Tuesday, September 30, 2014

சீன மொழியை விரிவாகக் கற்றுக்கொள்ள ...........

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு சீனம். இந்த நூற்றாண்டு ஆசியாவிற்குரியது என்பதைப் பல வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் சீனமும் இந்தியாவும் முக்கியப் பங்காற்றும் என்பது அவர்களது கணிப்பு.
 
19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து உலகின் பெரிய சக்தியாக வளர்ந்ததையடுத்து ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றது. சீனம் வளர்ச்சி பெறுவதையடுத்து சீன மொழி உலகில் முக்கியத்துவம் பெறலாம். சீனத்தில் இன்று அரசு உள்பட பெரும்பாலான அலுவல்கள் சீன மொழியிலேயே நடை பெறுகின்றன. 
 
இவற்றைக் கருத்தில் கொண்டு நம் இளைஞர்கள் எதிர்காலத்தில் சிறப்புப் பெற ஏதுவாக உங்கள் ‘புதிய தலைமுறை’ சீன மொழியை எளிய முறையில் தமிழ்வழி அறிமுகப்படுத்துகிறது. முதலில் சில முக்கியமான சொற்களைக் கற்றுக் கொள்வோம். அதன் பின் உச்சரிப்பு  வாக்கியங்கள் ஆகியவற்றைப் படிப்படியாக அறிந்து கொள்ளலாம்.
 
பாடங்களை கூர்ந்துபின்பற்றி வாருங்கள். ஒவ்வொரு நான்காவது வாரமும்  மூன்று கேள்விகள் கேட்கப்படும் அவற்றிற்கான விடைகள் அதற்கு முன் வெளியான பாடங்களில் இருக்கும். சரியான விடை எழுதும் 5 பேருக்கு சீன வானொலி பரிசு வழங்கவிருக்கிறது.
 
உங்களுக்குச் சீன மொழிப் பாடங்களை சீன வானொலியின் ஒத்துழைப்போடு இந்த வாரம் முதல் வழங்குகிறோம். இந்தப் பாடங்களை சீனம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்ற சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள்,   தயாரித்துள்ளார். அவருக்கும் அவரது சக பணியாளர்கள் வான்மதி, மீனா ஆகியோருக்கும் நன்றி.
 
சீன மொழியை விரிவாகக் கற்றுக்கொள்ள விரும்புவோர் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் இணையதளம் மூலம் கற்றுக் கொள்ளலாம். இணையதள முகவரி;  http://tamil.cri.cn/chinese.htm 

No comments:

Post a Comment