பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு எழுத விரும்பும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
பல்கலைக் கழகங்களிலோ கல்லூரிகளிலோ உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற விரும்பும் முதுநிலை பட்டதாரிகள் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (ஜே.ஆர்.எஃப்) நிதி உதவி பெறுவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தகுதி: இந்த நெட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கலைப்பாடங்கள், மொழியியல், மானுடவியல், சமூகவியல் கணிப்பொறியியல், எலெக்ட்ரானிக் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடனும் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பில் கடைசி செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களும், தேர்வு முடிவிற்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம்.
வயது வரம்பு: ஜே.ஆர்.எஃப். எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதி தேர்வை எழுதும் பொதுப்பிரிவினர் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓ.பி.சி. மாணவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் பணியில் சேரவேண்டி நெட் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை.
தேர்வு முறை: மூன்று தாள்களைக் கொண்ட இத்தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இருக்கும்.

முதல் தாளில் பொது அறிவு, தற்கால நிகழ்வுகள், தர்க்கரீதியான கேள்விகள், ரீசனிங் எபிலிட்டி, டீச்சிங் எபிலிட்டி குறித்து 60 கேள்விகள் இருக்கும். இதில் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால், முதல் 50 கேள்விகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இதற்கு மொத்தம் நூறு மதிப்பெண்கள். முதல் தாளில் உள்ள கேள்விகளுக்கு 75 நிமிடங்களுக்குள் விடையளிக்க வேண்டும். இரண்டு மற்றும் மூன்றாம் தாளில் விண்ணப்பதாரர் தேர்வு செய்த பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் தாளில் 50 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க 75 நிமிடங்கள் வழங்கப்படும். இதற்கு மொத்த மதிப்பெண்கள் 100. மூன்றாம் தாளில் 75 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு விடையளிக்க இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். மொத்தம் 150 மதிப்பெண்கள். இரண்டு மற்றும் மூன்றாம் தாள்களில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேர்வின் முடிவில் ஒவ்வொரு பாட வாரியாகவும், பிரிவு வாரியாகவும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள முதல் 15 சதவீதத்தினர், இத்தேர்வில் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். ஜே.ஆர்.எஃப். தகுதி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தனியே இணையதளத்தில் வெளியிடப்படும். .
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் புதுச்சேரியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகமும் தேர்வு மையங்களாகச் செயல்படும். இந்தப் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடும் கல்லூரிகளில் மாணவர்கள் நெட் தேர்வை எழுதலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?: இந்தத் தேர்வை எழுத விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.450. ஓ.பி.சி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.225. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.110. வங்கிச்சேவைக் கட்டணம் தனி. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தபின், கொடுக்கப்படும் வங்கிச் செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் (மற்றும் இதர சான்றிதழ்கள் தேவைப்படின் அவற்றையும்) இணைத்து சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் தேர்வு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5, 2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: மே 7, 2014
விண்ணப்பப் படிவம், ஹால் டிக்கெட், அட்டெனென்ஸ் ஸ்லிப் ஆகியவற்றை பிரிண்ட் அவுட் எடுக்க கடைசி தேதி: மே 10, 2014
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழக தேர்வுமையங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: மே 15, 2014
தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29, 2014
விவரங்களுக்கு: www.ugcnetonline.in
நெட் தேர்வு இலவசப் பயிற்சி தேதி நீட்டிப்பு
நெட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை அமைப்பு (யு.எஸ்.ஏ.பி.) இலவசப் பயிற்சியை நடத்துகிறது. இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு: 044-2539 9418, 2539 9518
No comments:
Post a Comment