உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசிலில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டி தென் அமெரிக்காவில் நடைபெறும் என சர்வதேசகால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்ததால் எவ்வித போட்டியுமின்றி போட்டியை நடத்தும் வாய்ப்பை 2007-ல் பிரேசில் பெற்றது.
சர்வதேச அளவில் அதிகமானோர் பார்த்து ரசிக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2-வது முறையாக பிரேசில் நடத்துகிறது. இதற்கு முன்னர் 1950-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்திய பிரேசில், ஏறக்குறைய 64 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியை மீண்டும் நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஆர்ஜென்டீனா 1978-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது. இப்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு 5-வது முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க கண்டத்துக்கு கிடைத்திருக்கிறது. அக்கண்டத்தை சேர்ந்த முன்னணி அணிகளான ஆர்ஜென்டீனா, பிரேசில், உருகுவே போன்றவை கோப்பையை வெல்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த அணிகளே வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது
12 மைதானங்கள்
போட்டியை நடத்தும் பிரேசில் மட்டும் உலகக் கோப்பைக்கு நேரடித்தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்ளிட்ட எஞ்சிய 31 அணிகளும் தகுதிச்சுற்றில் விளையாடி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பிரேசிலில் உள்ள 12 நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட மைதானங்களில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.
போட்டியை நடத்த தகுதியுள்ள மைதானங்களாக 18 மைதானங்களின் பட்டியலை பிபாவிடம் கொடுத்தது பிரேசில். ஆனால் பிபாவோ, ஏதாவது ஒரு நகரத்தில் மட்டுமே இரு மைதானங்களில் போட்டியை நடத்தலாம். 8 முதல் 10 நகரங்களில்தான் போட்டியை நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது.
பிரேசில் கால்பந்து ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போட்டியை 12 நகரங்களில் நடத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ரிக்கார்டோ டெக்ஸீரா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, 12 நகரங்களில் போட்டியை நடத்த பிபா ஒப்புக்கொண்டது.
அதன்படி பீலேம், கேம்போ கிரான்டி, புளோரியானோபோலிஸ், கோயானியா, ரியோ பிரான்கோ ஆகிய நகரங்கள் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தன. மெசியோ தானாகவே விலகிக்கொண்டது. பிரேசில் முழுவதும் போட்டியை நடத்தும் வகையில் அங்குள்ள 12 முக்கிய மாகாணங்களின் தலைநகரங்களான ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, சாவோ பாவ்லோ, ஃபோர்ட்டலிசா, பீலோ ஹரிஸாண்டே, சால்வடார், குயாபா, மானாஸ், நேட்டால், கியூரிட்டிபா, ரெசிபே, போர்ட்டோ அலெக்ரே ஆகியவற்றில் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்கேற்கும் அணிகள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மைதானத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி
மைதான பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ.20 ஆயிரத்து 414 கோடி செலவிட்டுள்ளது பிரேசில். உலகக் கோப்பைக்காக 5 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள எஸ்டாடியோ நேசியானல் கேரின்சா மைதானம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கிறது. எஞ்சிய 6 மைதானங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரம்மாண்டமான மரக்காணா
ரியோ டி ஜெனிரோவில் உள்ள தி எஸ்டாடியோ டூ மரக்காணா மைதானத்தில்தான் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. மிகப்பெரிய மைதானமான இதில் ஏற்கெனவே உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 854 பேர் மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை கண்டுகளித்துள்ளனர்.
மொத்தம் 64 ஆட்டங்களைக் கொண்ட இந்த உலகக் கோப்பை போட்டி குரூப் சுற்றோடு ஆரம்பமாகிறது. 1930 முதல் இதுவரை உலகக் கோப்பையை வென்ற அனைத்து அணிகளும் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை சுமார் ரூ.3390 கோடியாகும். கடந்த உலகக் கோப்பை பரிசுத்தொகையைவிட இது 37 சதவீதம் அதிகமாகும்.
கோல் லைன் தொழில்நுட்பம்
இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு கருவியின் மூலம் பந்து கோல் எல்லையை முழுமையாகக் கடந்ததா, இல்லையா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். ஜிஎல்டி என்றழைக்கப்படும் இந்த ‘கோல் லைன்’ தொழில்நுட்பம், பந்து கோல் எல்லையைக் கடந்ததும் நடுவரின் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்துக்கு தகவல் தெரிவித்துவிடும்.
2010 உலகக் கோப்பையில் இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் இடையிலான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தின்போது இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பார்டு அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோல் லைனுக்குள் விழுந்தபோதும், நடுவரால் சரியாகக் கணிக்கமுடியாததால் அவர் கோல் கொடுக்கவில்லை. இதனால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்த தொழில் நுட்பத்துக்கு 2012-ல் பிபா ஒப்புதல் வழங்கியது. அதே ஆண்டில் ஜப்பானில் நடைபெற்ற பிபா கிளப் உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. உலகக் கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்படவுள்ளது இந்த தொழில்நுட்பம். இதற்காக ‘கோல் கன்ட்ரோல் சிஸ்டம்’ (கோல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம்) பிரேசிலில் போட்டி நடைபெறவுள்ள 12 மைதானங்களிலும் பொருத்தப்படவுள்ளது.
71.51 கோடி பேர் கண்டுகளிப்பு
2006-ல் ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, பிரான்ஸை வீழ்த்தி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியை மட்டும் 71.51 கோடி பேர் கண்டுகளித்தனர். அதுதான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகமானோரால் கண்டுகளிக்கப்பட்ட போட்டி.
பிரேசிலிடம் 5 உலகக் கோப்பைகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 19 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை நடைபெறவில்லை.
பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதற்கடுத்தபடியாக இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும், ஆர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை தலா 2 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. சர்வதேச அளவில் 200-க்கும் அதிகமான நாடுகளில் கால்பந்து போட்டிகள் விளையாடப்பட்டாலும்கூட, உலகக் கோப்பையில் விளை யாடும் வாய்ப்பு 32 அணிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. அதிலும் 8 அணிகள் மட்டுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றுள்ளன
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sw12TEh3X4ys3hpSFDNZixIdQJh__ZhDNfKFq4zO9Ld-6fH0P8-RQwPFGM4RUi7XZcsS-OOZSVwBLaleuSXeI5mSpR6RV0j5Th2iJUKu-TJF8VxYYXlge1tKjp=s0-d)
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகின் ‘கிக்’ திருவிழா!
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
ஜூன் 12 முதல் கோல் மழை பொழியும்!
உலகக் கோப்பை கால்பந்து: முதல் சாம்பியன் உருகுவே (1930)
1954 உலகக் கோப்பையில் பிரேசிலுக்கு எதிராக கோலடிக்கிறார் சன்டோர் கோசிஸ்
கால்பந்து வரலாற்றில் 1930-ம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். காலம் காலமாக கால்பந்து விளையாடப்பட்டு வந்தாலும் 1930-ல்தான் அறிமுக உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது என்பதால் அந்த ஆண்டு கால்பந்து வரலாற்றின் புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான உருகுவேயின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையவிருந்ததை முன்னிட்டு முதல் உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை அந்நாட்டுக்கு வழங்கியது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா). 13 நாடுகள் ஜூலை 13 முதல் 30 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து 7 நாடுகள், ஐரோப்பாவில் இருந்து 4 நாடுகள், வட அமெரிக்காவில் இருந்து இரு நாடுகள் என மொத்தம் 13 நாடுகள் பங்கேற்றன.
ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகளில் கால்பந்து அணிகள் இருந்த போதிலும், நீண்ட தூர பயணம் காரணமாக மற்ற அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்க முன்வரவில்லை. உருகுவே தலைநகர் மான்டிவிடி யோவிலேயே உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன. உலகக் கோப்பை போட்டிக்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட எஸ்டாடியோ சென்டினரியோ மைதானத்தில்தான் பெரும்பாலான ஆட்டங்கள் நடை பெற்றன.
ஒரே நேரத்தில் இரு போட்டிகள்
உலகக் கோப்பையில் பங்கேற்ற 13 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. இதில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும், அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும் தோற்கடித்தன.
குரூப் சுற்றின் முடிவில் ஆர்ஜென்டீனா, உருகுவே, அமெரிக்கா, யூகோஸ் லேவியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் அமெரிக்காவும் ஆர்ஜென்டீனாவும் மோதின. அமெரிக்க அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்களில் 6 பேர் பிரிட்டனில் பிறந்தவர்கள். ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அமெரிக்க மிட்பீல்டர் ரபேல் டிரேஸியின் கால் உடைந்தது.
ஆர்ஜென்டீன வீரர் மான்டி கோலடிக்க, அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மேலும் 5 கோல்களை அடித்த ஆர்ஜென்டீனா 6-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் உருகுவே அணி 6-1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லேவியாவைத் தோற்கடித்தது. உருகுவே வீரர் பெட்ரோ சீ ஹாட்ரிக் கோலடித்தார்.
படையெடுத்த ஆர்ஜென்டீனர்கள்
ஜூலை 30-ல் எஸ்டாடியோ சென்டினரியோவில் நடை பெற்ற இறுதிச்சுற்று மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 1928 ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென் டீனாவை வீழ்த்தி சாம்பி யனாகியிருந்ததே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
வெற்றி அல்லது வீரமரணம் என்ற போர்க் கோஷத்தை முழங்கியவாறு ஆர்ஜென்டீன தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து மான்டிவிடியோவுக்கு நதி வழியாக வந்தனர் ஆர்ஜென்டீன ரசிகர்கள். அவர்களை அழைத்து வருவதற்கு படகுகள் போது மானதாக இல்லை.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வந்ததால் மான்டிவிடியோ துறைமுகமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. இதனால் போட்டி தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே மைதானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, கடுமையான சோதனைக்குப் பிறகு ஆர்ஜென்டீன ரசிகர்கள் அனுமதிக் கப்பட்டனர்.
93 ஆயிரம் பேர்
93 ஆயிரம் பேர் மைதானத்திற்கு வந்திருந்த இறுதி ஆட்டத்தில் விளையாடப்படும் பந்தை யார் வழங்குவது என்பதில் உடன்பாடு ஏற்படாதைத் தொடர்ந்து முதல் பாதியில் ஆர்ஜென்டீனா வழங்கிய பந்தும், 2-வது பாதியில் உருகுவே வழங்கிய பந்தும் பயன்படுத்தப்பட்டன.
உருகுவே அணியைப் பொறுத்த வரையில் அரையிறுதியில் விளையாடிய அன்செல்மோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி யில் அவருக்குப் பதிலாக கேஸ்ட்ரோ சேர்க்கப்பட்டார்.
மான்டிக்கு கொலை மிரட்டல்
ஆர்ஜென்டீனாவுக்காக விளையாடிய மான்டிக்கு கொலை மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே அவர் போட்டியில் பங்கேற்றார். போட்டி முடிந்ததும் அவர் அங்கிருந்து வெளியேறுவதற்காக தனி படகு ஒன்றும் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாப்லோ டொராடோ அடித்த கோலால் உருகுவே முன்னிலை பெற்றது. இதன்பிறகு தாக்குதல் ஆட்டத்தில் இறங்கிய ஆர்ஜென்டீனா ஸ்கோரை சமன் செய்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும் நிலைக்கு வந்தபோது, அந்த உலகக் கோப்பையில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த கில்லர்மோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
உருகுவே சாம்பியன்
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் உருகுவே மெதுவாக ஆட்டத்தின் வேகத்தை துரிதப்படுத்த, ஆர்ஜென்டீனாவின் மான்டி அற்புதமான கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதனிடையே உருகுவேயின் பெட்ரா சீ கோலடித்து, ஸ்கோரை சமன் செய்ய, அடுத்த 10-வது நிமிடத்தில் 3-வது கோலையும், கடைசி நிமிடத்தில் காஸ்ட்ரோ 4-வது கோலையும் அடிக்க, உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது.
அரசு விடுமுறை
ஒலிம்பிக் சாம்பியனான உருகுவே உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து அந்நாட்டில் அடுத்த நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் தோல்வியால் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற ஆர்ஜென்டீன ரசிகர்கள் பியூனஸ் அயர்ஸில் இருந்த உருகுவே தூதரகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
உலகக் கோப்பையில் முதல் கோலடித்தவர்
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோலடித்தவர் பிரான்ஸின் லூசியன் லாரன்ட். உலகக் கோப்பையின் முதல் நாளில் நடைபெற்ற மெக்ஸிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த கோலை அடித்தார். அமெரிக்காவின் ஜிம்மி டக்லஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் எதிரணியிடம் கோல் வாங்காத முதல் கோல் கீப்பர். முதல் நாளில் நடைபெற்ற பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில், அந்த அணியின் அனைத்து கோல் வாய்ப்புகளையும் ஜிம்மி தகர்த்தார்.
முதல் உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் கடைசியாக காலமானவர் எமெஸ்டோ மாஸ் செரோனி. இவர் 1984 ஜூலை 3-ம் தேதி இறந்தார். அப்போது அவருக்கு வயது 76. அதே அணியில் இடம்பெற்றிருந்த மாற்று பின்கள வீரரான எமிலியோ ரெகோபா தனது 87-வது வயதில் 1992 செப்டம்பர் 12-ம் தேதி காலமானார். இவர் அணியில் இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. 1930 உலகக் கோப்பையில் விளையாடியவர்களில் கடைசியாக உயிரோடு இருந்தவரான ஆர்ஜென்டீனாவின் பிரான்சிஸ்கோ வரல்லோ தனது 108-வது வயதில் 2010 ஆகஸ்ட் 30-ல் காலமானார்.
ஹாட்ரிக் சாதனைகள்
முதல் ஹாட்ரிக்: உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற பெருமை அமெரிக்காவின் பெர்ட் படேநாடிடம் உள்ளது. 1930-ல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையில் பராகுவே அணிக்கு எதிராக அவர் ஹாட்ரிக் கோலடித்தார்.
அதிவேக ஹாட்ரிக்: உலகக் கோப்பையில் அதிவேக ஹாட்ரிக் கோலடித்த சாதனை இன்றளவும் ஹங்கேரியின் லேஸ்லோ கிஸ்ஸிடம் உள்ளது. 1982 உலகக் கோப்பையில் சல்வடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லேஸ்லோ 8 நிமிடங்களில் (69, 72, 76-வது நிமிடங்களில்) மூன்று கோல்களை அடித்து சாதனை படைத்தார். இதேபோல் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி ஹாட்ரிக் கோலடித்தவர் என்ற சாதனையும் அவர் வசமே உள்ளது.
அதிக ஹாட்ரிக்: உலகக் கோப்பை வரலாற்றில் 4 பேர் இருமுறை ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்துள்ளனர். ஹங்கேரியின் சன்டோர் கோசிஸ் 1954-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென் கொரியா மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல்களை அடித்தார். பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெய்ன் 1958 உலகக் கோப்பையில் பராகுவே மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகளுக்கு எதிராக தலா 4 கோல்களை அடித்து இருமுறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
ஜெர்மனியின் ஜெர்டு முல்லர் 1970 உலகக் கோப்பையில் பல்கேரியா மற்றும் பெரு அணிகளுக்கு எதிராகவும், ஆர்ஜென்டீனாவின் கேபிரியேல் பாட்டிஸ்டுட்டா 1994 மற்றும் 1998 உலகக் கோப்பை போட்டிகளில் முறையே கிரீஸ் மற்றும் ஜமைக்கா அணிகளுக்கு எதிராகவும் ஹாட்ரிக் சாதனை படைத்தனர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 40 பேர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
1930 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 18
மொத்த கோல்கள் - 70
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 3.88
ரெட் கார்டு - 1
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 4, 34, 500
டாப் ஸ்கோர்
8 கோல்கள் - கில்லர்மோ ஸ்டைபைல் (ஆர்ஜென்டீனா)
5 கோல்கள் - பெட்ரோ சீ (உருகுவே)
4 கோல்கள் - கில்லர்மோ சுபியாப்ரே (சிலி)
4 கோல்கள் - பெர்ட் பெடேநாட் (அமெரிக்கா)
உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி
2-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1934-ம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 10-ம் தேதி வரை இத்தாலியில் நடைபெற்றது. இதுதான் ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை.
உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்ததன் எதிரொலியாக 2-வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க நடப்பு சாம்பியன் உருகுவே மறுத்துவிட்டது. இன்றளவிலும் நடப்பு சாம்பியன் விளையாடாத ஒரே உலகக் கோப்பை இத்தாலியில் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பைதான்.
இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முறையாக தகுதிச்சுற்று நடத்தப்பட்டது. இத்தாலி அணியும் தகுதிச்சுற்றில் விளையாடியே பிரதான சுற்றுக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடிய ஒரே உலகக் கோப்பை இதுதான். இதன்பிறகு நடைபெற்ற எல்லா உலகக் கோப்பைகளிலுமே போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நேரடித்தகுதி பெற்றது.
முதல் ஆப்பிரிக்க அணி
32 நாடுகள் பங்கேற்ற தகுதிச்சுற்று, கண்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டன. தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த பெரு மற்றும் சிலி அணிகள் தகுதிச்சுற்றில் இருந்து விலகியதால் ஆர்ஜென்டீனாவும், பிரேசிலும் தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
ஐரோப்பாவில் இருந்து 12 அணிகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், ஆர்ஜென்டீனா, அமெரிக்கா ஆகிய 3 அணிகளும், ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து அணியும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றன. இதன்மூலம் உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றது எகிப்து.
10 புதிய அணிகள்
முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய 6 அணிகள் மட்டுமே 2-வது உலகக் கோப்பையில் விளையாடின. எஞ்சிய அணிகளான இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஹங்கேரி, செக்கோஸ்லோவேகியா, ஸ்வீடன், ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, எகிப்து ஆகிய 10 அணிகளும் முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாடின. எகிப்து அணி இந்த உலகக் கோப்பைக்கு பிறகு 1990-வரை உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 1990-ல் மீண்டும் இத்தாலியில் உலகக் கோப்பை நடைபெற்றபோதுதான் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. முதல் உலகக் கோப்பை உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் 2-வது உலகக் கோப்பை போட்டி இத்தாலியின் 8 நகரங்களில் நடைபெற்றது.
பெனால்டி ஷூட் இல்லாத நாக் அவுட்
இந்த உலகக் கோப்பை நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்படவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி டிராவில் முடிந்தால், வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் டிராவானால், வெற்றியைத் தீர்மானிக்க அடுத்த நாளில் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியை நடத்திய இத்தாலி அணி தனது முதல் ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முதல் உலகக் கோப்பையில் தென் அமெரிக்கா நாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் 2-வது உலகக் கோப்பையில் எந்த அமெரிக்க அணியும் முதல் சுற்றை தாண்டவில்லை.
ஐரோப்பா ஆதிக்கம்
2-வது சுற்றுக்கு ஐரோப்பிய அணிகள் மட்டுமே முன்னேறின. உருகுவே அணி போட்டியில் பங்கேற்காதது, முதல் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவரும், அதிக கோலடித்தவருமான கில்லர்மோ போன்றவர்கள் ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்ததால் அந்த அணி முழுமையாக மாற்று ஆட்டக்காரர்களோடு ஆடியது ஆகியவையும் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியற்கு காரணம்.
ஆக்ரோஷமான காலிறுதி
இத்தாலி-ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு பிறகும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மிக ஆக்ரோஷமாக ஆடப்பட்ட இந்த ஆட்டத்தில் இரு அணி தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ஸ்பெயின் கோல் கீப்பர் ரிக்கார்டோ சமோராவால், வெற்றியைத் தீர்மானிப்பதற்காக மீண்டும் நடத்தப்பட்ட மாற்று காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. அதேநேரத்தில் ஸ்பெயின் வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்தில் சிக்கி காலை முறித்துக் கொண்ட இத்தாலி வீரர் மரியோ பிஸியோலோ, தன் வாழ்நாள் முழுவதும் கால்பந்து விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இத்தாலி சாம்பியன்
பின்னர் நடைபெற்ற மாற்று காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 3 ஸ்பெயின் வீரர்கள் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து நடைபெற்ற அரையிறுதியிலும் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவைத் தோற்கடித்த இத்தாலி, தனது இறுதிச்சுற்றில் செக்கோஸ்லோவேகியாவை சந்தித்தது. அந்த அணி தனது அரையிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 80 நிமிடங்கள் முடிந்திருந்தபோது செக்கோஸ்லோவேகியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் இத்தாலி கோலடிக்க, வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் 95-வது நிமிடத்தில் கோலடித்த இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது. இதன்மூலம் உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற வரலாற்றைப் படைத்தது.
கலக்கியவர்கள்
1934 உலகக் கோப்பை போட்டியில் இத்தாலியின் ராய்முன்டோ ஆர்சி, ஏஞ்ஜெலோ ஷியாவியோ, கியூசெப்பி மெஸ்ஸா ஆகியோர் தங்களின் அபார ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர். ஸ்பெயின் கோல் கீப்பர் ரிக்கார்டோ சமோரா, செக்கோஸ்லோவேகியாவின் ஸ்டிரைக்கர் ஆல்ட்ரிச் நிஜெட்லி ஆகியோரும் அந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத வீரர்கள் ஆவர்.
குறைந்தபட்ச கோல் சாதனை
இத்தாலி அணி 5 போட்டிகளில் விளையாடி 3 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. இது உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற அணிகள் வாங்கிய குறைந்தபட்ச கோல் சாதனையாக இருந்தது. 1966-ல் இங்கிலாந்தும், 1994-ல் பிரேசிலும் இந்த சாதனையை சமன் செய்தன. ஆனால் 1998, 2006, 2010-ம் ஆண்டுகளில் முறையே சாம்பியனான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் அணிகள் தலா இரு கோல்களை மட்டுமே வாங்கி, எதிரணியிடம் குறைந்தபட்ச கோல் வாங்கிய அணி என்ற புதிய சாதனையை படைத்தன.
இறுதியாட்டத்தில் இரு முறை ஆடியவர்
2-வது உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணிக்காக விளையாடிய மிட்பீல்டர் லூயிஸ் மான்டி, முதல் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுக்காக விளையாடினார். அதில் ஆர்ஜென்டீனா இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இதன்மூலம் இரு அணிகளுக்காக இரு உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
1934 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
17 மொத்த ஆட்டங்கள்
70 மொத்த கோல்கள்
4.12 ஒரு போட்டிக்கு சராசரி கோல்
1ரெட் கார்டு, 0 ஓன் கோல்
3,95,000 மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
டாப் ஸ்கோர்
5 கோல்கள்: ஆல்ட்ரிஜ் நெஜெட்லி (செக்கோஸ்லோவேகியா)
4 கோல்கள்: ஏஞ்ஜெலோ ஷியாவியோ (இத்தாலி)
4 கோல்கள்: எட்மன்ட் கானென் (ஜெர்மனி)
3 கோல்கள்: ராய்முன்டோ ஆர்சி (இத்தாலி)
3 கோல்கள்: லியோபால்ட் கீல்ஹோல்ஸ் (ஸ்விட்சர்லாந்து)
உங்களுக்கு தெரியுமா?
இதுவரை 19 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவையனைத் திலும் விளையாடிய ஒரே அணி பிரேசில். அதற்கடுத்தபடியாக இத்தாலி, ஜெர்மனி ஆகியவை தலா 17 முறையும், ஆர்ஜென்டீனா 15 முறையும், மெக்ஸிகோ 14 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தலா 13 முறையும், பெல்ஜியம், ஸ்வீடன், செர்பியா/யூகோஸ்லேவியா, உருகுவே ஆகியவை தலா 11 முறையும் உலகக் கோப்பையின் பிரதான சுற்றில் விளையாடியுள்ளன.
வரலாற்று நாயகன் கியூசெப்பி மெஸ்ஸா
இத்தாலி கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுவர் கியூசெப்பி மெஸ்ஸா. 1934-ல் இத்தாலி அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்.
இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவரான மெஸ்ஸா, 1927-ம் ஆண்டு தனது 17-வது வயதில் மிலன் அணிக்காக ஸ்டிரைக்கராக விளையாடத் தொடங்கினார். 1929-30 சீசனில் இத்தாலி லீக்கில் 33 கோல்களை அடித்த அவர், அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதேபோன்று மேலும் இரு முறை சாதனை படைத்த அவர், 1930-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ஆடியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்தார். அறிமுகப் போட்டியிலேயே இரு கோல்களை அடித்த அவர், 1939 வரை கொடிகட்டிப் பறந்தார்.
தாய்நாட்டுக்காக 53 சர்வதேச போட்டிகளில் 33 கோல்களை அடித்ததோடு, 1934-ல் இத்தாலி உலகக் கோப்பையை வெல்லவும் முக்கியக் காரணமாக இருந்தார். 1938-ல் பிரான்ஸில் நடைபெற்ற 3-வது உலகக் கோப்பையில் மெஸ்ஸா தலைமையிலான இத்தாலி கோப்பையை வென்றது.
இதன்பிறகு காயத்தால் அவதிப்பட்ட மெஸ்ஸா, 1939-ல் ஏசி மிலன் அணிக்காக இத்தாலி லீக்கில் விளையாட ஆரம்பித்தார். இதன்பிறகு ஜுவென்டஸ் மற்றும் வர்சி அணிகளுக்காக சிறப்பு அழைப்பு வீரராக விளையாடிய அவர், 1945-ல் அட்லாண்டா கிளப்புக்காக ஆடினார். அதோடு அவருடைய கால்பந்து பயணம் முடிந்தது.
இத்தாலி சீரி ஏ லீக்கில் மட்டும் 440 போட்டிகளில் விளையாடி 269 கோல்களை அடித்த மெஸ்ஸா 1979-ம் ஆண்டு தனது 69-வது வயதில் காலமானார்.
உலகக் கோப்பையை தக்கவைத்தது இத்தாலி
3-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1938-ம் ஆண்டு ஜூன் 4 முதல் 19 வரை பிரான்ஸில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பா கண்டத்துக்கு வழங்கியதால் கோபமடைந்த தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும், ஆர்ஜென்டீனாவும் போட்டியை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக ஸ்பெயின் அணி பங்கேற்கவில்லை.
நடப்பு சாம்பியன் இத்தாலிக்கும், போட்டியை நடத்திய பிரான்ஸுக்கும் நேரடித்தகுதி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 14 அணிகளில் ஐரோப்பாவில் இருந்து 11 அணிகளும், அமெரிக்க கண்டத்திலிருந்து பிரேசில், கியூபா அணிகளும், ஆசிய கண்டத்தில் இருந்து டச் ஈஸ்ட் இண்டிஸும் (தற்போதைய இந்தோனேசியா) பங்கேற்றன. உலகக் கோப்பை வரலாற்றில் ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் இருந்து குறைவான அணிகள் பங்கேற்ற போட்டி இதுதான்.
ஆஸ்திரியா விலகல்
ஆஸ்திரியா, உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தபோதிலும், ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகியது. ஆஸ்திரிய வீரர்கள் சிலர் ஜெர்மனிக்காக உலகக் கோப்பையில் விளையாடினர். ஆனால் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான மத்தியாஸ் சைன்டீலர் ஒன்றிணைந்த (ஜெர்மனி, ஆஸ்திரியா) அணிக்காக விளையாட மறுத்துவிட்டார்.
ஆஸ்திரியா பங்கேற்காததால், முதல் போட்டியில் அந்த அணியை எதிர்த்து விளையாடவிருந்த ஸ்வீடன் முதல் சுற்றில் விளையாடாமலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 1938 உலகக் கோப்பையில் விளையாடிய கியூபா, டச் ஈஸ்ட் இண்டிஸ் அணிகள் அதன்பிறகு தற்போது வரை உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை. 1938 உலகக் கோப்பையில் முதல்முறையாக போலந்து, நார்வே அணிகள் ஆடின. அதன்பிறகு 1994 வரை நார்வேயும், 1974 வரை நெதர்லாந்தும் உலகக் கோப்பையில் விளையாட தகுதிபெறவில்லை.
முந்தைய உலகக் கோப்பையைப் போன்றே இந்தப் போட்டியும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில் ஹங்கேரி, ஸ்வீடன், பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் ஹங்கேரி 5-1 என்ற கோல் கணக்கல் ஸ்வீடனை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
மற்றொரு அரையிறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில பிரேசிலை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. இத்தாலியை வீழ்த்திவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பிரேசில் பயிற்சியாளர், அரையிறுதியில் அதன் முன்னணி வீரர் லியோனிடாஸுக்கு ஓய்வு கொடுத்ததும் அதன் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. பிரேசில் அணி 3-வது இடத்தையும், ஸ்வீடன் அணி 4-வது இடத்தையும் பிடிக்க, இறுதிப்போட்டியில் இத்தாலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்றது.
16 ஆண்டுகள் நடப்பு சாம்பியன்
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1950-ல் மீண்டும் உலகக் கோப்பை நடத்தப்பட்டது. இதனால் 1934, 1938-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற இத்தாலி அணி தொடர்ந்து 16 ஆண்டுகள் உலக சாம்பியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்குத் தெரியுமா?
1938 உலகக் கோப்பை போட்டியில்தான் போட்டியை நடத்திய பிரான்ஸும், நடப்பு சாம்பியனான இத்தாலியும் தகுதிச்சுற்றில் விளையாடாமல் பிரதான சுற்றுக்கு நேரடித்தகுதி பெற்றன. போட்டியை நடத்தும் அணிக்கும், நடப்பு சாம்பியனுக்கும் நேரடித்தகுதி வழங்குவது 1938-ல் தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்தும் அணிக்கு இன்றளவிலும் நேரடித்தகுதி வழங்கப்பட்டாலும், நடப்பு சாம்பியனுக்கு நேரடித்தகுதி வழங்கும் நடைமுறை 2006 உலகக் கோப்பையோடு கைவிடப்பட்டது.
பை-சைக்கிள் 'கிக்'கால் புகழ் பெற்றவர்
1938 உலகக் கோப்பையில் பெரிதும் பேசப்பட்டவர் பிரேசில் வீரர் லியோனிடாஸ் டா சில்வாதான். அந்த உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்த அவர், போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்து தனது அணிக்கு 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி தேடித்தந்தார்.
பிரேசிலுக்காக 23 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர், தலைசிறந்த ஸ்டிரைக்கராக திகழ்ந்ததோடு, தனது பை-சைக்கிள் கிக்கால் (தற்போது சிசர் கட் அல்லது ஓவர் ஹெட் கிக் என அழைக்கப்படுகிறது) உலக அளவில் பிரபலமடைந்தார்.
கறுப்பு வைரம் அல்லது ரப்பர் மேன் என்றழைக்கப்பட்ட லியோனிடாஸ், ரியோ அணிக்காக கால்பந்து விளையாடத் தொடங்கினாலும், சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது உருகுவே அணிக்காக விளையாடினார். அவர் முதல் ஆட்டத்திலேயே இரு கோல்களை அடித்தார். அடுத்த ஓர் ஆண்டில் பிரேசில் அணிக்கு தாவிய அவர், பிரேசில் கால்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தார்
1938 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 18
மொத்த கோல்கள் - 84
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4.67
ரெட் கார்டு - 4
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 4,83,000
டாப் ஸ்கோர்
லியோனிடாஸ் (பிரேசில்) - 7 கோல்கள்
ஜியூலா ஸென்கெல்லர் (ஹங்கேரி) - 6 கோல்கள்
சில்வியோ பயோலா (இத்தாலி) - 5 கோல்கள்
உலகப் போருக்கு பிறகு உருகுவே சாம்பியன்
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. போர் முடிந்து சகஜ நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை நடத்தப்பட்டது. ஐரோப்பா கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் இரண்டாம் உலகப் போரால் பெரும் நாசம் ஏற்பட்டதன் காரணமாக 1950 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரால் இரு உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கால்பந்து ஆர்வலர்கள் மிகுந்த நாடான பிரேசிலில் உலகக் கோப்பையை நடத்தும்போது அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் நம்பியதும் அங்கு போட்டியை நடத்தியற்கு காரணம் ஆகும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தொடர்ச்சியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்த ஜுலியஸ் ரிமெட்டை கௌரவிக்கும் வகையில் இந்த உலகக் கோப்பைக்கு ஜூலியஸ் ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.
பிரிட்டன் அணிகள் பங்கேற்பு
இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக பிரிட்டனில் இருந்து அணிகள் பங்கேற்றன. இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. உலகக் கோப்பையின் முதல் சாம்பியனான உருகுவே ஐரோப்பாவில் நடைபெற்ற இரு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்த நிலையில், தென் அமெரிக்க கண்டத்துக்கு மீண்டும் உலகக் கோப்பை வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பங்கேற்றது.
இந்தியா விலகல்
போட்டிக்கான டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை தீர்மானித்தல்) இறுதி செய்யப்பட்ட பிறகு சில அணிகள் விலகின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் வெறும் காலோடு விளையாட சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுமதி மறுத்ததால், இந்தியா போட்டியிலிருந்து விலகியது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகள் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் 4 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் அதிக புள்ளிகள் பெறும் அணியே சாம்பியனாகும்.
முந்தைய உலகக் கோப்பையில் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், நிதி திரட்டுவதற்காகவும், போட்டியில் பங்கேற்கும் எல்லாஅணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் முறைகள் மாற்றியமைக்கப்பட்டன.
இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த உலகக் கோப்பையில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து 0-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைய, அதன் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது. அந்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த ஸ்பெயின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
உருகுவே 8-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது. அந்த ஆட்டத்தில் உருகுவேயின் ஷியாப்பினோ 4 கோல்களை அடித்தார். மற்ற இரு பிரிவுகளிலிருந்து ஸ்வீடன், பிரேசில் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.
இறுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் டிரா செய்த உருகுவே, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை தோற்கடித்தது. அதேநேரத்தில் பிரேசில் 7-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனையும், 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும் வீழ்த்தியது. இதனால் பிரேசில் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி சாம்பியனை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.
உருகுவே சாம்பியன்
இந்தப் போட்டியில் பிரேசில் டிரா செய்தாலே உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் உருகுவே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில், பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே பிரேசிலின் பிரைகா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், கோலடித்து ஸ்கோரை சமன் செய்த உருகுவே, மேலும் ஒரு கோலை போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
2 லட்சம் ரசிகர்கள்
ரியோ டி ஜெனிரோவில் உள்ள எஸ்டாடியா டூ மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரேசில் சாம்பியனாகும் என்ற கனவோடு சுமார் 2 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரேசில் தோல்வி கண்டது அந்நாட்டு ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதன்மூலம் 2-வது முறையாக கோப்பையை வென்ற உருகுவே, பங்கேற்ற இரு போட்டிகளிலும் கோப்பையை வென்றஒரே அணி என்ற பெருமையைப் பெற்றது.
உருகுவேயின் நாயகன்
1950-ல் உருகுவே அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் அந்த அணியின் ‘இன்சைடு’ ஸ்டிரைக்கரான ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோதான். 1925-ல் உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் பிறந்த ஷியாபினோ, தனது 17-வது வயதில் பெனாரோல் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். 19-வது வயதில் உருகுவே அணிக்காக ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.
இவரால் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர்களைக் கொண்டுள்ள அணிகளுக்கு எதிராக கோலடிக்க முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த கணிப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கிய ஷியாபினோ 1950-களில் தலைசிறந்த ‘இன்சைடு’ ஸ்டிரைக்கர்களில் ஒருவராக உருவெடுத்தார். 1950 உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, இறுதியாட்டத்தில் உருகுவே அணி பின்தங்கியிருந்தபோது சமநிலையை எட்டுவதற்கான கோலையும் அடித்து வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தார்.
1954 உலகக் கோப்பையில் பங்கேற்ற ஷியாபினோ, ஹங்கேரிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் காயமடைய, உருகுவே அணி தோல்வி கண்டது. இதன்பிறகு ஏசி மிலன் அணிக்கு விளையாடுவதற்காக 72 ஆயிரம் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அடுத்த 6 மாதங்களில் இத்தாலி அணிக்காக சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஷியாபினோ, ஏசி மிலன் அணி இத்தாலி லீக்கில் 3 முறை பட்டம் வெல்லவும், 1958 ஐரோப்பிய கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவும் முக்கியக் காரணமாக இருந்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
உலகக் கோப்பை வரலாற்றில் 1970 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அந்த இரு உலகக் கோப்பைகளிலும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை. இதேபோல் 1930-ல் சாம்பியன் பட்டம் வென்ற உருகுவேயும், 1938-ல் கோப்பையை வென்ற இத்தாலியும் ஓர் ஆட்டத்தில்கூட தோற்கவில்லை.
1950 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 22
மொத்த கோல்கள் - 88
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 4
ரெட் கார்டு - 0
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 13,37,000
டாப் ஸ்கோர்
அடீமிர் (பிரேசில்) - 9 கோல்கள்
ஜுவான் ஷியாபினோ (உருகுவே) - 5 கோல்கள்
எஸ்டானிஸ்லாவ் (ஸ்பெயின்) - 5 கோல்கள்
சிகோ (பிரேசில்) - 4 கோல்கள்
டெல்மோ ஜாரா (ஸ்பெயின்) - 4 கோல்கள்
ஒமர் மிகெஸ் (உருகுவே) - 4 கோல்கள்
அல்சிடெஸ் ஜிக்கியா (உருகுவே) - 4 கோல்கள்
1958 உலகக் கோப்பை கால்பந்து– பீலே அறிமுகம்
1962 உலகக் கோப்பை பிரேசில் மீண்டும் சாம்பியன்
1962-ம் ஆண்டு 7-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்அமெரிக்க நாடான சிலியில் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பையில் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து ஆட்டங்களைவிட போட்டியை நடத்த 3 நாடுகளிடையே போட்டி கடுமையாக இருந்தது.
போட்டியை எந்த நாடு நடத்துவது என்பதை முடிவு செய்ய 1960-ம் ஆண்டில் ஃபிபா கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஜெர்மனி, ஆர்ஜெண்டீனா, சிலி ஆகிய நாடுகள் போட்டியை நடத்த விண்ணப்பித்திருந்தன.
சிலியின் போராட்டம்
தொடர்ந்து இருமுறை ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டி நடைபெற்று விட்டதால் மேற்கு ஜெர்மனி நிராகரிக் கப்பட்டது. அடுத்ததாக ஆர்ஜெண்டீனா, சிலி ஆகிய நாடுகள் இடையே உலகக் கோப்பையை நடத்த கடும் போட்டி நிலவியது. கால்பந்து பராம்பரியம் மிக்க நாடு, கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ள நாடு என்ற அடிப்படையில் ஆர்ஜெண்டீனாவுக்கு போட்டி நடத்த வாய்ப்பு வழங்க அதிக காரணங்கள் இருந்தன.
அதே நேரத்தில் 1960-ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத் தில் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந் தனர். இந்த சம்பவம் அந்நாட்டுக்கு போட்டியை கொண்டு செல்வதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
எனினும் நிலநடுக்க சோகத்தை மைய மாக வைத்து சிலி கால்பந்து கூட்டமைப் பின் தலைவர் கார்லோஸ் டிர்பார்ன் வாதாடினார். நிலநடுக்கத்தால் இப்போது நாங்கள் அனைத் தையும் இழந்துள்ளோம். குறைந்தபட்சம் உலகக் கோப்பை போட் டியை எங்கள் நாட்டில் நடத்த உதவக் கூடாதா என்று ஃபிபாவிடம் கார்லோஸ் முறையிட்டு வெற்றி பெற்றார்.
பீலே வெளியேறினார்
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த உலகக் கோப்பையிலும் 16 அணிகள் பங்கேற்றன. இந்த உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான பிரேசில் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. 2-வது ஆட்டத்திலேயே நட்சத்திர வீரர் பீலே காயமடைந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த பீலே, மெக்ஸிகோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஒரு கோல் அடித்தார். அதில் 2-0 என்ற கணக்கில் பிரேசில் வென்றது.
செக்கோஸ்லோவேகியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெகுதூரத்தில் பந்தை கோலடிக்க முயற்சித்தபோது பீலே காயமடைந்து வெளியேறினார். அதன் பிறகு இந்த உலகக் கோப்பையில் எந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர் அமாரில்டோ களமிறங்கினார். இந்த உலகக் கோப்பையில் தோல்வியே அடையாத அணியாக பிரேசில் இருந்தது.
வீரர்களின் மோசமான மோதல்
உலகக் கோப்பை கால்பந்தில் வீரர்கள் மிகமோசமாக விளையாடியது இத்தாலி, சிலி அணிகளுக்கு இடையிலான போட்டி யின்போது அரங்கேறியது. சுமார் 70 ஆயிரம் ரசிகர்களின் பெரும் ஆரவாரத் துக்கு நடுவே சிலி இத்தாலி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது. எதிரணியினரை தள்ளி விடுவது, உதைப்பது போன்ற மோசமான செயல்களில் இரு தரப்பினரும் ஈடு பட்டனர்.
இத்தாலி வீரர்கள் இருவர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப் பட்டனர். போட்டி முடிந்த பிறகு இரு அணியினரையும் போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உருவானது. இந்த ஆட்டத்தில் சிலி 2-0 என்ற கணக்கில் வென்றது.
கரிஞ்சா, வாவா
பிரேசில் அணியில் பீலே இல்லாத குறையை கரிஞ்சா, வாவா ஆகியோர் நீக்கினார். பிரேசில், சிலி, செக்கோஸ் லோவேகியா, யுகோஸ்லோவேகியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பிரேசில், செக்கோஸ்லோ வேகியா ஆகிய அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 15-வது நிமிடத்திலேயே கோல் அடித்து செக்கோஸ்லோவேகியா முன்னிலை பெற்றது.
ஆனால் 17-வது நிமிடத்திலேயே பிரேசில் கோல் கணக்கை சமன் செய்தது. இதன் பிறகு போட்டி கடுமையானது. இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக போராடின. 68 மற்றும் 77-வது நிமிடங்களில் பிரேசில் கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. போட்டியை நடத்திய சிலி 3-வது இடம் பிடித்தது.
அசத்திய ‘சிறிய பறவை’
சிறிய பறவை என்ற அர்த்தத்தில் கரிஞ்சா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் பிரேசில் முன்கள வீரர் மானுவேல் பிரான் சிஸ்கோ. இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணி வெல்ல முக்கிய காரண மாக இருந்தவர் கரிஞ்சா. அவர் அடித்த 4 கோல்களுமே மிகவும் முக்கியமானவை. இப்போட்டியில் அதிக கோல் அடித்தவர்களில் இவரும் ஒருவர். பீலே இல்லாமல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல கரிஞ்சாவின் சிறப்பான ஆட்டம் முக்கியக் காரணமாக இருந்தது.
உங்களுக்கு தெரியுமா?
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் பிரேசிலின் ரொனால்டா. 1998 (4 கோல்), 2002 (8 கோல்), 2006 (3 கோல்) என மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 15 கோல்களை அடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ். இவர் 2002 (5 கோல்), 2006 (5 கோல்), 2010 (4 கோல்) என மொத்தம் 14 கோல்கள் அடித்துள்ளார். இப்போது நடைபெறவுள்ள உலகக் கோப்பையிலும் க்ளோஸ் களமிறங்குகிறார். எனவே ரொனால்டோவிடம் இருந்து அவர் முதலிடத்தை பறிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
1962 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள்- 35
மொத்த கோல்கள் - 89
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 2.78
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 7,76,000
டாப் ஸ்கோர்
4 கோல்கள்
கரிஞ்சா (பிரேசில்)
இவானோவ் (சோவியத் யூனியன்)
லயோனல் (சிலி)
வாவா (பிரேசில்)
ஆல்பர்ட் (ஹங்கேரி)
ஜெர்கோவிச் (யுகோஸ்லேவேகியா)
1966 உலகக் கோப்பை இங்கிலாந்து சாம்பியன்
1966-ல் நடைபெற்ற 8-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இங்கிலாந்து நடத்தியது. அதில் இங்கிலாந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
பேங்ஸ், மோரி, சார்ல்டன், கிரேவ்ஸ், ஹர்ட்ஸ், ஹன்ட் போன்ற தலைசிறந்த வீரர்களைக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் விளையாடியதால் கூடுதல் பலம் பெற்றது. டி.வி.யில் கறுப்பு வெள்ளையில் ஒளிபரப்பான கடைசி உலகக் கோப்பை போட்டி இதுதான். போட்டியை நேரில் பார்த்தவர்களின் மொத்த எண்ணிக்கை முதல்முறையாக 16 லட்சத்தை தாண்டியது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான பிரேசில் பின்னடைவை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் பல்கேரியாவுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் பிரேசில் வென்றது. இந்த ஆட்டத்தில் பீலேவும், கரிஞ்சாவும் கோல் அடித்தனர்.
ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக பீலே விளையாடவில்லை. இதில் 1-3 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியடைந்தது. அரையிறுதிக்கு பிரேசில் தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இருமுறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் முதல்சுற்றுடன் வெளியேறியது. 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே பிரேசில் வென்றது. போட்டியில் பங்கேற்ற 16 நாடுகளில் பிரேசிலால் 11-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
இங்கிலாந்து, போர்ச்சுகல், ஆர்ஜெண்டீனா, வடகொரியா, மேற்கு ஜெர்மனி, உருகுவே, சோவியத் யூனியன், ஹங்கேரி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் மேற்கு ஜெர்மனி இங்கிலாந்து அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதின. இறுதி ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
1966 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 32
மொத்த கோல்கள் - 89
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 2.78
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 16,14,677
டாப் ஸ்கோர்
யூஸ்பியோ (போர்ச்சுகல்) - 9 கோல்கள்
ஹால்லர் (ஜெர்மனி) - 6 கோல்கள்
ஹர்ட்ஸ் (இங்கிலாந்து) - 4 கோல்கள்
பெக்கின்பர் (ஜெர்மனி) - 4 கோல்கள்
போர்க்யான் (சோவியத்) - 4 கோல்கள்
பென் (ஹங்கேரி) - 4 கோல்கள்
1970 உலகக் கோப்பை - பிரேசில் எழுச்சி
1970-ம் ஆண்டு நடைபெற்ற 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மெக்ஸிகோ நடத்தியது. இந்த போட்டிக்கு தயாராவதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கொலம்பியாவில் பயிற்சி மேற்கொண்டது.
அந்த அணியின் கேப்டன் பாபி மோரி, ஒருவரது கை செயினை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், அவரை மெக்ஸிகோவுக்கு அனுமதிக்க கொலம்பியா மறுத்துவிட்டது. எனினும் அவர் மீதான திருட்டு குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டு அணி வீரர்களுடன் இணைந்தார்.
சிவப்பு அட்டை அறிமுகம்
இந்த உலகக் கோப்பை போட்டியில் தான் வீரர்களை எச்சரிப்பதற்காக மஞ்சள் அட்டையும், அவர்களை வெளியேற்றுவதற்காக சிவப்பு அட்டையும் காண்பிக்கும் முறையை ஃபிபா அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்பு அட்டை எதுவும் காண்பிக்காமல் முரட்டுத்தனமாக விளையாடும் வீரர்களை எச்சரித்து வெளியேற்றும் நடைமுறையே இருந்தது.
இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 52 முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சிவப்பு அட்டை பயன்படுத்தப்படவில்லை. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணி புதிய எழுச்சியுடன் விளையாடியது. 6 போட்டிகளில் பங்கேற்ற அணி அவை அனைத்திலும் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
பிரேசில், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, உருகுவே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அரையிறுதியில் உருகுவே அணியை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்த பிரேசில், இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் ஜெய்ர்ஜின்கோ 7 கோல்களையும், பீலே 4 கோல்களையும் அடித்தனர். உலகக் கோப்பை கால்பந்து
சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரேசில் வெற்றது. பிரேசில் பயிற்சியாளர் மரியோ, அணி வீரராகவும், பயிற்சியாளராகவும் கோப்பையை வென்றவர் என்ற சிறப்பைப் பெற்றார்.
தெரியுமா உங்களுக்கு
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) 1904-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டாலும், சர்வதேச அளவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த சுமார் 30 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பு வரை ஒலிம்பிக் போட்டி மட்டுமே சர்வதேச அணிகள் மோதும் கால்பந்து போட்டியாக இருந்தது.
அப்போது சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு, ஃபிபாவும் இணைந்து கால்பந்து போட்டிகளை நடத்திவந்தன. ஒலிம்பிக்கில் நடத்தப்படும் கால்பந்து போட்டியை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சினை எழுந்தது. இதையடுத்து 1928-ம் ஆண்டில் ஒலிம்பிக்கில் இருந்து கால்பந்து போட்டியை விலக்கிக் கொள்வது என்று ஃபிபா முடிவுவெடுத்தது. உலகக்கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்டது.
1970 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 32
மொத்த கோல்கள் - 95
ஒரு போட்டிக்கு சராசரி கோல்
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 16,73,975
டாப் ஸ்கோர்
கிரிட் முல்லர் (ஜெர்மனி) - 10 கோல்கள்
ஜெய்ர்ஜின்கோ (பிரேசில்) - 7 கோல்கள்
குபிலாஸ் (பெரு) - 5 கோல்கள்
பீலே (பிரேசில்) - 4 கோல்கள்
பைஷுவெட்ஸ் (சோவியத்) - 4 கோல்கள்
10–வது உலக கோப்பை–1974 (சாம்பியன் மேற்கு ஜெர்மனி)
நடத்திய நாடு–மேற்கு ஜெர்மனி, பங்கேற்ற அணிகள்–16, அடித்த கோல்கள்–97
முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல், பிரான்ஸ், மெக்சிகோ, ஹங்கேரி, ஸ்பெயின் ஆகிய முன்னணி அணிகள் தகுதி சுற்று தடையை கடக்க முடியாமல் முடங்கி போயின. அதே நேரத்தில் கிழக்கு ஜெர்மனி, ஹைதி, ஆஸ்திரேலியா, ஜாயிர் ஆகிய அணிகள் உலக கோப்பை காற்றை முதல் முறையாக சுவாசித்தன.
இதில் லீக் ஆட்டங்கள் 4 பிரிவாக நடந்தன. குரூப்–2ல் யுகோஸ்லாவியா, பிரேசில், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, 2 டிராவுடன் சமநிலையில் இருந்ததால் கோல் அடிப்படையில் யுகோஸ்லாவியா, பிரேசில் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. தோல்வியே சந்திக்காமல் முதல் சுற்றுடன் வெளியேறிய முதல் துதிர்ஷ்ட அணி ஸ்காட்லாந்து தான். லீக் முடிவில் 8 அணிகள் 2–வது சுற்றுக்கு முன்னேறின. 2–வது சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதில் ‘ஏ’ பிரிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நெதர்லாந்து இறுதிப்போட்டிக்கு வந்தது. நடப்பு சாம்பியன் பிரேசில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வாய்ப்பை இழந்தது. இதே போல் ‘பி’ பிரிவில் மேற்கு ஜெர்மனி அணி 3 வெற்றிகளுடன் இறுதி சுற்றை எட்டியது.
இறுதிப்போட்டியில் ஜெர்மனியும், நெதர்லாந்தும் முனிச் நகரில் மோதின. 2–வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் ஜோஹன் நீஸ்கென்ஸ் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் போட்ட போதிலும், 25–வது நிமிடத்தில் பிரிட்னெரும், 43–வது நிமிடத்தில் ஜெர்டு முல்லரும் கோல் போட்டு மேற்கு ஜெர்மனியை 2–1 என்ற கணக்கில் 2–வது முறையாக உலக கோப்பையை வாங்க வைத்தனர். வெற்றிக்குரிய கோல் அடித்த திருப்தியுடன் ஜெர்டு முல்லர் சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுத்தார்.
இந்த உலக கோப்பையில் சிலி வீரர் கார்லஸ் கேஸ்ஜிலி, மேற்கு ஜெர்மனிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். உலக கோப்பையில் சிவப்பு அட்டையை பெற்ற முதல் வீரர் இவர் தான். அது மட்டுமின்றி முந்தைய தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கபட்ட ஜூல்ஸ் ரிமெட் கோப்பை 3 முறை சாம்பியான பிரேசிலிடம் நிரந்தரமாக கொடுக்கப்பட்டது. இந்த போட்டிக்கு புதிய உலக கோப்பை வடிவமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்த 53 வடிவமைப்புகளில் இத்தாலி சிற்பி சில்வியோ காஸ்ஜானிகாவின் கைவண்ணத்தில் உருவான படைப்பு தேர்வு செய்யப்பட்டது. அது தான் இன்று வரை நடைமுறையில் உள்ள ‘பிபா’ உலக கோப்பை ஆகும்.
முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல், பிரான்ஸ், மெக்சிகோ, ஹங்கேரி, ஸ்பெயின் ஆகிய முன்னணி அணிகள் தகுதி சுற்று தடையை கடக்க முடியாமல் முடங்கி போயின. அதே நேரத்தில் கிழக்கு ஜெர்மனி, ஹைதி, ஆஸ்திரேலியா, ஜாயிர் ஆகிய அணிகள் உலக கோப்பை காற்றை முதல் முறையாக சுவாசித்தன.
இதில் லீக் ஆட்டங்கள் 4 பிரிவாக நடந்தன. குரூப்–2ல் யுகோஸ்லாவியா, பிரேசில், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, 2 டிராவுடன் சமநிலையில் இருந்ததால் கோல் அடிப்படையில் யுகோஸ்லாவியா, பிரேசில் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. தோல்வியே சந்திக்காமல் முதல் சுற்றுடன் வெளியேறிய முதல் துதிர்ஷ்ட அணி ஸ்காட்லாந்து தான். லீக் முடிவில் 8 அணிகள் 2–வது சுற்றுக்கு முன்னேறின. 2–வது சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதில் ‘ஏ’ பிரிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நெதர்லாந்து இறுதிப்போட்டிக்கு வந்தது. நடப்பு சாம்பியன் பிரேசில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வாய்ப்பை இழந்தது. இதே போல் ‘பி’ பிரிவில் மேற்கு ஜெர்மனி அணி 3 வெற்றிகளுடன் இறுதி சுற்றை எட்டியது.
இறுதிப்போட்டியில் ஜெர்மனியும், நெதர்லாந்தும் முனிச் நகரில் மோதின. 2–வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் ஜோஹன் நீஸ்கென்ஸ் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் போட்ட போதிலும், 25–வது நிமிடத்தில் பிரிட்னெரும், 43–வது நிமிடத்தில் ஜெர்டு முல்லரும் கோல் போட்டு மேற்கு ஜெர்மனியை 2–1 என்ற கணக்கில் 2–வது முறையாக உலக கோப்பையை வாங்க வைத்தனர். வெற்றிக்குரிய கோல் அடித்த திருப்தியுடன் ஜெர்டு முல்லர் சர்வதேச கால்பந்துக்கு விடைகொடுத்தார்.
இந்த உலக கோப்பையில் சிலி வீரர் கார்லஸ் கேஸ்ஜிலி, மேற்கு ஜெர்மனிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். உலக கோப்பையில் சிவப்பு அட்டையை பெற்ற முதல் வீரர் இவர் தான். அது மட்டுமின்றி முந்தைய தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கபட்ட ஜூல்ஸ் ரிமெட் கோப்பை 3 முறை சாம்பியான பிரேசிலிடம் நிரந்தரமாக கொடுக்கப்பட்டது. இந்த போட்டிக்கு புதிய உலக கோப்பை வடிவமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்த 53 வடிவமைப்புகளில் இத்தாலி சிற்பி சில்வியோ காஸ்ஜானிகாவின் கைவண்ணத்தில் உருவான படைப்பு தேர்வு செய்யப்பட்டது. அது தான் இன்று வரை நடைமுறையில் உள்ள ‘பிபா’ உலக கோப்பை ஆகும்.
11–வது உலக கோப்பை–1978 (சாம்பியன் அர்ஜென்டினா)
நடத்திய நாடு–அர்ஜென்டினா, பங்கேற்ற அணிகள்–16, அடித்த கோல்கள்–102
இந்த முறை போட்டிக்கு தகுதி பெறாத அணிகளில் உருகுவே, இங்கிலாந்து, செக்கோஸ்லோவக்கியா குறிப்பிடத்தக்கவை. ஈரான் மற்றும் ஆப்பிரிக்க நாடான துனிசியா புதிய வரவுகள். 1966–ம் ஆண்டுக்கு பிறகு பிரான்ஸ், ஸ்பெயின், ஹங்கேரி அணிகள் மீண்டும் தகுதி பெற்றன.
4 பிரிவாக நடந்த முதல் சுற்றில் சில அதிர்ச்சி முடிவுகள் கிடைத்தன. நடப்பு சாம்பியன் மேற்கு ஜெர்மனி அணி போலந்து மற்றும் துனிசியாவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் இரு ஆட்டத்திலும் 0–0 என்று டிரா செய்தது. துனிசியா 3–1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். ஏனெனில் உலக கோ£ப்பையில் ஆப்பிரிக்க அணி சுவைத்த முதல் வெற்றி இதுதான்.
லீக் முடிவில் 8 அணிகள் 2–வது சுற்றுக்குள் நுழைந்தது. இரண்டாவது சுற்றில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து (2 வெற்றி, ஒரு தோல்வி என்று 5 புள்ளிகள்) இறுதிப்போட்டியை உறுதி செய்தது. இத்தாலி (3 புள்ளி), மேற்கு ஜெர்மனி (2 புள்ளி), ஆஸ்திரியா (2 புள்ளி) வெளியேறின. இதே போல் ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு டிரா என்று 5 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ஷ்டம் கிட்டியது.
இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் அர்ஜென்டினா, நெதர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இதையடுத்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் மரியோ கெம்ப்ஸ், பெர்டோனி கோல் போட 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. போட்டியை நடத்தும் நாடே உலக கோப்பையையும் வெல்வது இது 5–வது முறையாகும். நெதர்லாந்து தொடர்ந்து 2–வது முறையாக இறுதி சுற்றில் தோற்றது. 6 கோல்களுடன் இந்த தொடரில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினாவின் மரியோ கெம்ப்ஸ் தங்க ஷூவை கைப்பற்றினார்.
இந்த முறை போட்டிக்கு தகுதி பெறாத அணிகளில் உருகுவே, இங்கிலாந்து, செக்கோஸ்லோவக்கியா குறிப்பிடத்தக்கவை. ஈரான் மற்றும் ஆப்பிரிக்க நாடான துனிசியா புதிய வரவுகள். 1966–ம் ஆண்டுக்கு பிறகு பிரான்ஸ், ஸ்பெயின், ஹங்கேரி அணிகள் மீண்டும் தகுதி பெற்றன.
4 பிரிவாக நடந்த முதல் சுற்றில் சில அதிர்ச்சி முடிவுகள் கிடைத்தன. நடப்பு சாம்பியன் மேற்கு ஜெர்மனி அணி போலந்து மற்றும் துனிசியாவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் இரு ஆட்டத்திலும் 0–0 என்று டிரா செய்தது. துனிசியா 3–1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். ஏனெனில் உலக கோ£ப்பையில் ஆப்பிரிக்க அணி சுவைத்த முதல் வெற்றி இதுதான்.
லீக் முடிவில் 8 அணிகள் 2–வது சுற்றுக்குள் நுழைந்தது. இரண்டாவது சுற்றில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து (2 வெற்றி, ஒரு தோல்வி என்று 5 புள்ளிகள்) இறுதிப்போட்டியை உறுதி செய்தது. இத்தாலி (3 புள்ளி), மேற்கு ஜெர்மனி (2 புள்ளி), ஆஸ்திரியா (2 புள்ளி) வெளியேறின. இதே போல் ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு டிரா என்று 5 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ஷ்டம் கிட்டியது.
இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் அர்ஜென்டினா, நெதர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. இதையடுத்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவின் மரியோ கெம்ப்ஸ், பெர்டோனி கோல் போட 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. போட்டியை நடத்தும் நாடே உலக கோப்பையையும் வெல்வது இது 5–வது முறையாகும். நெதர்லாந்து தொடர்ந்து 2–வது முறையாக இறுதி சுற்றில் தோற்றது. 6 கோல்களுடன் இந்த தொடரில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினாவின் மரியோ கெம்ப்ஸ் தங்க ஷூவை கைப்பற்றினார்.
1982 உலகக் கோப்பை கால்பந்து: அதிக அணிகளுக்கு வாய்ப்பு
1982-ம் ஆண்டு 12-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அல்ஜீரியா, கேமரூன், ஹோன்டுராஸ், குவைத், நியூசிலாந்து உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க அணிகள் உலகக் கோப்பையில் விளையாட முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இத்தாலி களமிறங்கிய போது அந்த அணியுடன் சேர்ந்த அதிர்ஷ்டமும் களமிறங்கி அவர்களுக்காக விளையாடியது என்றுதான் கூற வேண்டும். இதனால் 3-முறையாக இத்தாலி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.
லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றியைக் கூட பெறாத இத்தாலி கோல் கணக்கின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெறாத ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். லீக் ஆட்டத்தில் போலந்து, பெரு, கேமரூன் ஆகிய அணிகளுடனான போட்டியை இத்தாலி டிரா செய்தது.
எனினும் 2-வது சுற்றில் இத்தாலி வீரர்கள் உத்வேகத்துடன் களமிறங்கினர். முக்கியமாக இத்தாலியின் பாலோ ரோஹி பிரேசில் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார். இதனால் பிரேசிலை 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. ஆர்ஜெண்டீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. அதே உத்வேகத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி போலந்து அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி – இத்தாலி அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல்கணக்கில் மேற்கு ஜெர்மனியை இத்தாலி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மொத்தம் 7 ஆட்டங்களில் 12 கோல்களை மட்டுமே அடித்து இத்தாலி கோப்பையைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த அணியின் பாலோ ரோஸி 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்க ஷூ பரிசை வென்றார். இவர் 1980 மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கி 2 ஆண்டுகள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி கேப்டன், கோல் கீப்பராக இருந்த டினோ ஜோப் அதிக வயதில் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்று, இப்போது வரை அதனை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இத்தாலி அணிக்காக உலகக் கோப்பையை வென்றபோது அவருக்கு வயது 40.
1982 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டங்கள் - 52
மொத்த கோல்கள் - 146
ஒரு போட்டியில் சராசரி கோல் - 2.81
மைதானத்துக்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 18,56,277
டாப் ஸ்கோர்
பாலோ ரோஸி (இத்தாலி) - 6 கோல்கள்
கார்ல் ஹின்ஸ் (மேற்கு ஜெர்மனி) - 5 கோல்கள்
போனிக் (போலந்து) - 4 கோல்கள்
சிகோ (பிரேசில்) - 4 கோல்கள்
ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன்-1986
1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்ஸிகோவில் மே 31 முதல் ஜூன் 28 வரை நடைபெற்றது. முன்னதாக இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு கொலம்பியா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக உலகக் கோப்பையை நடத்த முடியாது என அந்நாடு தெரிவித்துவிட்டது.
இதையடுத்து மெக்ஸிகோவில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதன்மூலம் இரு உலகக் கோப்பையை நடத்திய முதல் நாடு என்ற பெருமை மெக்ஸிகோ வசமானது.
ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், பிரேசில், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், பெல்ஜியம் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், மேற்கு ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஆர்ஜென்டீனா சாம்பியன்
அரையிறுதியில் ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், மேற்கு ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றின் முதல் பாதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜோஸ் பிரௌன் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஜார்ஜ் வல்டானோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையை எட்டியது. 73-வது நிமிடம் வரை இதே நிலை நீடிக்க, 74-வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி எழுச்சி பெற்றது. மேற்கு ஜெர்மனியின் கார்ல் ஹெய்ன்ஸ் முதல் கோலை அடிக்க, 80-வது நிமிடத்தில் ரூடி வாலர் அடுத்த கோலை அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.
இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது மரடோனா அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்தினார். அதை சரியாகப் பயன்படுத்திய ஜார்ஜ் புருசாஹா கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன் ஆனது.
உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, 5 அழகான கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த மரடோனா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோல்டன் பால் விருதும், அதிக கோலடித்தவரான இங்கிலாந்து வீரர் கேரி லினிகெருக்கு கோல்டன் பூட்ஸ் விருதும் வழங்கப்பட்டன.
மரடோனாவின் மாயாஜாலம்
இந்த உலகக் கோப்பையின் காலிறுதியில் இங்கிலாந்தும், ஆர்ஜென்டீனாவும் மோதின. அதில் ஆர்ஜென்டீன கேப்டன் டீகோ மரடோனா தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். அவர் தலையால் பந்தை முட்டியபோது அவருடைய கையும் பந்தின் மீது பட்டதை கவனிக்கத் தவறிய நடுவர் அதை கோல் என அறிவித்தார்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கோலை கடவுளின் கையால் கிடைத்த கோல் என மரடோனா கிண்டலாகக் கூறினார். இன்று வரை அந்த கோல் “ஹேன்ட் ஆப் காட்” கோல் என்றே அழைக்கப்படுகிறது.
இதே ஆட்டத்தில் மரடோனா மற்றொரு கோலும் அடித்தார். அப்போது இங்கிலாந்தின் 5 வீரர்களை பின்னுக்குத்தள்ளி பந்தை எடுத்துச் சென்ற மரடோனா, கடைசியாக கோல் கீப்பரையும் வீழ்த்தி கோலடித்தார். இந்த கோல், பின்னாளில் நூற்றாண்டின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டது.
1986 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 132
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,407,431
ஓர் ஆட்டத்தில் அதிக கோல், புட்ராகினோ (ஸ்பெயின்) - 4 கோல்கள்
கோலடிக்கப்படாத ஆட்டம் - 4
டிராவான ஆட்டம் - 14
டாப் ஸ்கோர்
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 6 கோல்
டீகோ மரடோனா (ஆர்ஜென்டீனா) - 5 கோல்
எமிலியோ புட்ராகினோ (ஸ்பெயின்) - 5 கோல்
கரேகா (பிரேசில்) - 5 கோல்
ரெட் கார்டு - 8
யெல்லோ கார்டு - 137
இத்தாலியில் 2-வது உலகக் கோப்பை-1990
1990 உலகக் கோப்பை கால்பந்து போட்டி இத்தாலியில் ஜூன் 8 முதல் ஜூலை 8 வரை நடைபெற்றது. இதன்மூலம் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக இருமுறை உலகக் கோப்பையை நடத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றது இத்தாலி.
இந்தப் போட்டியின் தகுதிச்சுற்றில் 6 கண்டங்களைச் சேர்ந்த 116 அணிகள் பங்கேற்றன. அதில் இருந்து 22 அணிகள் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. போட்டியை நடத்திய இத்தாலி, நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா ஆகியவை நேரடித் தகுதி பெற்றன.
இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவிடம் கண்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தது ஜெர்மனி. பெனால்டி ஷூட் அவுட் முறையில் அரையிறுதியில் தோல்வி கண்ட இங்கிலாந்தும், இத்தாலியும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதின. இதில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
பெரிய அளவில் கோலின்றி அமைந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த உலகக் கோப்பையில் சராசரியாக ஒவ்வொரு ஆட்டத்திலும் (2.21) குறைவான கோல்கள் அடிக்கப்பட்டதோடு, மொத்தம் 16 ரெட் கார்டுகளும் வழங்கப்பட்டன. அதில் ஒன்று இறுதியாட்டத்தில் வழங்கப்பட்டதாகும். உலகக் கோப்பை வராற்றில் இறுதியாட்டத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது முதல்முறையாகும். எனினும் அதிக ரசிகர்களால் கண்டுகளிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது, அதிக கோலடித்தவருக்கான விருது என இரண்டையும் இத்தாலியின் சால்வடார் ஷிலாச்சி தட்டிச் சென்றார்.
1990 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 115
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,517,348
கோலடிக்கப்படாத ஆட்டம் - 5
டிராவான ஆட்டம் - 12
டாப் ஸ்கோர்
சால்வடார் ஷிலாச்சி (இத்தாலி) - 6
டோமஸ் ஸ்குராவி (செக்.குடியரசு) - 5
மைக்கேல் (ஸ்பெயின்) - 4
ரோஜர் மில்லா (கேமரூன்) - 4
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 4
லோதார் மட்ஹஸ் (ஜெர்மனி) - 4
ரெட் கார்டு - 16
யெல்லோ கார்டு - 169
சாம்பியனைத் தீர்மானித்த பெனால்டி ஷூட் அவுட்-1994
15-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் 9 நகரங்களில் 1994 ஜூன் 17 முதல் ஜூலை 17 வரை நடைபெற்றது. இந்த உலகக் கோப்பையின் இறுதியாட்டத்தில் பிரேசிலும், இத்தாலியும் மோதின. போட்டி நேரத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
அதிலும் கோல் கிடைக்காததைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியைத் தோற்கடித்தது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி இதுதான். இதில் வென்றதன் மூலம் 4 முறை உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமை பிரேசிலுக்கு கிடைத்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சராசரியாக 69,000 பேர் வந்தனர். ஒட்டுமொத்தமாக 3,587,538 பேர் மைதானத்திற்கு வந்து போட்டியைக் கண்டுகளித்தனர். உலகக் கோப்பை வரலாற்றில் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்த உலகக் கோப்பை போட்டி இதுதான்.
சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது பிரேசிலின் ரொமேரியோவுக்கும், அதிக கோலடித்தவர்களுக்கான கோல்டன் ஷூ விருது பல்கேரியாவின் ரிஸ்டோ ஸ்டாய்ட்கோ, ரஷியாவின் ஓலேக் சாலென்கோ ஆகியோருக்கும் கிடைத்தன.
1994 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 141
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 3,587,538
கோலின்றி முடிந்த ஆட்டம் - 3
டிராவில் முடிந்த ஆட்டம் - 11
டாப் ஸ்கோர்
ரிஸ்டோ ஸ்டாய்ட்கோ - 6 கோல்
ஓலேக் சாலென்கோ - 6 கோல்
ரொமாரியோ (பிரேசில்) - 5 கோல்
ராபர்ட்டோ பேக்கியோ (இத்தாலி) - 5 கோல்
ஜூர்கன் கிளின்ஸ்மான் (ஜெர்மனி) - 5 கோல்
கென்னட் ஆண்டர்சன் (ஸ்வீடன்) - 5 கோல்
ரெட் கார்டு - 15
யெல்லோ கார்டு - 235
கோப்பையை வென்ற 7-வது நாடு-1998-16th
16-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1998-ம் ஆண்டு ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை பிரான்ஸில் நடைபெற்றது. அங்குள்ள 10 நகரங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் பங்கேற்றன.
1994 வரை 24 அணிகளே உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கூடுதலாக 8 அணிகள் அனுமதிக்கப்பட்டன.
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 64 போட்டிகள் நடத்தப்பட்டன. உலகக் கோப்பையின் தொடக்க போட்டியும், இறுதிப் போட்டியும் செயின்ட் டெனிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸில் நடைபெற்றன.
அரையிறுதியில் பிரேசில் அணி நெதர்லாந்தையும், பிரான்ஸ் அணி குரேஷியாவையும் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இறுதியாட்டத்தைப் பொறுத்தவரையில் பிரான்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த ஜிடேன், முதல் பாதி ஆட்டத்தின் இஞ்சுரி நேரத்தில் (45+1) மற்றொரு கோலை அடிக்க, பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் இஞ்சுரி நேரத்தில் (90+3) பிரான்ஸின் பெடிட் கோலடிக்க, அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்து உலக சாம்பியன் ஆனது. முதல்முறையாக சாம்பியன் ஆன பிரான்ஸ், உலகக் கோப்பையை வென்ற 7-வது நாடு என்ற பெருமையைப் பெற்றது. இதுதவிர சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற 6-வது நாடு என்ற பெருமையையும் பெற்றது.
முன்னதாக உருகுவே, இத்தாலி, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, அர்ஜென்டீனா ஆகிய அணிகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றிருந்தன. சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது பிரேசிலின் ரொனால்டோவுக்கும், அதிக கோலடித்த வீரருக்கான கோல்டன் ஷூ விருது குரேஷியாவின் டேவர் சூகருக்கும் கிடைத்தன.
1998 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 64
மொத்த கோல் - 171
ஒன் கோல் - 4
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,785,100
கோலின்றி முடிந்த ஆட்டம் - 4
டிராவில் முடிந்த ஆட்டம் - 19
டாப் ஸ்கோர்
டேவர் சூகர் (குரேஷியா) - 6 கோல்
கேபிரியேல் பட்டிஸ்டா (அர்ஜென்டீனா) - 5 கோல்
கிறிஸ்டியான் வியெரி (இத்தாலி) - 5 கோல்
ரெட் கார்டு - 22
யெல்லோ கார்டு - 258
பிரேசில் 5-வது முறையாக சாம்பியன்-2002-17th
17-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜப்பானும், தென் கொரியாவும் இணைந்து நடத்தின. 2002-ல் நடைபெற்ற இந்த போட்டிதான் ஆசியாவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியாகும். ஜப்பானின் 10 நகரங்கள், தென் கொரியாவின் 10 நகரங்கள் என 20 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்றது. வெற்றியைத் தீர்மானிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட கோல்டன் கோல் விதிமுறை இந்த உலகக் கோப்பையோடு கைவிடப்பட்டது.
பிரான்ஸ் வெளியேற்றம்
முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 0-1 என்ற கோல் கணக்கில் செனீகல் அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதன்பிறகு உருகுவேயுடன் 0-0 என டிரா செய்த பிரான்ஸ், கடைசி லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் தோல்வி கண்டது. ஒரு கோல்கூட அடிக்காத பிரான்ஸ், ஒரெயொரு டிராவுடன் ஏ பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்து, முதல் சுற்றோடு போட்டியிலிருந்து வெளியேறியது.
போட்டியை நடத்திய நாடுகளில் ஒன்றான ஜப்பான் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 0-1 என்ற கோல் கணக்கில் துருக்கியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. மற்றொரு நாடான தென் கொரியா அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவையும், பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியையும் தோற்கடித்தன. பின்னர் நடைபெற்ற 2-வது இடத்துக்கான ஆட்டத்தில் துருக்கி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்தது.
ஜெர்மனி 4-வது முறையாக தோல்வி
ஜப்பானின் யோகோஹமாவில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அந்த உலகக் கோப்பையின் தலைசிறந்த அணிகளான ஜெர்மனியும், பிரேசிலும் சந்தித்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோல் எதுவும் விழாத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் பிரேசிலின் ரிவால்டோ நீண்ட தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தையடித்தார்.
ஜெர்மனியின் கேப்டனும், கோல் கீப்பருமான ஆலிவர் கான் பந்தை தகர்க்க, அவருடைய கையில் இருந்து நழுவிய பந்து பிரேசிலின் ரொனால்டோவிடம் செல்ல, அவர் அதை கோலாக்கி, ஜெர்மனியின் உலகக் கோப்பை கனவை தகர்த்தார்.
இதையடுத்து 79-வது நிமிடத்தில் ரொனால்டோ தனது 2-வது கோலை அடிக்க, பிரேசில் 5-வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஜெர்மனி 4-வது முறையாக இறுதியாட்டத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையை இழந்த சோகத்தை தாங்க முடியாத ஜெர்மனி கேப்டன் ஆலிவர் கான் தேம்பி தேம்பி அழுத காட்சி மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
2002 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 64
மொத்த கோல் - 161
ஓன் கோல் - 3
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,705,134
கோலின்றி முடிந்த ஆட்டம் - 3
டிராவில் முடிந்த ஆட்டம் - 16
டாப் ஸ்கோர்
ரொனால்டோ (பிரேசில்) - 8
மிரோஸ்லாவ் க்ளோஸ் (ஜெர்மனி) - 5
ரிவால்டோ (பிரேசில்) - 5
ரெட் கார்டு - 17
யெல்லோ கார்டு - 272
இத்தாலி 4-வது கோப்பை-2006-18
18-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2006-ல் ஜெர்மனியில் நடைபெற்றது. அங்கோலா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, கானா, டோகோ, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, உக்ரைன், செர்பியா ஆகிய அணிகள் முதல்முறையாக உலகக் கோப்பையில் களம் கண்டன.
நடப்பு சாம்பியன் பிரேசில் இந்த முறையும் கோலோச்சும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலிறுதியில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல்லை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. போட்டியை நடத்திய ஜெர்மனி 0-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோல்வி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல்லை தோற்கடித்தது.
பிரான்ஸும், இத்தாலியும் மோதிய இறுதியாட்டத்தில் கூடுதல் நேரத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் இத்தாலி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு 4-வது முறையாக உலக சாம்பியன் ஆனது.
இறுதியாட்டத்தின்போது இத்தாலி வீரர் மார்கோ மெடராஸி, அசிங்கமான வார்த்தைகளை உபயோகித்ததாகக் கூறி அவருடைய மார்பில் தலையால் முட்டி கீழே தள்ளினார் பிரான்ஸ் கேப்டன் ஜினெடின் ஜிடேன். இதையடுத்து ஜிடேனுக்கு ரெட் கார்டை காண்பித்த நடுவர் அவரை வெளியேற்றினார். இந்த மோதல் உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. தொலைக்காட்சி மூலமாக போட்டியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கையிலும் இந்த உலகக் கோப்பை போட்டி சாதனை படைத்தது.
2006 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 64
மொத்த கோல் - 147
ஓன் கோல் - 4
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 3,352,605
கோலின்றி முடிந்த ஆட்டம் - 7
டிராவில் முடிந்த ஆட்டம் - 15
டாப் ஸ்கோர்
மிரோஸ்லாவ் க்ளோஸ் (ஜெர்மனி) - 5 கோல்
ரெட் கார்டு - 28
யெல்லோ கார்டு - 345
ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை-2010
19-வது உலகக் கோப்பை 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இதுதான். போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இத்தாலி, 2006 உலகக் கோப்பையில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய பிரான்ஸ் ஆகிய அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.
போட்டியை நடத்திய நாடு முதல் சுற்றோடு வெளியேறியது உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாகும். நியூஸிலாந்து அணி முதல் சுற்றோடு வெளியேறினாலும், குரூப் சுற்றில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் டிரா செய்தது. இதன்மூலம் அந்த உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமையைப் பெற்றது.
முதல் அரையிறுதியில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
8-வது நாடு ஸ்பெயின்
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஆட்டநேர முடிவில்ஸ்பெயினும், நெதர்லாந்தும் கோலடிக்கவில்லை. இதன்பிறகு கூடுதல் நேரத்தின் 116-வது நிமிடத்தில் ஆன்ட்ரேஸ் இனியெஸ்டா கோலடிக்க, ஸ்பெயின் உலக சாம்பியன் ஆனது. இதன்மூலம் உலக கோப்பையை வென்ற 8-வது நாடு என்ற பெருமை ஸ்பெயினுக்கு கிடைத்தது.
நெதர்லாந்து அணி 3-வது முறையாக இறுதிச்சுற்றில் தோல்வி கண்டது. இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி 8 கோல்கள் மட்டுமே அடித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் சாம்பியன் ஆன ஓர் அணி அடித்த குறைந்தபட்சம் கோல் இதுதான்.
அதேநேரத்தில் கேப்டன் இகர் காசில்லஸின் அற்புதமான கோல் கீப்பிங் காரணமாக ஸ்பெயின் அணி எதிரணிகளிடம் 2 கோல் மட்டுமே வாங்கியது. இதுவரை நடைபெற்ற 19 உலகக் கோப்பைகளில் 10 கோப்பைகள் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த அணிகள் வசமுள்ளன. 2010 உலகக் கோப்பையில் யாருக்கு வெற்றி என்பதை துல்லியமாகக் கணித்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆக்டோபஸ் பால் மிகவும் பிரபலமடைந்தது.
2010 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
மொத்த ஆட்டம் - 64
மொத்த கோல் - 145
ஓன் கோல் - 2
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 3,178,856
கோலின்றி முடிந்த ஆட்டம் - 7
டிராவில் முடிந்த ஆட்டம் - 16
டாப் ஸ்கோர்
தாமஸ் முல்லர் (ஜெர்மனி) - 5 கோல்
வெஸ்லே ஸ்நீஜ்டர் (நெதர்லாந்து) - 5 கோல்
டேவிட் வில்லா (ஸ்பெயின்) - 5 கோல்
டீகோ போர்லான் (உருகுவே) - 5 கோல்
ரெட் கார்டு - 17
யெல்லோ கார்டு - 261
2014 உலக ‘உதை’ ராஜாக்கள்
உலகக் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கான திருவிழா அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. பிரேசிலில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நிச்சயமாக கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் அள்ளித்தரும் என்பது நிச்சயம். இம்முறை ஒவ்வொரு அணியிலும் களமிறங்கவுள்ள நட்சத்திரங்கள் யார் யார்? ஒரு பார்வை
நெய்மார் (பிரேசில்)
பிரேசிலின் விராட் கோலி நிச்சயமாக நெய்மார்தான். கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் அதிர்ச்சிகரமாக காலிறுதியிலேயே போட்டியை விட்டு வெளியேறிய பிரேசில் அணி, இம்முறை தன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வுவதை விரும்பவே விரும்பாது. கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கவுள்ள இந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார். தன் 19-ஆவது வயதிலேயே தென் அமெரிக்காவின் சிறந்த கால்பந்தாட்ட வீரர். 2011 மற்றும் 2012 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இவ்விருதை வென்றவர். தன்னுடைய துடிப்பான ஆட்டத் திறனாலும் வேகத்தினாலும் அனைவரையும் கவர்ந்த இவர், உலகின் தலை சிறந்த வீரராக கருதப்படும் பீலேவால் மிகச்சிறந்த வீரர் எனப் பாராட்டப் பெற்றவர்.
லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா)
லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா)
உலக அளவில் எல்லா சாதனைகளையும் படைத்தாகி விட்டது. கோல் மழை பொழிந்தாகி விட்டது. ஆனாலும் ஒரு குறை, இன்னும் தன்னால் தன்னுடைய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தர முடியவில்லை என்று நம்மூர் சச்சின் போல ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறவர். இதுவரை நடந்த உலகக் கோப்பைகளில் சுமாராகவே விளையாடினாலும் கடைசி மூன்றாண்டுகளாக முழு வீச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் மெஸ்ஸி நிச்சயம் சாதிப்பார். இம்முறை தன்னுடைய அணிக்கு வெற்றிக்கனியைப் பெற்றுத் தருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்)
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்)
வலுவான அணியாக இருந்தாலும் தொடர்ந்து அரையிறுதி, காலிறுதிவரை முன்னேறி அந்த ஆண்டு சாம்பியனாகப் போகிற அணியிடம் மண்ணைக் கவ்வி தோற்பதையே வழக்கமாகக் கொண்ட அணி போர்ச்சுக்கல். இம்முறை அந்த அணியை இறுதிவரை அழைத்துச் சென்று வெற்றிக் கோப்பையை பெற்றுத்தரப் போகிற வீரராகக் கருதப்படுபவர் அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ! 2006 உலகக் கோப்பையில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தினால் அணியை கடைசி அரையிறுதி வரை கொண்டுசென்றவர். 2010 உலகக் கோப்பையில் போர்ச்சுக்கல் விளையாடிய மூன்று குரூப் போட்டிகளிலும் ரொனால்டோ மேன்ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றார். கடைசியாக 2012-இல் நடைபெற்ற EURO 2012-இல் தன்னுடைய அணியை அரையிறுதிவரை இட்டுச் சென்றவர் ரோனால்டோ.
லூயி சுவாரேஸ் (உருகுவே)
லூயி சுவாரேஸ் (உருகுவே)
2010 உலகக் கோப்பையில் நான்காமிடம் பிடித்து அனைவரையும் அசத்திய இளம் உருகுவே அணிக்கு கேப்டனாக இம்முறை களமிறங்குகிறார் லூயி சுவாரேஸ். இங்கிலீஷ் பிரீமியர் லீகில் லிவர்பூல் அணிக்காக விளையாடி, சமீபத்தில் முப்பது கோல்களை அடித்து அசத்தினார். ஆனால் இம்முறை உருகுவே இடம்பெற்றுள்ள குரூப்பில் இங்கிலாந்து, இத்தாலி, கோஸ்டா ரிகா என மூன்று வலுவான அணிகள் உள்ளதால் மிகப்பெரிய சவாலை சந்திக்கப் போகிறது உருகுவே! அச்சவால்களில் வெற்றி பெற லூயி சுவாரேஸ் உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.
மிரோஸ்லோவ் க்ளோஸ் (ஜெர்மனி)
மிரோஸ்லோவ் க்ளோஸ் (ஜெர்மனி)
ஜெர்மனியின் அனுபவமிக்க வீரர் க்ளோஸ். இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 14 கோல்களை அடித்து சாதனை படைத்தவர். இன்னும் ஒரு கோல் அடித்தால் இதுவரை 15 கோல் அடித்து சாதனை படைத்திருக்கிற ரொனால்டோவின் சாதனையை முறியடித்து விடலாம். 2002, 2006, 2010 என மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடிய இவர், இம்முறை தன்னுடைய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துவிடும் முனைப்புடன் களமிறங்கவுள்ளார்.
மரியோ பலோடோலி (இத்தாலி)
மரியோ பலோடோலி (இத்தாலி)
2010 உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜிலேயே மண்ணைக் கவ்விய அணி இத்தாலி. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இருந்தும் கடந்த ஆண்டுகளில் சோபிக்காமல் இருந்த அணிக்கு விட்டமினாக கிடைத்திருக்கிறார் மரியோ பலோடோலி. ஆப்ரிக்க ஐரோப்பியரான இவர், ஏசி மிலன் அணிக்காக விளையாடி அந்த அணிக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். அதோடு, ஆக்ரோஷமாகவும் விளையாடி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடியவர். இம்முறை இத்தாலி அணியை காலிறுதி வரைக்குமாவது இவர் இட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.
ஆன்ட்ரே இனியஸ்டா (ஸ்பெயின்)
ஆன்ட்ரே இனியஸ்டா (ஸ்பெயின்)
ஸ்பெயின் அணி 2010-இல் உலகக் கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் இனியஸ்டா. தனது அணிக்காக சுய நலமில்லாமல் ஆடி, ஸ்பெயினுக்கு இவர் நிறைய வெற்றிகள் வாங்கித் தந்துள்ளார். இந்தத் தடவையும் இறுதி வரை செல்வதற்கு இவரது ஆட்டமும் கைகொடுக்கும் என்று ஸ்பெயின் அணியினர் நம்புகின்றனர்.
ஈடன் ஹசார்ட் (பெல்ஜியம்)
ஈடன் ஹசார்ட் (பெல்ஜியம்)
இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிற வலுவான அணிகளுக்கு மத்தியில் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, கோப்பையை தட்டிக்கொண்டு போக வாய்ப்பிருக்கிற டார்க் ஹார்ஸ் பெல்ஜியம். அந்த அணியின் ஈடன் ஹசார்ட் இங்கிலீஷ் பிரீமியர் லீகில் பட்டையைக் கிளப்பிவிட்டு திரும்பியிருக்கிறார். இவர்தான் பெல்ஜியத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றப் போகிறவராக இருக்கப் போகிறார்.
வெய்ன் ரூனி (இங்கிலாந்து)
வெய்ன் ரூனி (இங்கிலாந்து)
இந்தியாவில் கிரிக்கெட் எப்படியோ, அதே போல்தான் இங்கிலாந்தில் கால்பந்து. 1966 வெற்றிக்குப் பிறகு ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் படு மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. நட்சத்திர ஆட்டக்காரர் ரூனி கிளப் போட்டிகளில் ஃபார்மில் இல்லையென்றாலும் நாட்டிற்காக ஆடும்போது தேச பக்தியில் நன்றாகவே விளையாடியுள்ளார். இங்கிலாந்து ஆடுகிற குரூப் கொஞ்சம் போட்டி அதிகமுள்ள குரூப்தான் என்றாலும் ரூனி பிரகாசித்தால் இங்கிலாந்து காலிறுதி வரை செல்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது.
மரடோனா ஆவாரா மெஸ்ஸி?- உலகக் கோப்பை கால்பந்து அலசல்
2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரேசில் அணிதான் சாம்பியன் ஆகும் என்று கருதப்படும் சூழ்நிலையில் நாம் அர்ஜெண்டீனா அணியை மறந்து விடலாகாது.
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டீனா அணியில் இந்த முறையும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.
எஃப் பிரிவில் அர்ஜெண்டீனாவுடன் ஈரான், நைஜீரியா, மற்றும் புதிதாக தகுதி பெற்றுள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா ஆகிய அணிகள் உள்ளன. இதில் போஸ்னியா-ஹெர்செகோவினா அணி பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் திறன் கொண்டதாகவே உலகக் கோப்பை கால்பந்து அவதானிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் அணி 1978, 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது. ஆனால் குரூப் மட்டத்தைத் தாண்டிச் சென்றதில்லை.
நைஜீரியா அணி 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் 2002 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முதல் நிலையைக் கடக்க முடியாமல் வெளியேறியது.
ஆகவே இந்தப் பிரிவில் அர்ஜெண்டீனா அணி மீதே அனைவரது கவனமும் உள்ளது. நட்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்ஸி, ஏஞ்செல் டி மரியா, செர்ஜியோ அகிரோ, மற்றும் கொன்சாலோ ஹிகுவைன் ஆகியோர் உள்ளனர்.
2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டீனா மோசமாக ஆடிய பிறகே பயிற்சியாளர் பேடிஸ்டாவிடமிருந்து பொறுப்புகளைப் பெற்ற அலெயாண்ட்ரோ சபெல்லா அணிக்கு ஒரு ஸ்திரத் தன்மையை கொடுத்திருக்கிறார்.
இவர் செய்த பெரிய விஷயம் என்னவெனில் வந்தவுடன் மெஸ்ஸியை கேப்டனாக்கினார். சபெல்லா பொறுப்பேற்கும் முன்னர் 16 போட்டிகளில் ஒன்றுமே செய்யாத மெஸ்ஸி அதன் பிறகு 21 ஆட்டங்களில் 20 கோல்களை அடித்து பார்முக்கு வந்துள்ளார்.
பார்சிலோனா அணிக்காக சாம்பியன்ஸ் லீகில் ஆடும் மெஸ்ஸி அங்கு ஆடும் ஆட்டத்திறனை தன் சொந்த அணிக்கு ஆடும்போது வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. இந்த முறை 1986ஆம் ஆண்டு மரடோனா செய்ததை மெஸ்ஸி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
களத்தில் 5 வீரர்கள் முன்களத்திலும் 3 வீரர்கள் நடுக்களத்திலும் 2 வீரர்கள் பேக்கி நிலையிலும் ஆடவைக்கப்படும் பாரம்பரிய கால்பந்து உத்தி முறையையே சபெல்லா கடைபிடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்தும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளராக டீகோ மரடோனா இருந்தார். ஆனாலும் அவரால் அணியை ஒருமுகப்படுத்தி கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் காலிறுதியில் ஜெர்மனியிடம் 0- 4 என்று படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. ஆகவே இந்த முறை எப்படியும் அரையிறுதி வரை முன்னேறி ஆட்டத்தை மேலும் மேம்படுத்தினால் 3வது உலகக் கோப்பையை அர்ஜெண்டீனா வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா அணியை சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது. இது இந்த அணிக்கு முதல் உலகக் கோப்பை. ஆனாலும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இவர்கள் கலக்கிய கலக்கு பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 30 கோல்களை அடித்துள்ள இந்த அணி வெறும் 6 கோல்களையே வாங்கியுள்ளது. உண்மையில் கிரீஸ் அணிதான் தகுதி பெற்றிருக்கவேண்டும், இந்த அணியும் கிரீஸ் அணியும் ஒரே புள்ளிகள்தான் ஆனால் கோல் வித்தியாச அடிப்படையில் போஸ்னியா-ஹெர்செகோவினா தகுதி பெற்றது. இந்த அணியின் மிக முக்கிய வீரர் சீகோ (Zeko) இவர் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர். போஸ்னியா-ஹெர்செகோவினா அணிக்கு சீகோ 35 கோல்களை அடித்துள்ளார். அதில் 10 கோல்கள் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகளில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணியின் கோல் கீப்பர் அஸ்மிர் பெகோவிச் மிகப்பெரிய கோல் கீப்பர் என்று கருதப்படுபவர்.
இந்தப் பிரிவிலிருந்தும் 2014 உலகக் கோப்பை கால்பந்து விறுவிறுப்பான ஆட்டங்களை எதிர்பார்க்கலாம்
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டீனா அணியில் இந்த முறையும் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர்.
எஃப் பிரிவில் அர்ஜெண்டீனாவுடன் ஈரான், நைஜீரியா, மற்றும் புதிதாக தகுதி பெற்றுள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா ஆகிய அணிகள் உள்ளன. இதில் போஸ்னியா-ஹெர்செகோவினா அணி பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் திறன் கொண்டதாகவே உலகக் கோப்பை கால்பந்து அவதானிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரான் அணி 1978, 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றது. ஆனால் குரூப் மட்டத்தைத் தாண்டிச் சென்றதில்லை.
நைஜீரியா அணி 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் 2002 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முதல் நிலையைக் கடக்க முடியாமல் வெளியேறியது.
ஆகவே இந்தப் பிரிவில் அர்ஜெண்டீனா அணி மீதே அனைவரது கவனமும் உள்ளது. நட்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்ஸி, ஏஞ்செல் டி மரியா, செர்ஜியோ அகிரோ, மற்றும் கொன்சாலோ ஹிகுவைன் ஆகியோர் உள்ளனர்.
2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டீனா மோசமாக ஆடிய பிறகே பயிற்சியாளர் பேடிஸ்டாவிடமிருந்து பொறுப்புகளைப் பெற்ற அலெயாண்ட்ரோ சபெல்லா அணிக்கு ஒரு ஸ்திரத் தன்மையை கொடுத்திருக்கிறார்.
இவர் செய்த பெரிய விஷயம் என்னவெனில் வந்தவுடன் மெஸ்ஸியை கேப்டனாக்கினார். சபெல்லா பொறுப்பேற்கும் முன்னர் 16 போட்டிகளில் ஒன்றுமே செய்யாத மெஸ்ஸி அதன் பிறகு 21 ஆட்டங்களில் 20 கோல்களை அடித்து பார்முக்கு வந்துள்ளார்.
பார்சிலோனா அணிக்காக சாம்பியன்ஸ் லீகில் ஆடும் மெஸ்ஸி அங்கு ஆடும் ஆட்டத்திறனை தன் சொந்த அணிக்கு ஆடும்போது வெளிப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. இந்த முறை 1986ஆம் ஆண்டு மரடோனா செய்ததை மெஸ்ஸி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
களத்தில் 5 வீரர்கள் முன்களத்திலும் 3 வீரர்கள் நடுக்களத்திலும் 2 வீரர்கள் பேக்கி நிலையிலும் ஆடவைக்கப்படும் பாரம்பரிய கால்பந்து உத்தி முறையையே சபெல்லா கடைபிடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பாதுகாப்பு வளையத்தை பலவீனப்படுத்தும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளராக டீகோ மரடோனா இருந்தார். ஆனாலும் அவரால் அணியை ஒருமுகப்படுத்தி கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் காலிறுதியில் ஜெர்மனியிடம் 0- 4 என்று படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. ஆகவே இந்த முறை எப்படியும் அரையிறுதி வரை முன்னேறி ஆட்டத்தை மேலும் மேம்படுத்தினால் 3வது உலகக் கோப்பையை அர்ஜெண்டீனா வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள போஸ்னியா-ஹெர்செகோவினா அணியை சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது. இது இந்த அணிக்கு முதல் உலகக் கோப்பை. ஆனாலும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இவர்கள் கலக்கிய கலக்கு பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 30 கோல்களை அடித்துள்ள இந்த அணி வெறும் 6 கோல்களையே வாங்கியுள்ளது. உண்மையில் கிரீஸ் அணிதான் தகுதி பெற்றிருக்கவேண்டும், இந்த அணியும் கிரீஸ் அணியும் ஒரே புள்ளிகள்தான் ஆனால் கோல் வித்தியாச அடிப்படையில் போஸ்னியா-ஹெர்செகோவினா தகுதி பெற்றது. இந்த அணியின் மிக முக்கிய வீரர் சீகோ (Zeko) இவர் மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர். போஸ்னியா-ஹெர்செகோவினா அணிக்கு சீகோ 35 கோல்களை அடித்துள்ளார். அதில் 10 கோல்கள் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப்போட்டிகளில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணியின் கோல் கீப்பர் அஸ்மிர் பெகோவிச் மிகப்பெரிய கோல் கீப்பர் என்று கருதப்படுபவர்.
இந்தப் பிரிவிலிருந்தும் 2014 உலகக் கோப்பை கால்பந்து விறுவிறுப்பான ஆட்டங்களை எதிர்பார்க்கலாம்
உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் ஒரு பார்வை
உலகக் கோப்பைக் கால்பந்து ஜி-பிரிவு அணிகளில் சுவாரசியம் என்னவெனில் இந்தப் பிரிவில் உள்ள 4 அணிகளும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய அணிகள்.
அதேபோல் பி-பிரிவு அணிகளும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய அணிகள்.
ஜி-பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, யு.எஸ். ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பார்க்கும்போது இந்தப் பிரிவிலிருந்து ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் சுலபமாக இறுதி-16 சுற்றுக்கு முன்னேறும் என்று கூறிவிடலாம் போல் தெரிகிறது.
ஆனால் கானா, யு.எஸ். அணிகள் அதனை அவ்வளவு சுலபமாக்கிவிடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
7 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளைச் சந்தித்துள்ள ஜெர்மனி அணி இந்த முறை பிரேசிலில் லத்தீன் அமெரிக்க அணிகளின் ஆதிக்கத்தின் முன் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டாலும், அவ்வளவு சுலபமாக ஜெர்மனியை வெளியேற்றிவிட முடியாது.
காரணம் பயிற்சியாளர் ஜோகிம் லூ ஒரு அருமையான உத்தி வகுப்பாளர். 4-2-3-1 என்ற முறையில் மைதானத்தில் வீரர்களை விளையாட வைப்பவர். அதாவது ஒரு பேக்கி, 3 பேர் பாதுகாப்பு அரண், 2 பேர் இடது மற்றும் வலது விங்குகளைக் கவனித்துக் கொள்ள முன் களத்தில் தாக்குதல் ஆட்டம் ஆட 4 வீரர்கள். இதுதான் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் லூவின் உத்திவகுப்பு.
பாஸ்டியன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் மற்றும் சேமி கேதிரா, நடுக்களத்தில் சுறுசுறுப்பாக இயங்க, மெசுட் ஓசில், தாமஸ் முல்லர் ஆகியோர் முன்களத்தில் ஆக்ரோஷம் காட்டுவார்கள். இவர்கள் தவிர ஜூலியன் டிராக்ஸ்லர், மத்தியாஸ் ஜிண்டர், மரியோ கோட்ஸே, கிறிஸ்டோப் கிரேமர், ஆந்த்ரே ஷுயெர்லி, லுகாஸ் பொடோல்ஸ்கி ஆகிய வீரர்களும் உள்ளனர்.
இவர்கள் தவிர மிக முக்கியமான மிரோஸ்லாவ் க்ளோஸ் என்ற நட்சத்திர ஸ்ட்ரைக்கர் உள்ளார். இவர் ரொனால்டோவின் உலகக் கோப்பை கோல் சாதனையான 15 கோல்கள் சாதனையை எட்ட க்ளோஸிற்கு இன்னும் ஒரு கோல்தான் உள்ளது. பலமாகவே தெரிந்தாலும் தடுப்பு வீரர்கள் மட்டத்தில் ஜெர்மனி பலவீனமான அணியாகவே திகழ்கிறது. சமீபத்திய தகுதிச் சுற்றுப்போட்டிகளில் ஸ்வீடனுக்கு எதிராக 2 போட்டிகளில் 7 கோல்களை வாங்கியுள்ளனர். ஆனால் மொத்தமாக 10 போட்டிகளில் 9-இல் வென்றுள்ளனர்.
போர்ச்சுக்கல்:
போர்ச்சுக்கல் என்றாலே கிறிஸ்டியானோ ரொனால்டோ நினைவுதான் அனைவருக்கும் வரும். அவருடன் பெபே, ஜோவா மௌட்டின்ஹோ ஆகியோரும் உள்ளனர்.
உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளது போர்ச்சுக்கல். போர்ச்சுக்கல் அணியில் ஸ்ட்ரைக்கர், உத்தி வகுப்பது, உத்வேகம் அளிப்பது அனைத்துமே களத்தில் செய்ய வேண்டிய பொறுப்பு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இருக்கிறது. இது அவரது ஆட்டத்தைப் பாதித்தாலும் பாதிக்கலாம்.
யூரோ 2012 அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணி போர்ச்சுக்கல்.
கானா:
2010 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன் முறையாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றதால் கானா அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது உறுதி. 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்திய கானா அதற்கு அடுத்த உலகக் கோப்பையில் ஒரு அடி முன்னேறி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்த முறை உலகின் 2 மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக குரூப் மட்டத்தைத் தாண்டுவதே அரிதுதான் என்று கூறலாம். அனுபவமிக்க அணியான கானா, நல்ல பார்மில் உள்ளது. அதிக வெற்றிகளை ஆப்பிரிக்க போட்டிகளில் பெற்றுள்ளது. மேலும் மிகேல் எஸியன் அணிக்குத் திரும்பியுள்ளதும் அந்த அணிக்குப் பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.எஸ்:
தொடர்ந்து 7வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது யு.எஸ். 1930ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் முடிவில் 3ஆவது இடம் பிடித்த யு.எஸ். அணி 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தகுதி பெற்று வருகிறது. 2002ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்குமா யு.எஸ். என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அதேபோல் பி-பிரிவு அணிகளும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய அணிகள்.
ஜி-பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, யு.எஸ். ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பார்க்கும்போது இந்தப் பிரிவிலிருந்து ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் சுலபமாக இறுதி-16 சுற்றுக்கு முன்னேறும் என்று கூறிவிடலாம் போல் தெரிகிறது.
ஆனால் கானா, யு.எஸ். அணிகள் அதனை அவ்வளவு சுலபமாக்கிவிடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
7 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளைச் சந்தித்துள்ள ஜெர்மனி அணி இந்த முறை பிரேசிலில் லத்தீன் அமெரிக்க அணிகளின் ஆதிக்கத்தின் முன் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டாலும், அவ்வளவு சுலபமாக ஜெர்மனியை வெளியேற்றிவிட முடியாது.
காரணம் பயிற்சியாளர் ஜோகிம் லூ ஒரு அருமையான உத்தி வகுப்பாளர். 4-2-3-1 என்ற முறையில் மைதானத்தில் வீரர்களை விளையாட வைப்பவர். அதாவது ஒரு பேக்கி, 3 பேர் பாதுகாப்பு அரண், 2 பேர் இடது மற்றும் வலது விங்குகளைக் கவனித்துக் கொள்ள முன் களத்தில் தாக்குதல் ஆட்டம் ஆட 4 வீரர்கள். இதுதான் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோகிம் லூவின் உத்திவகுப்பு.
பாஸ்டியன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் மற்றும் சேமி கேதிரா, நடுக்களத்தில் சுறுசுறுப்பாக இயங்க, மெசுட் ஓசில், தாமஸ் முல்லர் ஆகியோர் முன்களத்தில் ஆக்ரோஷம் காட்டுவார்கள். இவர்கள் தவிர ஜூலியன் டிராக்ஸ்லர், மத்தியாஸ் ஜிண்டர், மரியோ கோட்ஸே, கிறிஸ்டோப் கிரேமர், ஆந்த்ரே ஷுயெர்லி, லுகாஸ் பொடோல்ஸ்கி ஆகிய வீரர்களும் உள்ளனர்.
இவர்கள் தவிர மிக முக்கியமான மிரோஸ்லாவ் க்ளோஸ் என்ற நட்சத்திர ஸ்ட்ரைக்கர் உள்ளார். இவர் ரொனால்டோவின் உலகக் கோப்பை கோல் சாதனையான 15 கோல்கள் சாதனையை எட்ட க்ளோஸிற்கு இன்னும் ஒரு கோல்தான் உள்ளது. பலமாகவே தெரிந்தாலும் தடுப்பு வீரர்கள் மட்டத்தில் ஜெர்மனி பலவீனமான அணியாகவே திகழ்கிறது. சமீபத்திய தகுதிச் சுற்றுப்போட்டிகளில் ஸ்வீடனுக்கு எதிராக 2 போட்டிகளில் 7 கோல்களை வாங்கியுள்ளனர். ஆனால் மொத்தமாக 10 போட்டிகளில் 9-இல் வென்றுள்ளனர்.
போர்ச்சுக்கல்:
போர்ச்சுக்கல் என்றாலே கிறிஸ்டியானோ ரொனால்டோ நினைவுதான் அனைவருக்கும் வரும். அவருடன் பெபே, ஜோவா மௌட்டின்ஹோ ஆகியோரும் உள்ளனர்.
உலகத் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளது போர்ச்சுக்கல். போர்ச்சுக்கல் அணியில் ஸ்ட்ரைக்கர், உத்தி வகுப்பது, உத்வேகம் அளிப்பது அனைத்துமே களத்தில் செய்ய வேண்டிய பொறுப்பு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இருக்கிறது. இது அவரது ஆட்டத்தைப் பாதித்தாலும் பாதிக்கலாம்.
யூரோ 2012 அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணி போர்ச்சுக்கல்.
கானா:
2010 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன் முறையாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றதால் கானா அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது உறுதி. 2006ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்திய கானா அதற்கு அடுத்த உலகக் கோப்பையில் ஒரு அடி முன்னேறி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்த முறை உலகின் 2 மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக குரூப் மட்டத்தைத் தாண்டுவதே அரிதுதான் என்று கூறலாம். அனுபவமிக்க அணியான கானா, நல்ல பார்மில் உள்ளது. அதிக வெற்றிகளை ஆப்பிரிக்க போட்டிகளில் பெற்றுள்ளது. மேலும் மிகேல் எஸியன் அணிக்குத் திரும்பியுள்ளதும் அந்த அணிக்குப் பலத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.எஸ்:
தொடர்ந்து 7வது முறையாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது யு.எஸ். 1930ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் முடிவில் 3ஆவது இடம் பிடித்த யு.எஸ். அணி 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தகுதி பெற்று வருகிறது. 2002ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்குமா யு.எஸ். என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இன்று தொடங்குகிறது. உலகின் பலம் வாய்ந்த 32 அணிகள் களத்தில் மோதிக் கொள்ளவிருக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காண உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
உலகக் கோப்பையின் தொடக்க விழாவில் அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் கலந்து கொள்கிறார். 600-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு தொடக்க விழாவை பிரம்மாண்டப்படுத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.
12 நகரங்கள்
64 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் பிரேசிலின் வீதிகளெல்லாம் விழாக்கோலம் பூண்டிருக்கின்றன. ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, சாவோ பாவ்லோ, ஃபோர்ட்டலீசா, பீலோ ஹரிஸான்டே, சல்வடார், கியூயாபா, போர்ட்டோ அலெக்ரே, ரெசிபே, மனாஸ், நேட்டல், கியூரிட்டிபா ஆகிய 12 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். குரூப் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.
பிரேசிலுக்கு வாய்ப்பு
தென் அமெரிக்க கண்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த அணிகளே வாகை சூடியுள்ளன. அதனால் வழக்கம் போல் இந்த முறையும் தங்கள் கண்டத்தைச் சேர்ந்த அணியே உலக சாம்பியனாகும் என்ற எதிர்பார்ப்பில் தென் அமெரிக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரையில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தாய் மண்ணில் விளையாடுவதும், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் பிரேசிலுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெய்மர் உள்ளிட்ட பலம் வாய்ந்த முன்கள வீரர்களைக் கொண்டுள்ள பிரேசில் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
தொடர்ந்து 20-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒரே அணியான பிரேசில் இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக அர்ஜென்டீனா கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசிலில் வீசும் காற்றில் கடுமையான ஈரப்பதம் இருக்கும் என்பதால் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். எனவே அவர்களுக்கு பிரேசிலில் கடும் சவால் காத்திருக்கிறது. உருகுவே, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய அணிகளும் எதிரணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியளிக்கக்கூடிய பலம் வாய்ந்த அணிகளாகும்.
வரலாற்றை மாற்றுமா ஸ்பெயின்?
கடந்த உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வீரர்கள் இந்த முறையும் இடம்பெற்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். ஆனால் தென் அமெரிக்க மண்ணில்
இதுவரை ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியதில்லை என்பதால் ஸ்பெயின் கோப்பையை தக்கவைத்துக் கொள்வது கடினம். ஒருவேளை ஸ்பெயின் மீண்டும் சாம்பியன் ஆனால், இனி வரும் காலங்களில் ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் பரந்துவிரியும் என கால்பந்து ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே ஸ்பெயின் அணி வரலாற்றை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கோல் லைன் தொழில்நுட்பம்
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறைாக கோல் லைன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக இருகோல் கம்பங்களிலும் தலா 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கேமராக்கள் ஒரு விநாடியில் 500 படங்களை எடுக்கக்கூடியவை.
கோல் கம்பத்தை நோக்கியடிக்கப்படும் பந்து, கோல் எல்லையைக் கடந்ததும் கோல் லைன் தொழில்நுட்பத்தின் மூலம் நடுவருக்கு தகவல் கிடைத்துவிடும்.
இதுவரை சாம்பியன்கள்:
1930: உருகுவே
1934: இத்தாலி
1938: இத்தாலி
1950: உருகுவே
1954: மேற்கு ஜெர்மனி
1958: பிரேசில்
1962: பிரேசில்
1966: இங்கிலாந்து
1970: பிரேசில்
1974: மேற்கு ஜெர்மனி
1978: அர்ஜென்டீனா
1982: இத்தாலி
1986: அர்ஜென்டீனா
1990: மேற்கு ஜெர்மனி
1994: பிரேசில்
1998: பிரான்ஸ்
2002: பிரேசில்
2006: இத்தாலி
2010: ஸ்பெயின்
நாளை பிரேசிலில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் துவங்குகின்றன. முதல் போட்டியில் பிரேசில், குரேசியா அணிகள் மோதுகின்றன.
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் அணிகள் விவரம் வருமாறு:
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவுகள் மற்றும் அணிகள் விவரம் வருமாறு:
குரூப் ஏ
பிரேசில், குரேஷியா, மெக்ஸிகோ, கேமரூன்
குரூப் பி
ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா
குரூப் சி
கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான்
குரூப் டி
உருகுவே, கோஸ்டா ரிகா, இங்கிலாந்து, இத்தாலி
குரூப் இ
சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ்
உருகுவே, கோஸ்டா ரிகா, இங்கிலாந்து, இத்தாலி
குரூப் இ
சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ்
குரூப் எப்
அர்ஜென்டீனா, போஸ்னினா, ஈரான், நைஜீரியா
அர்ஜென்டீனா, போஸ்னினா, ஈரான், நைஜீரியா
குரூப் ஜி
ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா
குரூப் எச்
பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா
ஆட்டம் நடைபெறும் இந்திய நேர விவரம்:
ஜூன் 13: பிரேசில்-குரேஷியா (அதிகாலை 1.30)
ஜூன் 13: மெக்ஸிகோ-கேமரூன் (இரவு 9.30)
ஜூன் 14: ஸ்பெயின்-நெதர்லாந்து (அதிகாலை 12.30)
ஜூன் 14: சிலி-ஆஸ்திரேலியா (அதிகாலை 3.30)
ஜூன் 14: கொலம்பியா-கிரீஸ் (இரவு 9:30)
ஜூன் 15: உருகுவே-கோஸ்டா ரிகா (அதிகாலை 12.30)
ஜூன் 15: இங்கிலாந்து-இத்தாலி (அதிகாலை 3.30)
ஜூன் 15: ஐவரி கோஸ்ட்-ஜப்பான் (காலை 6.30)
ஜூன் 15: ஸ்விட்சர்லாந்து-ஈகுவடார் (இரவு 9.30)
ஜூன் 16: பிரான்ஸ்-ஹோண்டுராஸ் (அதிகாலை 12.30)
ஜூன் 16: அர்ஜென்டீனா-போஸ்னினா (அதிகாலை 3:30)
ஜூன் 16: ஜெர்மனி-போர்ச்சுகல் (இரவு 9.30)
ஜூன் 17: ஈரான்-நைஜீரியா (அதிகாலை 12:30)
ஜூன் 17: கானா-அமெரிக்கா (அதிகாலை 3.30)
ஜூன் 17: பெல்ஜியம்-அல்ஜீரியா (இரவு 9.30)
ஜூன் 18: பிரேசில்-மெக்ஸிகோ (அதிகாலை 12:30)
ஜூன் 18: ரஷ்யா-தென் கொரியா (அதிகாலை 3.30)
ஜூன் 18: ஆஸ்திரேலியா-நெதர்லாந்து (இரவு 9.30)
ஜூன் 19: ஸ்பெயின்-சிலி (அதிகாலை 12.30)
ஜூன் 19: கேமரூன்-குரேஷியா (அதிகாலை 3:30)
ஜூன் 19: கொலம்பியா-ஐவரி கோஸ்ட் (இரவு 9.30)
ஜூன் 20: உருகுவே-இங்கிலாந்து (அதிகாலை 12.30)
ஜூன் 20: ஜப்பான்-கிரீஸ் (அதிகாலை 3.30)
ஜூன் 20: இத்தாலி-கோஸ்டா ரிகா (இரவு 9.30)
ஜூன் 21: ஸ்விட்சர்லாந்து-பிரான்ஸ் (அதிகாலை 12.30)
ஜூன் 21: ஹோண்டுராஸ்-ஈகுவடார் (அதிகாலை 3.30)
ஜூன் 21: அர்ஜென்டீனா-ஈரான் (இரவு 9.30)
ஜூன் 22: ஜெர்மனி-கானா (அதிகாலை 12.30)
ஜூன் 22: நைஜீரியா-போஸ்னினா (அதிகாலை 3.30)
ஜூன் 22: பெல்ஜியம்-ரஷ்யா (இரவு 9.30)
ஜூன் 23: தென் கொரியா-அல்ஜீரியா (அதிகாலை 12.30)
ஜூன் 23: அமெரிக்கா-போர்ச்சுகல் (அதிகாலை 3.30)
ஜூன் 23: ஆஸ்திரேலியா-ஸ்பெயின் (இரவு 9.30)
ஜூன் 23: நெதர்லாந்து-சிலி (இரவு 9.30)
ஜூன் 23: கேமரூன்-பிரேசில் (அதிகாலை 1.30)
ஜூன் 24: குரேஷியா-மெக்ஸிகோ (அதிகாலை 1.30)
ஜூன் 24: இத்தாலி-உருகுவே (இரவு 9.30)
ஜூன் 24: கோஸ்டா ரிகா-இங்கிலாந்து (இரவு 9.30)
ஜூன் 25: ஜப்பான்-கொலம்பியா (அதிகாலை 1.30)
ஜூன் 25: கிரீஸ்-ஐவரி கோஸ்ட் (அதிகாலை 1.30)
ஜூன் 25: நைஜீரியா-அல்ஜீரியா (இரவு 9.30)
ஜூன் 25: போஸ்னினா-ஈரான் (இரவு 9.30)
ஜூன் 26: ஈகுவடார்-பிரான்ஸ் (அதிகாலை 1.30)
ஜூன் 26: ஹோண்டுராஸ்-ஸ்விட்சர்லாந்து (அதிகாலை 1.30)
ஜூன் 26: அமெரிக்கா-ஜெர்மனி (இரவு 9.30)
ஜூன் 26: போர்ச்சுகல்-கானா (இரவு 9.30)
ஜூன் 27: தென் கொரியா-பெல்ஜியம் (அதிகாலை 1.30)
ஜூன் 27: அல்ஜீரியா-ரஷியா (அதிகாலை 1.30)
காலிறுதிக்கு முந்தைய சுற்று:
ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை.
காலிறுதி ஆட்டங்கள்
ஜூலை 4 முதல் 5 வரை
முதல் அரையிறுதி: ஜூலை 9
2-வது அரையிறுதி: ஜூலை 10
3-வது இடத்துக்கான ஆட்டம்: ஜூலை 13
இறுதியாட்டம்: ஜூலை 14
ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா
குரூப் எச்
பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா
ஆட்டம் நடைபெறும் இந்திய நேர விவரம்:
ஜூன் 13: பிரேசில்-குரேஷியா (அதிகாலை 1.30)
ஜூன் 13: மெக்ஸிகோ-கேமரூன் (இரவு 9.30)
ஜூன் 14: ஸ்பெயின்-நெதர்லாந்து (அதிகாலை 12.30)
ஜூன் 14: சிலி-ஆஸ்திரேலியா (அதிகாலை 3.30)
ஜூன் 14: கொலம்பியா-கிரீஸ் (இரவு 9:30)
ஜூன் 15: உருகுவே-கோஸ்டா ரிகா (அதிகாலை 12.30)
ஜூன் 15: இங்கிலாந்து-இத்தாலி (அதிகாலை 3.30)
ஜூன் 15: ஐவரி கோஸ்ட்-ஜப்பான் (காலை 6.30)
ஜூன் 15: ஸ்விட்சர்லாந்து-ஈகுவடார் (இரவு 9.30)
ஜூன் 16: பிரான்ஸ்-ஹோண்டுராஸ் (அதிகாலை 12.30)
ஜூன் 16: அர்ஜென்டீனா-போஸ்னினா (அதிகாலை 3:30)
ஜூன் 16: ஜெர்மனி-போர்ச்சுகல் (இரவு 9.30)
ஜூன் 17: ஈரான்-நைஜீரியா (அதிகாலை 12:30)
ஜூன் 17: கானா-அமெரிக்கா (அதிகாலை 3.30)
ஜூன் 17: பெல்ஜியம்-அல்ஜீரியா (இரவு 9.30)
ஜூன் 18: பிரேசில்-மெக்ஸிகோ (அதிகாலை 12:30)
ஜூன் 18: ரஷ்யா-தென் கொரியா (அதிகாலை 3.30)
ஜூன் 18: ஆஸ்திரேலியா-நெதர்லாந்து (இரவு 9.30)
ஜூன் 19: ஸ்பெயின்-சிலி (அதிகாலை 12.30)
ஜூன் 19: கேமரூன்-குரேஷியா (அதிகாலை 3:30)
ஜூன் 19: கொலம்பியா-ஐவரி கோஸ்ட் (இரவு 9.30)
ஜூன் 20: உருகுவே-இங்கிலாந்து (அதிகாலை 12.30)
ஜூன் 20: ஜப்பான்-கிரீஸ் (அதிகாலை 3.30)
ஜூன் 20: இத்தாலி-கோஸ்டா ரிகா (இரவு 9.30)
ஜூன் 21: ஸ்விட்சர்லாந்து-பிரான்ஸ் (அதிகாலை 12.30)
ஜூன் 21: ஹோண்டுராஸ்-ஈகுவடார் (அதிகாலை 3.30)
ஜூன் 21: அர்ஜென்டீனா-ஈரான் (இரவு 9.30)
ஜூன் 22: ஜெர்மனி-கானா (அதிகாலை 12.30)
ஜூன் 22: நைஜீரியா-போஸ்னினா (அதிகாலை 3.30)
ஜூன் 22: பெல்ஜியம்-ரஷ்யா (இரவு 9.30)
ஜூன் 23: தென் கொரியா-அல்ஜீரியா (அதிகாலை 12.30)
ஜூன் 23: அமெரிக்கா-போர்ச்சுகல் (அதிகாலை 3.30)
ஜூன் 23: ஆஸ்திரேலியா-ஸ்பெயின் (இரவு 9.30)
ஜூன் 23: நெதர்லாந்து-சிலி (இரவு 9.30)
ஜூன் 23: கேமரூன்-பிரேசில் (அதிகாலை 1.30)
ஜூன் 24: குரேஷியா-மெக்ஸிகோ (அதிகாலை 1.30)
ஜூன் 24: இத்தாலி-உருகுவே (இரவு 9.30)
ஜூன் 24: கோஸ்டா ரிகா-இங்கிலாந்து (இரவு 9.30)
ஜூன் 25: ஜப்பான்-கொலம்பியா (அதிகாலை 1.30)
ஜூன் 25: கிரீஸ்-ஐவரி கோஸ்ட் (அதிகாலை 1.30)
ஜூன் 25: நைஜீரியா-அல்ஜீரியா (இரவு 9.30)
ஜூன் 25: போஸ்னினா-ஈரான் (இரவு 9.30)
ஜூன் 26: ஈகுவடார்-பிரான்ஸ் (அதிகாலை 1.30)
ஜூன் 26: ஹோண்டுராஸ்-ஸ்விட்சர்லாந்து (அதிகாலை 1.30)
ஜூன் 26: அமெரிக்கா-ஜெர்மனி (இரவு 9.30)
ஜூன் 26: போர்ச்சுகல்-கானா (இரவு 9.30)
ஜூன் 27: தென் கொரியா-பெல்ஜியம் (அதிகாலை 1.30)
ஜூன் 27: அல்ஜீரியா-ரஷியா (அதிகாலை 1.30)
காலிறுதிக்கு முந்தைய சுற்று:
ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை.
காலிறுதி ஆட்டங்கள்
ஜூலை 4 முதல் 5 வரை
முதல் அரையிறுதி: ஜூலை 9
2-வது அரையிறுதி: ஜூலை 10
3-வது இடத்துக்கான ஆட்டம்: ஜூலை 13
இறுதியாட்டம்: ஜூலை 14
No comments:
Post a Comment