசிய வெற்றிச் செல்வன், கல்லூரி மாணவர்களிடையே காபிக்கு வரவேற்பு   இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அமோக வரவேற்பு. 120 மி.லி., காபி 10 ரூபாய். மாணவர்களுக்கு அது பெரிய தொகை இல்லை. காபியின் வெற்றியைத் தொடர்ந்து நம்முடைய பரம்பரிய பானங்களான பாதாம் பால், பனங்கற்கண்டு பால், சுக்கு காபி, டீ என்று சேர்த்துக் கொண்டோம்.  எது எந்தச் சுவையில் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படித் தருகிறோம். அதுதான் எங்களின் வெற்றி" என்றார்.

தொடர்ந்து பேசிய குருநாதன், இந்தப் பொருட்கள் எல்லாம் எங்கே விளைகிறதோ, அங்கே நேரடியாகப் போய் வாங்குவோம். உதாரணமாக பனங்கற்கண்டு கும்பகோணம், விருதுநகர் போன்ற இடங்களில் அதிகம். அங்கு போவோம். தேயிலைக்கு நீலகிரி என்று அந்தந்த இடத்திற்கே போய் வாங்குகிறோம். காபியைப் போலவே இந்தப் பானங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் முட்டையில் தயாராகும் பல வகைகளையும்  eggsclusive என்ற பெரில் தருகிறோம்" என்றவரைத் தொடர்ந்து பேசிய வெற்றிச்செல்வன், சாஸ்த்ராவைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. வளாகத்தில் அடுத்த காபி குடிலைத் தொடங்கினோம். அங்கும் எங்களுக்கு ஏகோபித்த வரவேற்பு.

ஒரு காபி குடிலில் 200 முதல் 250 காபி ஒரு நாளைக்கு விற்கிறது. மெஷின்களைப் பயன்படுத்தாமல் மனித ஆற்றலின் உதவியோடே காபி பொடி அரைப்பது முதல் அனைத்தையும் செய்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான காபி விற்றால் அதற்கு ஏற்ப எப்படி சமாளிப்பது, எங்களின் லட்சிய ரெஸ்ட்டாரெண்ட்டை அமைக்க செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்.

தற்போது சாஸ்த்ராவில் 2, சென்னையில் ஒன்று, ஈரோட்டிலும், கொல்கத்தாவிலும் தலா ஒன்று என்று காபி குடில்கள் உள்ன. 2017-க்குள் எங்களைப் போல முதல் தலைமுறை தொழில் முனைவோர் 100 பேரை உருவாக்க வேண்டும். அதற்காக விருப்பம் உள்ள யார் வந்தாலும் அவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி தர தயாராக உள்ளோம். பயிற்சிக்குப்பின் காபி குடில் என்ற பெயரில் franchise  வைத்து நடத்தலாம். தவிர, அரசு  மருத்துவமனைகள், அரசு அலுவலக வளாகங்களிலும் காபி குடில்களை அமைக்க அரசின் அனுமதியைக் கேட்டிருக்கிறோம்" என்றார்.

லட்சம் லட்சமாக செலவு செய்து உன்னை   என்ஜினீயரிங், எம்.பிஏ.,ன்னு படிக்க வெச்சா... காபி கடை வைக்கிறேன்னு சொல்றியே, படிக்காமலேயே இதைச் செஞ்சிருக்கலாமே?’ என்று ஆரம்பத்தில் கேட்ட பெற்றோர்கள், உறவினர்கள் இப்போது எங்களைப் புரிந்துகொண்டார்கள். அதுவே எங்கள் வெற்றிதானே..." என்கிறார்கள் மூவரும்.

சீன மொழியை விரிவாகக் கற்றுக்கொள்ள ...........

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு சீனம். இந்த நூற்றாண்டு ஆசியாவிற்குரியது என்பதைப் பல வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் சீனமும் இந்தியாவும் முக்கியப் பங்காற்றும் என்பது அவர்களது கணிப்பு.
 
19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து உலகின் பெரிய சக்தியாக வளர்ந்ததையடுத்து ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றது. சீனம் வளர்ச்சி பெறுவதையடுத்து சீன மொழி உலகில் முக்கியத்துவம் பெறலாம். சீனத்தில் இன்று அரசு உள்பட பெரும்பாலான அலுவல்கள் சீன மொழியிலேயே நடை பெறுகின்றன. 
 
இவற்றைக் கருத்தில் கொண்டு நம் இளைஞர்கள் எதிர்காலத்தில் சிறப்புப் பெற ஏதுவாக உங்கள் ‘புதிய தலைமுறை’ சீன மொழியை எளிய முறையில் தமிழ்வழி அறிமுகப்படுத்துகிறது. முதலில் சில முக்கியமான சொற்களைக் கற்றுக் கொள்வோம். அதன் பின் உச்சரிப்பு  வாக்கியங்கள் ஆகியவற்றைப் படிப்படியாக அறிந்து கொள்ளலாம்.
 
பாடங்களை கூர்ந்துபின்பற்றி வாருங்கள். ஒவ்வொரு நான்காவது வாரமும்  மூன்று கேள்விகள் கேட்கப்படும் அவற்றிற்கான விடைகள் அதற்கு முன் வெளியான பாடங்களில் இருக்கும். சரியான விடை எழுதும் 5 பேருக்கு சீன வானொலி பரிசு வழங்கவிருக்கிறது.
 
உங்களுக்குச் சீன மொழிப் பாடங்களை சீன வானொலியின் ஒத்துழைப்போடு இந்த வாரம் முதல் வழங்குகிறோம். இந்தப் பாடங்களை சீனம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்ற சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள்,   தயாரித்துள்ளார். அவருக்கும் அவரது சக பணியாளர்கள் வான்மதி, மீனா ஆகியோருக்கும் நன்றி.
 
சீன மொழியை விரிவாகக் கற்றுக்கொள்ள விரும்புவோர் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணையதளம் மூலம் கற்றுக் கொள்ளலாம். இணையதள முகவரி;  http://tamil.cri.cn/chinese.htm 

உங்கள் குழந்தையும் சாதிக்கும்

நூல் : உங்கள் குழந்தையும் சாதிக்கும்
 
ஆசிரியர் : கிருஷ்ண.வரதராஜன்
 
பக்கம் : 96
 
விலை : ரூ. 125
 
பதிப்பகம் : சாதனா பதிப்பகம், S2, சாய்மந்த்ராலயா, 6, வேணுகோபால் வீதி, சென்னை – 603 202.
 
ஒருவர் தனது பகுதியில் திடீர் திடீர் என நிலநடுக்கம் ஏற்படுவதால் தனது குழந்தையை வெளியூரில் இருக்கும் தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார். இரண்டு நாட்களில் அங்கிருந்து தந்தி வருகிறது. 
 
‘நிலநடுக்கத்தை வேண்டுமானால் இங்கே அனுப்பிவிடுங்கள். தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். தயவு செய்து உங்கள் குழந்தையைக் கூட்டிச் செல்லுங்கள்.’
 
-இது குழந்தைகளின் குறும்புத்தனத்தைச் சமாளிப்பது சாமானியமல்ல என்பதை உணர்த்தும் கதை. குழந்தைகளைப் பற்றி சொல்லும்போது பெரும்பாலும் இந்தக் கதையைக் குறிப்பிடுவது உண்டு. 
 
குழந்தைகளுக்கு எதையும் கற்றுத்தருவதைவிட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதே பெற்றோர்களின் கடமை. குழந்தைகள் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களின்  தேடலை தீவிரப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைகள் எதைக் கடைபிடிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதை முதலில் நீங்கள் கடைபிடியுங்கள் என்று புத்தகம் முழுக்க பெற்றோர்களுக்கு அறிவுரைகளை அனுசரணையாகக் கூறுகிறார் நூலாசிரியர்  கிருஷ்ண.வரதராஜன். 
 
உலகத்திற்கு வரும் ஒவ்வொரு குழந்தையும் தன்னால் முடியும் என்ற நேர்மறைச் சிந்தனையுடன் வருகிறது. நாம்தான் அவர்களிடம் நீ அதைச் செய்யாதே, இது உன்னால் முடியாது என்று எதிர்மறைச் சிந்தனையைக் கற்றுக்கொடுக்கிறோம் என்பதை இந்த நூலில் உள்ள உதாரணங்கள் உணர்த்துகின்றன. 
 
தங்கள் குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்கான புத்தகம் இது. மேலும் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கும், பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குமான வழிகாட்டி நூலும்கூட.
 
நூலிலிருந்து
 
”காவிரி ஆறா?"
 
”ஆம், காவிரி ஆறு."
 
”அதில் தண்ணீர் ஓடுகிறதா?"
 
”இல்லை"
 
”சரி, இப்போது அதற்குப் பெயர் என்ன?"
 
”காவிரி ஆறுதான்"
 
”தண்ணீர் ஓடினால்தான் ஆறு. இப்பொழுதுதான் தண்ணீர் இல்லையே? காவிரி தரை என்றல்லவா நீங்கள் சொல்லவேண்டும்?"
 
”இன்று ஓடவில்லை என்றால் என்ன?  நேற்று ஓடியிருக்கிறது. நாளை ஓடும்" என்றார் உறுதியான குரலில்.
 
”நான் கேட்டேன், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத காவிரி மீது கூட நீங்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், நாளை இதில் தண்ணீர் வருமென்று. ஆனால் அந்த நம்பிக்கை ஏன் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உங்கள் குழந்தைகள் மீது இல்லை, நாளை நிச்சயம் இவர்கள் ஜெயிப்பார்கள் என்று".
 

Wednesday, September 24, 2014

The Benefits of Chess

hess has long been the game of gentleman, geniuses, philanthropists and other gifted people. This has formed an incredibly wide misconception around the word that ONLY geniuses and gifted people can play the game and it is strictly designed for them.
If someone was asked to name the first things that come to their mind when they hear ‘chess player’, it would be ‘old’, ‘smart’, ‘talented’, ‘genius’ and many other things unrelated to everyday people… But once again, this is a misconception – it is a false belief injected to people by mass media.
The reality of chess is different – it actually is an incredibly beneficial pastime, because playing chess results in better brain function, improved memory and cognitive abilities, strategic thinking and attention improvement. All of these benefits are directly related to the practice of chess, both in real-life and virtual environments, which means that chess is the answer to the question – ‘Is there a game where I can have fun AND get benefits from?’

Let’s look at some of those benefits in more detail:

• Better Brain Function: the brain is remarkable – it is responsible for our mental performance and it is the most crucial organ in the human body. When the brain has no stimulation, the cells inside slowly die, it’s an example of "if you don't use it, you lose it” moto, however, chess is a tool which gives users a rigorous mental workout. Let’s look at a quick example: to get the most benefit from a physical workout, you need to exercise both the left and right sides of your body. Studies show that in order to play chess well, a player must develop and utilize his or her brain’s left hemisphere, which deals with object recognition, as well as the right hemisphere, which deals with pattern recognition. Over time, thanks to the rules and techniques involved in the game, playing chess will effectively exercise and develop not one but both sides of your brain. Scientists also claim that playing chess can improve mental age by up to 14 years. How’s that for a workout?
• Improved Memory: scientists have shown that chess helps keep Alzheimer's disease at bay, which is directly related to the loss of memory. There are many tactics and strategies in chess and a good player should know most of them, but it is not the case of sitting and learning the tactics by heart. Over the course of many games, players develop an almost natural feeling of when to use a certain strategy or tactic – this is where the benefits of improved memory shine – players can quickly remember and use different strategies or tactics. The best part is that this benefit is not only limited to chess – improved memory can be noticed in other areas of life such as academic performance, responsibilities, commitments, etc.
• Improved Cognitive Abilities: Cognitive ability is a very broad term, it includes perception, motor, language, visual and spatial processing and executive functions. This is a big list and it covers almost everything that you do. For example with executive function you can immediately recognize that the thing in front of you is square shaped and not round. While playing chess, EACH cognitive ability is stimulated because the game covers every part of our actions. So the next time you see chess players playing, think about the ‘exercise’ they’re going through.
• Strategic Thinking: Chess is considered to be a strategy game – this means that in order to win, you must have a better plan of action than your opponent. But no one is born with the ability to conceive great strategic moves, it must be learned by practicing. To most people, strategy is associated with war and army generals planning their attacks with strategic moves, this example is not far from chess. Just like a general commands his army, a chess player commands his or her own pieces in a battle of black and white. So playing chess greatly improves the ability to develop certain strategies and plans. And no, this benefit is not only useful to army generals and chess players – a good strategic mind is much more productive, because it creates the best plan of action for every daily task. Also, strategic thinking is a life savior in academic and work environments, because everything is planned one step ahead and there’s always a plan B.
• Attention Improvement: the epidemic of the 21st century is ADHD. Adults and children alike are finding it harder and harder to focus at school and work, less is being done and productivity declines rapidly. With so many distractions, it is easy to diagnose yourself with attention deficit disorder, but there are better ways of dealing with this phenomena than heading to your local drugstore. Chess DEMANDS attention, in other words, if your mind is not focused on the game – you lose, simple as that. With such an immediate punishment for lack of attention, the mind is trained to be focused and attentive. This results in better performance in schools and workplaces, less time wasted and more victories achieved.

Now that you know the truth about chess it should be more than enough motivation to go and win yourself a match or two. There is a huge community of fellow chess players and coaches waiting for you at Chessity.com, where the attitude of ‘gaming your training’ is breaking new grounds.

Monday, September 22, 2014

At What Age is It Better to Learn to Play Chess?

age to play chess

At what age is it better to learn to play chess? Maybe at 5 years old maybe at 10.
Basically the earlier kid starts to play chess the better, since young mind is more flexible and learns things faster.  
However, I believe that it’s mostly matters not when you start playing chess, but how much time and effort you dedicated to that game. If you start playing at 6 you may become a grandmaster by 16 with right training and talent. If you started at 30 maybe you’ll be able to become a grandmaster by 40.

Adults however have a lot less time to play chess since they have work, family, children and lots of problems they have to think about besides chess.

That is also why players generally do not obtain the highest chess title if they start playing late.
Here is the list of when famous players have learned to play chess:
  • Alekhine learned at the age of 7 from his older brother. His mother also played chess and he learned chess from his relatives.
  • Anand learned the game of chess at age 6, taught by his mother.
  • Adolf Anderssen learned at the age of 9 from his father.
  • Blackburne was 19 years old before he learned chess. He learned the game from a chess book he had purchased.
  • Humphrey Bogart learned chess at 13 and was later a chess hustler.
  • Boleslavsky learned at age 9 at the House of Pioneers in the USSR.
  • Botvinnik learned at the age of 12, probably from his family.
  • de la Bourdonnais learned at 19 while in college.
  • Walter Browne learned the game at age 8 somewhere in Brooklyn.
  • Capablanca claimed he learned chess at the age of 4 by watching his father play chess against friends.
  • Ray Charles learned at age 35 in a hospital to fight drug addiction.
  • Irving Chernev learned at the age of 12 from his father.
  • Mikhail Chigorin learned at the age of 16 from a school teacher in Russia.
  • Arnold Denker learned at the age of 12 from his oldest brother.
  • Jan Donner learned at the age of 14, taught by his friends.
  • Max Euwe learned at the age of 9 from his parents.
  • Larry Evans learned at age 12 from his brothers and his father.
  • Reuben Fine learned chess at the age of 8 from his cousin.
  • Bobby Fischer learned at the age of 6 from his older sister.
  • Nona Gaprindashvili learned at the age of 5 from her 5 older brothers.
  • Gligoric learned about age 12 from a boarder in his parents home.
  • Heubner learned at the age of 5 from his father.
  • Igor Ivanov learned at age 5 from his mother.
  • John Jarecki learned at the age of 6 from his father (a medical doctor).
  • Mona Karff learned at age 9 from her father.
  • Karpov learned chess at the age of 4 at the Pioneers Palace.
  • Kasparov learned at age 5 from his father, who later died in a car crash.
  • Paul Keres learned at the age of 4, probably from his parents.
  • George Koltanoski learned chess at the age of 14 from his father, a diamond cutter.
  • Bent Larsen learned at age 6, probably from his family.
  • Edward Lasker learned at age 6 from his father.
  • Emanuel Lasker learned at age 11 from his older brother.
  • Bill Lombardy learned at age 9 from a neighbor.
  • Frank Marshall learned chess at age 10 from his father.
  • Mecking learned at age 6, probably from his family.
  • Vera Menchik learned at age 9 from her father.
  • Paul Morphy learned at age 8 from his father.
  • Nakamura learned how to play chess at the age of 7.
  • Nimzovich learned chess at the age of 8.
  • Victor Palciuskas learned at age 5 from his uncle.
  • Louis Paulsen learned at age 5 from his father.
  • Petrosian learned chess from his parent at age 8. His parents died a few years later during World War II.
  • Philidor learned at age 10 from his musician friends.
  • Pillsbury learned at age 15.
  • Susan Polgar learned chess at the age of 4 from her parents.
  • Stuart Rachels learned at age 8 from an older brother.
  • Reshevesky was playing chess at 4 and giving simuls at age 5.
  • Rossolimo learned chess at age 7 from his mother.
  • Diane Savereide learned chess at age 17 from her brother. A few years later she was the top woman chess player in the U.S.
  • Gabriel Schwartzman says he learned chess at the age of 2.
  • Seirawan learned chess in Seattle at the age of 12.
  • Smyslov learned chess at the age of 6 from his father and from the chess books in his father's library.
  • Soltis learned chess at age 9.
  • Spassky learned chess at the age of 5.
  • Steinitz learned chess at the age of 12 from friends.
  • Sultan Khan learned modern chess at age 21. Prior to that, he learned Indian chess at a much younger age.
  • Mikhail Tal learned at the age of 8 by watching patients play chess at the hospital his father worked at.
  • Tarrasch learned chess at the age of 15 from a chess book.
  • George Thomas learned chess at the age of 13 from his mother, a top British Ladies' Champion.
  • Topalov learned at age 9.
  • Norman Whitaker learned at age 14 from his father.
  • Michael Wilder learned at the age of 6 from his father.
List of youngest Grandmasters ever:

YearPlayerCountryAge
1950David Bronstein Soviet Union26 years
1952Tigran Petrosian Soviet Union23 years
1955Boris Spassky Soviet Union18 years
1958Bobby Fischer United States15 years, 6 months, 1 day
1991Judit Polgár Hungary15 years, 4 months, 28 days
1994Péter Lékó Hungary14 years, 4 months, 22 days
1997Etienne Bacrot France14 years, 2 months, 0 days
1997Ruslan Ponomariov Ukraine14 years, 0 months, 17 days
1999Bu Xiangzhi China13 years, 10 months, 13 days

2002Sergey Karjakin Ukraine
12 years, 7 months, 0 days

Thursday, September 18, 2014

ஜோதிடம் பலிக்குமா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? சமீபத்தில் கல்யாணத்தின்பொருட்டு பொருத்தம் பார்க்கச் சென்றிருந்தோம். பொருத்தம் இல்லை என்றார் ஜோதிடர். அதேநேரம், 'ஜாதகப் பொருத்தம் அருமையாக இருப்பதாக எங்கள் ஜோதிடர் கூறுகிறார். எனவே, மேற்கொண்டு பேசலாம்’ என்கிறார்கள் பெண் வீட்டார்.
இப்படிக் குழப்பமான பலன்களும் தீர்வுகளுமே கிடைக்கும் எனில், ஜோதிட சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கையே அற்றுப் போய்விடாதா? ஜோதிடத்தை ஏற்பதா, தவிர்ப்பதா?
இ.நெல்லையப்பன், தாழையூத்து
முதல் கோணம்...
ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவங்கள் ஏட்டில் இருக்கும். அதை மனதில் ஏற்றிக்கொள்ளவில்லை. விளைவு, ஜோதிடம் சொல்பவரின் அனுபவமே ஜோதிடமாக மாறிவிட்டிருக்கிறது. சூழலுக்கு உகந்த விளக்கம் என்பது அதன் பலனாக உருவெடுத்தது. அதற்கென்று பல முகங்கள் உண்டு. மக்களின் சிந்தனை ஓட்டத்துக்கு உகந்த முறையிலான பல விளக்கங்களும் உண்டு!
பாமரர்கள் ஜோதிட அறிவு அற்றவர்கள். அது, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பலன் சொல்லும் சிலருக்கு சாதகமாகிவிட்டது. ஜோதிடர்களில் பலர் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டு முன்னேற முனையமாட்டார்கள். அவர்களுடைய  மனம் அதற்கு இடமளிக்காது. அவர்களது விளக்கம் ஜோதிடம் தெரியாதவர்களிடம் வெற்றி பெறும். அப்பாவி மக்களிடம்தான் அவர்கள் பெருமை பெற வேண்டும். அவர்களைப் பிரபலம் ஆக்குவது, அப்பாவி மக்கள்தான்.
? நாம் ஜோதிடத்தை ஏற்பதற்கும், ஜோதிடர்கள் இடையிலான கருத்துப் பரிமாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஜோதிடத்தை ஏற்றவர்களின் மனம் இனம் தெரியாத பயத்தில் ஆழ்ந்திருக்கும். ஜோதிடம் தவிர, மற்ற துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்றாகக் கலந்துரையாடி, உயர்ந்த கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, உண்மையை உள்வாங்கி உயர்ந்து விளங்க முற்படுவார்கள். ஆனால், ஜோதிடத் துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் தத்துவங்களை விளக்கும் நூலறிவை ஒதுக்கிவிட்டு, தங்களின் அனுபவத்தையே தத்துவமாக்கி, மற்ற ஜோதிடர்களின் தகவல்களை உதறித் தள்ளுவார்கள். இது, சமூகத்துக்கு உண்மையான பலனை அளிக்காது.
பலர் ஜோதிட பட்டப் படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் இந்திய அரசாங்கம் நடத்தும் சம்ஸ்கிருதக் கல்லூரிகளில் படித்து, ஜோதிட அறிவைப் பெற்று விளங்குகிறார்கள். ஆனாலும், சம்ஸ்கிருத மொழியின் மீதான பகை ஜோதிடத்திலும் ஊடுருவி, சம்ஸ்கிருத ஜோதிட நூல்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டன. அவற்றின் மொழிபெயர்ப்புகளுடன் கூடிய கையேடுகளையே ஜோதிடம் பார்ப்பவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஜோதிட அறிவு இல்லை என்பது மனசாட்சிக்குத் தெரியும். இவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் ஜோதிடத்தின் பரிந்துரையை ஏற்பதில்லை. ஆக, இவர்களும் பல இன்னல்களில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.
வாழ்க்கைப் பயணம் சிறப்புற, பொருளாதாரம் வலுப்பெற... இத்தகைய நோக்கங் களுக்காகவும் ஜோதிடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு. உலகம் வியாபாரமயமாக மாறும்போது, ஜோதிடமும் அதில் இடம்பிடிப்பதில் ஆச்சரியம் இல்லை. எல்லா தொழில்களிலும் அதில் ஈடுபடுவதற்கான தொழில் அறிவு அவசியம். ஆனால், ஜோதிடத்தில் மட்டும் அப்படியான அறிவு, அனுபவம் இல்லாமலேயே தொழில் செய்யலாம் எனும் நிலைதான் உள்ளது.
? எனில், ஒரு சாஸ்திரமாக இல்லாமல் வியாபார நுணுக்கமாக மட்டுமே ஜோதிடம் பயன்படுத்தப்படுகிறது என்கிறீர்களா?
பெரும்பாலும் அப்படித்தான்! முன்பு ஜோதிடத்தை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்திய பரம்பரைகளும் இன்றைக்கு ஜோதிடம் பார்த்து வாழ்க்கையை நடத்துகின்றன. கணினியைப் பயன்படுத்தி ஜோதிட வியாபாரம் விரிவுபெற்று விளங்குகிறது. கேள்வியைக் கேட்ட நொடியில் பலன் அளித்து மகிழ்விக்கிறார்கள். கல்வியைத் தொடர முடியாதவர்கள், இடையில் வேலை இழந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள், உழைத்து முன்னேற விருப்பம் இல்லாதவர்கள் ஆகியோரில் பலர், ஜோதிடத்தைக் கையாண்டு சேவை செய்பவராகத் தென்படுகிறார்கள். சொல்வளம் இருந்தால் போதும்; ஜோதிடத்தைக் கையாள லாம். அப்பாவி மக்கள் இருக்கும் வரை இவர் களுடைய தொழில் சிறப்புற்று விளங்கும்.
முன்பு பஞ்சாங்கத்தை வைத்து ஜாதகம் கணித்து வந்தார்கள். கணினி வந்த பிறகு கணிக்க வேண்டிய அறிவும் தேவை இல்லை; இன்டர்நெட்டில் ஜாதகம் கணிக்கும் முறை இனாமாகக் கிடைத்து விடும். அதை காகிதத்தில் ஏற்றி அளித்துவிடலாம். பணமும் சேர்ந்துவிடும். இதுபோன்றவர்கள் தங்கள் பெருமையை வளர்த்துக்கொள்ள மீடியாக்களும் உதவுகின்றன.
? எல்லா துறைகளையும் போன்று ஜோதிடமும் விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்கிறது. அப்படியிருக்க கணினி ஜோதிடத்தை ஏற்க முடியாது என்பது சரியாகுமா?
அதனால், போலிகளுக்கான பயன்பாடு பெருகும் என்பது தான் எங்கள் கவலை. விஞ்ஞான அறிவும், கல்வியறிவும் உலக ளாவிய நிலையில் நாலு கால் பாய்ச்சலில் விறுவிறுப்போடு முன்னேறிக்கொண்டிருக்கும் இன்னாளில், ஜோதிடம் குறித்து அடிப்படைத் தகவல்களையே அறியாத பலபேருக்கு, ஓங்கி வளர்ந்த பெரும் நிறுவனம் போன்று, ஜோதிடத் துறை வேலை வாய்ப்பு அளித்துக்கொண்டிருப் பது, சிந்தனையாளர்களுக்கு ஆச்சரியமளிக்கிறது.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, அரசியல் நுழைவு, உயர் பதவி, வியாபாரம், சொத்துச் சேர்க்கை, பங்குச்சந்தை, லாட்டரிச்சீட்டு... இப்படி பல வடிவங்களில் விரிவுபெற்று, வாழ்வின் கணிசமான பங்கை தன் வசம் வைத்துக்கொண்டு, தன்னை விஸ்வரூபமாக்கிக் கொண்டிருக்கிறது ஜோதிடத் துறை. பல இடைத்தரகர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய ஜோதிடத் துறை, மற்ற பல துறைகளில் உள்ளவர்களையும் தன்னிடம் சரணடைய வைத்திருக்கிறது. ஜாதகம் பொய்த்து விவாகரத்தைச் சந்தித்தாலும் அவர் களுக்கு சாதகமாக மாறிவிடும். அதாவது, கோயில் வழிபாடுகளைப் பரிகாரமாகப் பரிந்துரைத்து, புதுத் திருமணத்தில் இணைய வைக்கும் பணியின் மூலம் வியாபாரத்தை இன்னும் விரிவாக்க இயலுகிறது. கலப்புத் திருமணம், காதல் திருமணம், விதவைத் திருமணங்கள் அத்தனையும் அதன் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும். ஆக, பரிச்ரமம் இல்லாமலே பல வழிகளில் பணம் சேரும் நிறுவனமாக விளங்குகிறது, ஜோதிடம்!
? ஜோதிடத் துறையில் உண்மையானவர்களே இல்லை என்கிறீர்களா?
அப்படி இல்லை! தேர்ச்சி பெற்ற உண்மையான விளக்கங்களை அளித்து மக்கள் சேவை செய்யும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். எனினும், குடத்தில் வைத்த விளக்குபோல் சமுதாயத்தில் எல்லோருக்கும் அவர்கள் தென்படுவதில்லை. அவர்களுடைய விளக்கங்களும் மக்களைக் கவரவில்லை. அத்துடன் மக்களின் சிந்தனையும் மாறுபட்டு இருப்பதால், அவர்களுக்கும் உண்மையான சேவை கிடைப்பது இல்லை. உழைக்காமல் ஊதியம் பெறும் எண்ணம் இருப்பவர்களில் பலர் ஜோதிடத்தை அணுகு வார்கள். அவர்களைத் திருப்திப்படுத்த உண்மை ஜோதிடத்தால் இயலாது. இந்தப் பாகுபாடு உண்மை அல்லாதவர்களுக்கு உதவியளிக்கிறது.
இப்போது தென்படும் ஜோதிட விளக்கங்கள், மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதைவிட, அவர்களை துயரத்தில் ஆழ்த்துவதே அதிகம்.திருத்தமுடியாத அளவுக்கு ஜோதிடத்தின் முகம் மாறிவிட்டது. புதுத் தலைமுறையினர் முறையாகப் பயின்று மக்கள் சேவையில் இறங்க வேண்டும். பழம்பெருமை மிக்க அந்தப் பொக்கிஷத்தைக் காப்பாற்றி பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் பெற்று அறிந்து, ஆராய்ந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். கடவுள் கண் திறக்க வேண்டும்.
இரண்டாவது கோணம்...
பழைமையின் பெருமையை மட்டும் மதிக்கும் தங்களது சிந்தனை இன்றைய் சூழலுக்கு எதிரானது. இன்றைய சிந்தனையாளர்கள் பல அதிசயங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் பழைய நடைமுறைகள் வெற்றி பெறுவதில்லை. புதுத் தலைமுறையினரின் சிந்தனை ஓட்டத்துக்கு உகந்த வகையில், ஜோதிடம் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
? அதற்காக உண்மை ஷரத்துக்கள் இல்லாத ஜோதிட பலன்களை ஏற்க முடியுமா?
ஒட்டுமொத்தமாக எதையும் புறக்கணித்து விடக் கூடாது. இன்றைக்கு உகந்த வகையில், கணினி வாயிலாகவும் ஜோதிட அறிவை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி செய்திருக்கிறார்கள். கரடுமுரடான ஜோதிட வழியை சூழலுக்கு உகந்த முறையில் செப்பனிட்டு அளித்துள்ளார்கள். நொடியில் பலன் சொல்லும் அளவுக்கு, ஜோதிடத் தகவல் களை ஓரிடத்தில் திரட்டிவைத்து ஆராயும் திறமையை தொழில்நுட்பத் துறை அளித்துள்ளது. பல நூல்களில் சிதறிக்கிடக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, ஓரிடத்தில் சேர்த்து அதன் சாதகபாதகங்களை கவனித்து, பலன் சொல்லும் திறன் வளர்ந்திருக்கிறது. மொத்தத்தில், சமுதாய வளர்ச்சிக்கு ஈடாக ஜோதிடமும் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறது. ஜோதிடரை அணுகாமலேயே கணினியில் தங்களது வருங் காலத்தை அறிய வழிவகை செய்யப்பட்டிருக் கிறது. சுருங்கச் சொல்வதானால், கணினி வந்தபிறகு ஜோதிடத்தில் ஒரு புரட்சியே ஏற்பட்டிருக்கிறது எனலாம்.
ஜோதிடம் தொடாத நாளேடுகளோ, சின்னத் திரையோ இன்று இல்லை. ஒட்டுமொத்த சமுதாயமும் அதை வரவேற்று, அதன் வழியில் மக்களுக்குச் சேவை செய்கிறது. சிந்தனை முடங்கித் தவிக்கும் மக்களுக்கு, முடங்கிப்போன சிந்தனையை முடுக்கிவிட்டு வெற்றி பெறச் செய்கிறது. மனிதன் தோன்றிய நாளில் இருந்து ஜோதிடம் கையாளப்பட்டு வருகிறது. வருங்காலத்தை அறிய ஜோதிடத்தைத் தவிர, மாற்று வழி இல்லை. வேதத்தின் அங்கமாக வேத காலத்தில் இருந்து தொடரும் ஜோதிடத்தை, குறுகிய கண்ணோட்டத்துடன் தவறாக பார்ப்பது அறிவீனம்.
? அப்படியென்றால், குறைகளோடு திகழ்ந்தாலும் ஜோதிடம் அவசியம்தான் எனச் சொல்ல வருகிறீர் களா?
நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை!
நல்லநேரம், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, புதிய முயற்சிகளுக்கான நேரத்தின் ஒத்துழைப்பை அறிந்துகொள்வது இதற்கெல்லாம் ஜோதிடம் வேண்டும். துறவிகளும் தங்களது வாரிசைத் தேர்வு செய்ய ஜோதிடத்தை அணுகுவார்கள். தங்களது 'முக்தி’யை (இறுதி நாள்) ஜோதிடம் வாயிலாகத் தெரிந்துகொள்வார்கள். கடவுளை ஏற்காத பௌத்த ஜைன மதங்களிலும் மடாதிபதிகள் தங்களின் வாரிசைத் தேர்வு செய்ய ஜோதிடத்தை நாடுவார்கள். கோயில் வழிபாடுகளும் ஜோதிடத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
பிறந்த நாள், இறந்த நாளையும் ஜோதிடத்தை வைத்து நிர்ணயம் செய்வார்கள். நிலநடுக்கம், பெருவெள்ளம், புயல், எரிமலை போன்றவற்றை முன்கூட்டியே அறியவும் ஜோதிடம் உதவும். அன்றாடம் நிலவும் சூடு, குளிர்ச்சியையும் ஜோதிடம் கணித்து அளிக்கும். கால மாற்றத்தில் நிகழும் சாதகபாதகங்களை அறுதியிட்டுச் சொல்லும். ஆக, மக்களின் வாழ்க்கையில் கால மாற்றத்தால் நிகழும் வருங்கால வரைபடத்தை விளக்கி, எச்சரிக்கையுடன் வாழ்வதற்கு ஜோதிடம் பரிந்துரைக்கும்.
? அதற்காக, அதை அப்படியே ஏற்கச் சொல்கிறீர்களா?
முழுவதுமாகத் தவிர்த்துவிட முடியாது என்று சொல்கிறோம். ஜோதிடம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அளவுக்குப் பற்றிக்கொண்டிருக்கிறது. மேடையில் அனல் பறக்கப்பேசி, ஜோதிடத்தின் துயில் உரிக்கும் சீர்திருத்தவாதிகளும்கூட நல்ல நேரம் பார்த்துதான் மேடை ஏறுவார்கள். படப்பிடிப்பு, வேட்புமனுத் தாக்கல், பதவியேற்பு, ஆடை ஆபரணங்கள் வாங்க, அவற்றை அணிய, விதை விதைக்க, அறுவடை செய்ய, பத்திரப் பதிவு செய்ய, கடைக்கால் தோண்ட, புதுமனை புகுவிழா, காதணி விழா, காலணி வாங்க, திருமணம் செய்ய, பிரசவம்  சிசேரியன், பள்ளிக் கூடத்தில் பிள்ளையைச் சேர்க்க, வேலையில் நுழைய, முதல் உணவு அளிக்க, பயணம் மேற்கொள்ள ஜோதிடத்தை அணுகுவார்கள்.
அதுமட்டுமா? மருந்துக்குக் கட்டுப்படாத பிணிகளைத் தெரிந்துகொள்ள, வருங்காலத்தில் வரும் பிணிகளை அறியவும், அகால மரணம், அபமிருத்யு, துர்மரணம் ஆகியவற்றை அறியவும், குழந்தைகளின் எண்ணிக்கையை, அவர்களின் ஆயுளை அறியவும் ஜோதிடம் பயன்படுகிறது. ரத்தத்தில் இணைந்துவிட்டது ஜோதிடம். பல வடிவங்களில் தென்படும் காலண்டர்களும், டைரிகளும் ஜோதிடத்தின் விரிவாக்கம். தினமும் தினபலனும் ராசி பலனும் பார்ப்பது வாழ்க்கையின் நடைமுறை ஆகிவிட்டது.
இப்படி, காலத்துக்கு உகந்த வகையில், மக்களுக்குச் சேவை செய்வதை குறிக்கோளாகக் கொண்டு, மன உளைச்சலை அகற்றும் மருந்தாக விளங்குகிறது, இன்றைய ஜோதிடம். அதன் அறிவுரைகள் மனப் பதற்றத்தை அகற்றி, முனைப்புடன் செயல்பட ஒத்துழைக்கின்றுன. வாழ்வில் ஒரு பகுதியை (மனப்போராட்டத்தை) நிறைவு செய்து அவனை முழுமையாக்குகிறது என்கிற பெருமையைப் பெற்றது, இன்றைய ஜோதிடம் மட்டுமே.
மூன்றாவது கோணம்...
கணினியின் சாதனை சமு தாயத்துக்குச் சோதனையாக மாறியிருக்கிறது. கணினியானது ஜோதிடத் தகவலை ஈட்டித்தரும். பலன் சொல்லாது. எந்த வகை யிலும் ஜோதிட அறிவை (பலன் சொல்லும் திறமையை) அது ஏற்படுத்தவில்லை. நாம் கொடுக் கும் தகவலை அது வெளியிடும் அவ்வளவுதான். 2016ம் ஆண்டில் பிறக்கப்போகும் குழந்தைக்கு அல்லது பிறக்காத குழந்தைக்கும் இப்போதே ஜாதகம் கணித்துத் தந்துவிடும் கணினி. தரப்பட்டிருக்கும் தகவலின் அடிப் படையில் பலனைச் சொல்லும்!
இதிலிருந்து, ஜாதகம் என்பது காலத்தின் வரை்படம் என்பது தெளிவாகும். பிறந்த வேளையில் காலத்தோடு இணைந்த மனிதனுக்கு அதை ஜாதகமாக ஏற்கிறோம். கடந்த காலத்திலும் கூட வருங்காலத்தில் தோன்றுபவருக்கு ஜாதகம் கணிக்க முடிகிறது. ஆகாசத்தோடு இணைந்த காலத்தில் கிரகங்களது இணைப்பு இருப்பதால் கால ஜாதகம் பலன் சொல்வதில் வெற்றி பெறுகிறது.
? ஜோதிடத்தைப் பொறுத்தவரையிலும் நவீனத்தின் தாக்கம் கூடாது என்கிறீர்களா?
கணினி புரட்சி கணிதத்துக்கு எந்த வகையிலும் ஆக்கம் தராது. ஜாதக பலன் பொய்த்துப்போன நிலையில் ஜோதிடரை அணுகுவார்கள். அவர், நேர்காணலில் இருக்கும் நேரத்துக்கு (காலம்) ஜாதகத்தை உருவாக்குவார். அதுவும் காலத்தின் வரைபடமே! அதை, ஜோதிடம் பார்க்க வந்த வேளையுடன் இணைத்துப் புதுப் பலனை உதிர்ப்பார் ஜோதிடர். தோஷத்தையும் பரிகாரத்தையும் சொல்லி அவர் சிந்தனையைத் திருப்பி வழியனுப்பிவிடுவார். அதற்கு 'ப்ரச்ன ஜோதிடம்’ என்று சிறப்புப் பெயர் உண்டு. கீழ் கோர்ட்டில் தோற்றால், மேல் கோர்ட்டில் அப்பீல் செய்வது போல், ஜாதகத்தின் உருவத்தை  மாற்றி தோல்வியைச் சந்திக்கவைப்பார்.
அதேபோல், பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதில் ஆழமான நம்பிக்கை எவருக்கும் இல்லை. விரும்பிய பெண்ணை அடைய, ஆண் வீட்டாரை இணங்கவைக்க ஜோதிடரின் சிபாரிசை நாடுகிறார்கள். சம்பந்தத்தை முளை யிலேயே விலக்கவும் ஜோதிடரின் சிபாரிசை எதிர்பார்ப்பார்கள். தங்களுக்கு வேண்டிய தகவலைப் பெறுவதற்கு ஜாதகம் அவர்களுக்குப் பயன்படுகிறது. ஜாதகத்தைத் தவிர, மற்ற தகவலை அறிவதே குறிக்கோளாகத் திகழ்கிறது.
? ஆக, வெறும் சம்பிரதாயமாக அல்லது குறிப்பிட்ட எதிர்பார்ப்பு களுக்கு ஒரு தளமாக மட்டுமே திகழும் ஜோதிடம் வேண்டாம் என்பது தங்களின் நிலைப்பாடா?
அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!
காதல் திருமணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஏற்பார்கள். அங்கு ஜாதகம் பார்க்கும் படலம் படுத்துவிடும். விவாஹரத்து பெற்ற பிறகு அடுத்த திருமணத்திலும், விதவை மறுமணத்திலும் ஜாதகம் பார்ப்பதைத் தவிர்ப்பார்கள். பெற்றோர் விருப்பம் குழந்தைகளின் திருமணத்தில் அரங்கேறாது. எனவே, அவர்கள் பழைமையைத் துறக்க முடியாமலும், புதுமையை ஏற்க முடியாமலும் பேசாமடந்தையாக இருந்து, குழந்தைகளின் விருப்பத்துக்கு இணங்கி விடுவார்கள். புதுத் தலைமுறையினருக்கு ஜாதகத்திலும் பழைமையிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
சில ஜோதிடர்களின் அணுகுமுறை விசித்திரமாக இருக்கும். அவர்களின் தோற்றம் வெளிநாட்டுக் கலாசாரப்படி இருந்தாலும், நெற்றியில் திருநீறும், சந்தனமும் குங்குமமும் இருக்கும். கழுத்தில் ருத்ராட்சம் அல்லது துளசி மாலை மிளிரும். தன்னைச் சுற்றிலும் தெய்வத் தின் திருவருவங்கள், மகான்களின் திருவுருவங் களை வைத்திருப்பார்கள். அறை முழுவதும் ஊதுவத்தியின் நறுமணம் பரவியிருக்கும். அவர்களது இனிமையான வரவேற்பு அப்பாவிகளை ஈர்த்துவிடும். எதிரில் கணினியை திறந்துவைத்துக் கொண்டு, வரும் அன்பர்களது பிறந்த தேதி யைக் கேட்டவுடன், பட்டனை அழுத்தி அவனது ஜாதகத்தை கணினியில் பார்த்து, நட்சத்திரத்தையும் ராசியையும் சொன்னதும், ஜோதிடம் பார்க்க வந்தவருக்கு மெய்ம்மறந்து போகும். ஜோதிடரின் மீதான நம்பிக்கை வலுத்துவிடும். பஞ்சாங்கத்தில் இடம் பிடித்த பத்து பொருத்தங்களை அலசி ஆராயாமல், சான்றில்லாத விளக்கத்தை பாமரர்கள் மனதில் பதிய வைப்பார்கள். அதை நம்பி திருமணத்தில் இறங்கி, விவாஹரத்தை சந்தித்தவர்களும் உண்டு.
முதல் திருமணம், மறுமணம், விவா ஹரத்து, கலப்புத் திருமணம்  இப்படி வகைப் படுத்தி எல்லோருக்கும் உதவி செய்யும் ஜாதக பரிவர்த்தனை கேந்திரங்கள் நிறைந்து காணப் படுகின்றன. முன்பு வீட்டு நிகழ்வாக இருந்த திருமணம் தற்போது சமூக நிகழ்வாக மாறி வருகிறது. பண்டைய நாளில் ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை என்று ஓரிடத்தில் கூடுவார் கள்; நேரடியாகவே ஆடு மாடுகளை விற்பார்கள்; வாங்குவார்கள். அந்தப் பாணியில் தற்போது மணமக்கள் நேர்காணலும் நடந்து கொண்டிருக்கிறது. இங்கெல்லாம் ஜோதிடத் துக்கு வேலை இல்லை. ஜோதிடத்தில் ஆரம்ப மானது கொஞ்சம் கொஞ்சமாகக் கழன்று, மணமக்கள் விருப்பத்தில் முற்றுப்பெறுகிறது. அநாதையாக வெளியேறிவிடுகிறது ஜோதிடம். இப்படிப் புரையேறிய புது நம்பிக்கைகளை அகற்றுவது எளிதல்ல. இந்த விளை யாட்டு, நடுத்தர மக்களை நடுத் தெருவில் நிற்க வைப்பது பரிதாபம்.
உருக்குலைந்த வீட்டைச் சரி செய்ய இயலாது. அதை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டுப் புதிதாக எழுப்ப வேண்டும். தாறுமாறான வேள்வியைச் சரிசெய்ய இயலாமல், ஒட்டுமொத்தமாக அழித்தார் புத்தர். ஜோதிடத்தில் பட்டப்படிப்பு, பட்ட மேற் படிப்புப் பெற்றவர்களை இந்த தொழிலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். அந்த நல்ல காரியத்தை அரசாங்கம் ஏற்று நடைமுறைப்படுத்தினால், நாட்டு மருத்துவம் கட்டுப்படுத்தப்பட்டு விளங்குவது போன்று ஜோதிடமும் விளங்கும்.
    தங்கள் சிந்தனைக்கு ஒருவார்த்தை...
ஒழுக்கமானது ஒட்டுமொத்தமாக விலகியதால் இந்த விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. கற்றுணர்ந்து, மக்களுக்குச் சேவை செய்ய முனைய வேண்டும். ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானம். ஆகாயத்தில் வளைய வரும் கிரகங்களும் அதற்கு அடிப்படை. அப்படியிருக்க, 'நான் விஞ்ஞான முறையில் வித்தியாசமாக, துல்லியமாக பலன் சொல்வேன்’ என்கிற விளம்பரம் எல்லாம், அவன் ஜோதிட அறிவு அற்றவன் என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பதாகவே அமையும்.
ஜோதிடர் என்பவர் ஜோதிடத்துக்கும் மக்களுக்கும் இடைத்தரகராகச் செயல்படக் கூடாது. வியாபாரிகளில் தென்படும் இடைத் தரகர் களுக்குப் பண்டங்கள் உருவாவதும் தெரியாது; பயன்படுத்துபவர்களின் பங்கும் தெரியாது. சட்டியில் இருக்கும் பொருள் அகப்பைக்குத் தெரியாது; உண்டவனின் உணர்வும் தெரியாது. அப்படித்தான் இதுவும்.
ஜோதிடர் இடைத்தரகராக மாறக் கூடாது. விரும்பிய பலனைப் பெற, அதற்கு உகந்த நல்ல காலம் ஏற்பட, கடவுளை கூட்டுப் பிரார்த்தனையில் வேண்டுவோம். எல்லாத் துறைகளும் வளர்ந்தும் தேய்ந்தும்தான் இருக்கும். தேய்ந்த நிலை மாறி வளர்ச்சியை எட்டுவதற்கு ஜோதிடர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.
பதில்கள் தொடரும்...

Tuesday, September 2, 2014

இணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி

 
 
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சியே அடிப்படையாக இருக்கிறது.
கணினிப் பயன்பாட்டுக்குத் தட்டச்சுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை... ஆனால், தட்டச்சுப் பயிற்சி பெற்றவர்கள் கணினியில் மிக விரைவாகச் செயல்பட முடிகிறது. இந்தத் தட்டச்சுப் பயிற்சியினை இணையத்தில் எளிமையாகக் கற்றுக் கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளில் தட்டச்சுப் பயிற்சிக்கான வசதிகள் செய்யப்படிருக்கின்றன. பொதுவான தட்டச்சுப் பயிற்சி பெற விரும்புபவர்கள் இத்தளத்தில் மாணவர்கள் எனும் பிரிவில் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
புதிய கணக்குத் தொடங்கப்பட்டவுடன் கிடைக்கும் பக்கத்தில் தொடக்கநிலைப் பயிற்சி (Beginner Course), இடைநிலைப் பயிற்சி (Intermediate Course), மேம்பட்ட பயிற்சி (Advanced Course), சிறப்புநிலைப் பாடங்கள் (Specialty Lessons), என பல தலைப்புகளில் பாடங்கள் உள்ளன.
தொடக்கநிலைப் பயிற்சியில் விசைப்பலகையிலுள்ள விசைகளைப் பயன்படுத்துவதற்கான ஒன்பது வகையான தொடக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பயிற்சிக்கு நாம் ஒவ்வொரு விசைக்கும் பயன்படுத்த வேண்டிய விரல்கள் குறித்தும், அதற்கான எழுத்துகள் குறித்தும் எளிமையாகப் படத்துடன் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இடைநிலைப் பயிற்சியில் அகரவரிசை (Alphabet ), நிறுத்தல் குறிகள் (Punctuation), பொதுவான ஆங்கிலச் சொற்கள் (Common English Words), எண்கள் (Numbers), வேகப் பயிற்சி (Speed Drills) என்று ஒன்பது வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேம்பட்ட பயிற்சியில் ஆறு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. சிறப்புப் பாடங்கள் பயிற்சியில் ஏழு வகையான பயிற்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
கட்டண அடிப்படையிலான பயிற்சியில் 16 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டண அடிப்படையிலான பயிற்சியைத் தவிர்த்து பிற பயிற்சிகளை இலவசமாகப் பெற முடியும். இங்கு ஆங்கிலம், ஜப்பான், சீனம், கொரியன், போர்ச்சுக்கீசு உட்பட 26 மொழிகளிலான விசைப்பலகைகளில் பயிற்சி பெறமுடியும்.
தட்டச்சுப் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் http://www.typingweb.com/ எனும் இணையமுகவரிக்குச் சென்று தங்களது பயிற்சிகளைத் தொடரலாம்.

திருப்பம் தரும் திருப்பதி விசேஷ தகவல்கள்

திருப்பதி வெங்கடாசலபதி, பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். அதோடு, பிறப்பு - இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர். புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிபரங்கள். இதோ உங்கள் பார்வைக்காக .
* 32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.
* 32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோவில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோவிலில் அதிகபட்ச எண்ணிக் கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இக்கோவிலில்தான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நிர்வாகத்தின்கீழ் வழங்கப்படும் தங்கும் விடுதிகளை அமைத்துள்ளதில் இது முதலிடத்தை வகிக்கிறது. இங்கு 7200 அறைகள், குடில்கள் மற்றும் சத்திரங்கள் இருக்கின்றன. இதில் நாள் ஒன்றுக்கு 60,000 பேர் தங்கலாம்.
தினமும்சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.லட்டு தயாரிப்புக்காக மற்றும் ஆலயப் பணிகளுக்காக மிக அதிக எண்ணிக்கையில் நெய்யைப் பயன்படுத்தும் கோயில் இது. வருடத்துக்கு 1,800 டன்கள். மிக அதிக அளவில் மின்சக்தியைப் பயன்படுத்தும் கோவிலும் இதுதான். ஒரு மாதத்துக்கு 2 கோடி யூனிட்டுகள். நாட்டிலேயே பெரிய அளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி உணவும் பிரசாதமும் தயாரிக்கும் கோவில் இது. ஒரு மணி நேரத்திற்கு 2.2டன் நீராவி இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
* 30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோவில் நிர்வகித்து வருகிறது.
கணினித் தொழில்நுட்பத்தைப் பரந்த அளவில் பயன் படுத்தும் முதல் கோயில் இதுதான். இக்கோவிலுக்கு என்று தனியாக ஒரு 'கால் சென்டரே’ இருக்கிறது. தங்கும் வசதி, தரிசன டிக்கெட், உண்டியல், போக்குவரத்து ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டிடக்கலைப் பள்ளி. நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981ல் இங்கு துவக்கப்பட்டது. நாட்டில் முதன்முறையாக, பிச்சைக்காரர்களுக்காக, படுக்கைகள், சாப்பாடு, மருத்துவ வசதி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கும் பிச்சைக்காரர்கள் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.தொழுநோயாளிகளுக்காக நாட்டிலேயே பெரிய தொழுநோய் இல்லம் இங்கு துவக்கப்பட்டது. அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக, அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகம் இங்கு 1943 ல் நிறுவப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும அறக்கட்டளைகள்...
1. ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
'மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.
2. ஊனமுற்றோருக்கான அறுவைச் சிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை
இந்த மருத்துவ அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, பிறவி ஊனங்கள், முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பானவற்றிற்கு இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.
3. ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக் கட்டளை
இந்த அறக்கட்டளை, கோவில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.
4. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக் காகப் பாடுபட்டு வருகிறது.
5. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.
6. பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
7. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.
8. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சீறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.

தரிசிக்க மூன்று வழிகள்!
சுவாமியை தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், சுதர்ஸன தரிசனம், சீக்கிர தரிசனம் (எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லா மல் 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்வது) என மூன்று வழிமுறைகள் உள்ளன.
சர்வ தரிசனத்தில், சாதாரண நாட்களில் 8 மணிநேரமும், சுதர்ஸன தரிசனத்தில் மூன்று மணிநேரமும் ஆகிறது. இதற்கென முறையான திட்டமிடல் இல்லாமல், லீவு கிடைத்துவிட்டது என்பதற்காகப் புறப்பட்டுச் சென்று, வெங்கடேசப் பெருமாளைப் பார்க்கப் போய் நெரிசலில் சிக்கி, கால் கடுக்க காத்துக் கிடந்து அவஸ்தைப்பட்டு, சிலர் சுவாமியைப் பார்க்காமலே திரும்பி வந்த கசப்பு உணர்வுதான் காரணம். அப்படிப்பட்ட நிலை பக்தர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர்க்க, தரிசனத்தை எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:
* உங்கள் திருமலை யாத்திரையை விடுமுறை அல்லாத நாட்களில் தொடருங்கள்.
* திருமலைக்கு செல்லும் முன்பே இரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும்
* வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
* திருப்பதிக்கு வந்து சேர்ந்த உடனே சுதர்ஸன் டோக்கன்களை பெறுங்கள்.
* தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்திற்கு பக்கத்தில் உள்ள யாத்திரிகர்கள் வசதிக்கூடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
தகவல் அறிவதற்கு, இரயில் நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்ட்டா இரயில் நிலையத்தில் தகவல் மையங்களை அணுகுங்கள்.
 திருமலை திருப்பதி தேவஸ்தானம், காட்ரோடுகளில் பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது. திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி இரயில் நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நடந்துச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். திருப்பதியில் தங்கியிருக்கும் போது ஓய்வு நேரத்தில் உள்ளூர் ஆலய தரிசனம் செய்யுங்கள். திருமலை புனிதம் மற்றும் பரிசுத்தத்தை பாதுகாத்திட தேவஸ்தானத்துடன் ஒத்துழையுங்கள்.  
சுற்றுலா ஸ்தலமாக இருக்குற இடங்கள் யாத்திரை ஸ்தலங்களாக இருக்காது. யாத்திரை ஸ்தலங்களாக இருக்குற இடங்கள் சுற்றுலாதலமா இருக்காது.  திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலத்துக்கேற்ப செஞ்சுக்கிட்டு வர்ற சீர்திருத்தங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளுக்குப் பிறகு பக்தர்களுடைய வருகை ரொம்பவே அதிகரிச்சிடுச்சுக்கிட்டு வருது.
நாப்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பெல்லாம் ஆந்திராவிலும் தமிழ்நாட்டுல சென்னையில இருக்குறவங்கதான் அடிக்கடி வந்து போயிக்கிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகு, தமிழ்நாடு கர்நாடகா, கேரளா என்று பல மாநிலங்களில் இருந்தும் வர ஆரம்பிச்சாங்க. கடந்த 10 வருடங்களா மும்பை, டெல்லி, கல்கத்தா அலகாபாத், காசி போன்ற வட இந்தியாவுலருந்தும் பக்தர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க.
நாம எப்படி காசி, கைலாஷ், பதிரிநாத் கேதார்நாத் யாத்திரை போறோமோ அதே மாதிரி வட இந்தியர்கள் வழ்நாளில் ஒருமுறையாவது திருமலைக்கு வரணும்னு நெனைக்கிறாங்க. அமெரிக்கா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுல இருக்குற இந்தியர்களும் இப்போ பெரிய அளவுல வர ஆரம்பிச்சுட்டாங்க.
வார நாள்ல 50 ஆயிரம் பேர் திருமலைக்கு சாமி கும்பிட வருவாங்க. சனி ஞாயிறு கவர்மெண்ட் ஹாலிடேன்னா, 1 லட்சம் பேருக்கு  மேல வர்றாங்க. ஒரு சாதாரண வி.ஐ.பியைப் பார்க்கவே நாம அப்பாயின்மென்ட் வாங்கிக்கிட்டு, புறப்படும் போது போன்ல உறுதிபடுத்திக்கிட்டு கிளம்புறோம். வெங்கடாஜலப்தியைப் பாக்கணும்னா அது எவ்வளவு பெரிய விஷயம். அதுக்கு சின்னதா ஒரு திட்டமிடக்கூடாதா?'' என்றவர்,
ஒரு நாளைக்கு மூணு டிரெயின்கள் கீழ்திருப்பதிக்குப் போகுது. 8 பெட்டிகளுடன்த ரெயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில்லாம பாஸஞ்சர் டிரெயின் ஒண்ணும் போகுது. இவைத் தவிர 9 எக்ஸ்பிரஸ் டிரெயின்கள் ரேணிகுண்டா வரைக்கும் போகுது. அங்கிருந்து திருப்பதிக்கு 12 கிலோ மீட்டர்தான். புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் காட்பாடி வழியாக ஒரு டிரெயின் திருப்பதிக்கு விடப்பட்டுள்ளது. இது தவிர எலக்ட்ரிக் ட்ரெயின் ஒன்றை விடுவது பற்றியும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவைத் தவிர ஆந்திர அரசுப் பேருந்துகள் அரைமணி நேரத்துக்கு ஒன்று என்கிற விதத்தில் பஸ்கள் இயங்குகின்றன என்றவர், திருவேங்கடமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவற்கான குறிப்புகளைத் தந்தார். அவற்றை அப்படியே பாடமாக தொகுத்திருக்கிறோம்.
திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கலில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக் கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.
திருப்பதிக்குச் செல்ல ரெயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.திருமலையில் தங்கும் வசதியைப் பெற கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும் தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.
சுதர்ஸன டோக்கன்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருக்கும்  நேரத்தை வெகுவாக குறைக்க உதவும்.சுதர்ஸன் டோக்கன் வசதியைப் பெற திருமலைக்குச் செல்ல திட்டமுட்டுள்ள அனைவரும் ஒன்றாகச் சென்று தரிசன நாள், நேரம் ஆகியவற்றை கைரேகை மற்றும் புகைப்படப் பதிவைச் செய்தாக வேண்டும்.
தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ.அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள யாத்திரிகர்கள் வசதிக்கூடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும்  நாம் கொண்டு செல்லும் பொருட்களை வக்க ஆயிரக்கணக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் தங்கள் பொருட்களை வைத்து விட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.
திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக ரேணிகுண்டா, திருப்பதி பஸ்-ஸ்டாண்டு எதிர்புறம் சீனிவாசன் காம்ப்ளக்ஸ், திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணுநிவாஸ்., அலிப்பிரி டோல்கேட் ஆகிய இடங்களில் அதிகாலை 5 மணிக்கு  தொடங்கி, சுதர்சன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் 5 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதால், ஃபஸ்ட் கம் சர்வீஸ் அடிப்படையில் வழங்கப்படும் என்பதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், மலைப்பாதையில் செல்லும்போது பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது.
திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து அலிப்பிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.நடந்துச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கரிணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும். கோவிலின் விதிமுறைகளைப் பின்பற்றி, கடவுளைத் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டும்..
கோவில் வளாகத்தில் எச்சில் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவோ கூடாது. கோவிலின் விதிமுறைகளுக்கும் வழக்கங்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது. கோவில் வளாகங்களில் புகைபிடிக்கக் கூடாது. கோவில் வளாகங்களில் காலணிகள் அணியக்கூடாது.
தங்களது அறையிலோ, வாகனங்களிலோ காலனிகளை விட்டுவிட்டு வெறுங்காலுடன் செல்ல வேண்டும். அல்லது அருகாமையிலிருக்கும் காலனிகள் பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்லலாம். சுவாமி தரிசனம் செய்யச் செல்லும்போது உங்களது செல்போன்களை அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது. இல்லாவிட்டால், தரிசனம் முடித்துவிட்டு லட்டு கௌண்டருக்குச் சென்று முடித்துவிட்டு, பிறகு செல்போன் பாதுகாப்பு மையத்துக்குசெல்ல வேண்டியிருக்கும்.
திருமலை யாத்திரையின் போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாஅது.. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது..
கோவில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்ரைத் தொடர்பு கொள்வது அல்லது லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tவீக்ஷீuனீணீறீணீ.ஷீக்ஷீரீ/ இனையதளத்தின் வழியாக அறியலாம் என்றும் தெரிவித்தார்.